Skip to main content

Posts

Showing posts from June, 2021

100 ஓட்டங்கங்கள்..

 "ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்.. தூங்கமுடியவில்லை, எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.. முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான். "நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்.. "சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்.. "என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.. "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன.. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்த

TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

    அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் கடந்த 20/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் (சுமார் 1500) செய்யப்பட்ட நிரந்தரமாக பணியிட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET லிருந்து விலக்கு கோரி கடந்த பத்து வருடங்களாக அரசிடம் பலமுறை அணுகியும் எங்கள் நிலை பற்றிய புரிதலும் வராமல், தீர்வும் செய்யாமல் மிகுந்த சிரமப்பட்டு பணியாற்றி வருகிறோம். தயவுசெய்து எங்களுக்கு நல்ல விடியல் செய்து தர மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயாவிடம் இந்த மனுவை அனுப்பி பரிந்துரை செய்து உதவுமாறு தங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகோள் விடுக்கிறோம்.நன்றி

அவமானப்படுங்கள்..

"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது.  *வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும்.*  இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும். *அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.* யார் நண்பர், யார் நண்பர் அல்லாதார், யார் நல்லவர்,  யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது?  என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத்  தெரியும். நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும்.  *வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.* *நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள்.* *வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள்.* இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமைப் படத்தொடங்குகிறார்கள் அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப் படுத்துகிறார்கள்.  *எப்போதும் வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் எதி

நீங்கள் வெற்றியை விரும்புகிறீர்களா?

நீங்கள் உங்களுடைய தொழில் அல்லது வேலையில் நுழைந்ததும் அது ஒரு மிகவும் போட்டி மிக்க கடுமையான சூழல் என்பதை உணர்வீர்கள்.  அதனைக் கடந்து செல்வது எளிது தான் என்றாலும், ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் விரைவாக முன்னேற எந்த ஒரு உத்திரவாதமோ அல்லது குறுக்கு வழியோ இல்லை என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் மூலம் நீங்கள் உழைத்த கடின உழைப்பிற்குத் தக்க பலன்களை உங்கள் சகபணியாளர்களை விட விரைவாகவே பெற முடியும். சார்ந்திருக்கக் கூடிய நம்பகத்தன்மை உங்களைச் சுற்றியிருப்பவர்களை குறிப்பாக உங்கள் மேலதிகாரி அனைத்திற்கும் தீர்வாக உங்களை நம்புமாறு நடந்து கொள்ளுங்கள்.  அனைவரும் தங்களுடைய தேவைகளுக்கு, உங்களை அதிகம் நம்புமாறு இருக்க விரும்புங்கள். உங்கள் வேலை பேசட்டும், உங்களை விட..  உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் பணிவு அல்லது அடக்கம் உங்களின் வெற்றிகளைப் பார்த்து மற்றவர்களை மேலும் மேலும் உங்களைப் பற்றிப் பேச வைக்கும்.  குறைவாக நீங்கள் பேசுவதால்,தவறான கருத்துக்களை நீங்கள் தவிர்க்க முடியும். அது உங்களை ஒரு நல்ல புத்தி

முதுகலை ஆசிரியர் தேர்வு 2021

 விண்ணப்ப பதிவு தொடங்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம்..

TODAY'S THOUGHT..

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. திருப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய வேட்டி நிறுவனம் அண்ணன் ராஜ்கிரணை தனது விளம்பரப் படத்தில் நடிக்க கேட்டது.  "எங்க வேட்டியை கட்டிக்கிட்டு நீங்க ஒரு 10 மீட்டர் நடந்தா போதும், மற்றதையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். சம்பளம் ஒரு கோடி" என்றது அந்த நிறுவனம். திரும்பிய பக்கம் எல்லாம் கடன் இருந்த போதும் அண்ணன் ராஜ்கிரண் அந்தக் கம்பெனி பக்கம் திரும்பி பார்க்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "எனக்கு தர்ற சம்பளத்தை மீட்க என் சகோதரன் வாங்குற வேட்டியில தானே விலை வைப்பீங்க, வேட்டி கட்டத் தெரிஞ்சவனுக்கு நல்ல வேட்டி பார்த்து வாங்கவும் தெரியும்"னு சொல்லிட்டாரு. சில்க் ஸ்மிதாவை ஒரு சோப்பு நிறுவனம் தனது விளம்பரப் படத்தில் நடிக்க அழைத்தது. அதற்கு அவர் "உங்க சோப்பைக் கொடுங்கள், நான் ஒரு மாதம் வரை உபயோகித்து பார்த்து விட்டு அப்புறம் நடிக்கிறேன்" என்றார். கம்பெனி அவருக்கு இருக்கிறதுலேயே நல்ல சோப்பாக கொடுத்தது, ஒரு வாரத்திலேயே சோப்பை அந்த கம்பெனி முகத்தில் விட்டெறிந்து விட்டு "வேற ஆளப் பாருங்க&quo

ஆயிரம் மாணவர்களை சேர்த்து அரசு தொடக்கப் பள்ளி சாதனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையினை அடுத்து உள்ளது குன்றத்தூர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எப்போதுமே பெற்றோர்கள் கூட்டம் வரிசையில் காத்திருக்கும். தனியார் பள்ளிகளையே மிஞ்சி நிற்குது இந்த அரசு பள்ளி. கடந்த ஆண்டு வரை 700 மாணவர்கள் படித்து வந்த நிலையில் இந்த ஆண்டு அது மேலும் அதிகரித்து மாணவர் சேர்க்கை ஆரம்பித்து ஒரு வாரத்திலேயே  ஆயிரம் மாணவர்களை சேர்த்து குன்றத்தூர் அரசு பள்ளி சாதனை செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை கொண்ட தொடக்கப்பள்ளி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இது குறித்த வீடியோ தொகுப்பு.... காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிக மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளி

உடைந்த காலம்..

*நட்பு உடைந்து முகநூலானது..*. *சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது.*.. *வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது.*.. *உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...* *குளக்கரை உடைந்து குளியலறை ஆனது..*. *நெற்களம் உடைந்து கட்டடமானது.*.. *காலநிலை உடைந்து வெப்பமயமானது..*. *வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...* *துணிப்பை உடைந்து நெகிழியானது..*. *அங்காடி உடைந்து அமேசான் ஆனது...* *விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...* *ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது...* *கடிதம் உடைந்து இமெயிலானது...* *விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...* *பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...* *புத்தகம் உடைந்து இ-புக் ஆனது...* *சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..* *இட்லி உடைந்து பர்கர் ஆனது...* *தோசை உடைந்து பிட்சாவானது...* *குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது...* *பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது...* *வெற்றிலை உடைந்து பீடாவானது...* *தொலைபேசி உடைந்து கைபேசியானது...* *வங்கி உடைந்து  பே டி எம் ஆனது...* *நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...* *புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...* *மார்க்கம் உடைந்து மதவெறியானது...* *அரசியல் உடைந்து அருவெறுப்பானது...* *ப

Welfare Department Counseling..

Welfare department counseling to be held on 30.06.2021  

அரசுப்பள்ளி மாணவனுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஓர் அங்கிகாரமாகவும் மேலும் மாணவனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் THE YOUNG RESEARCHER AWARD" எனும் மதிப்புமிக்க சான்றிதழினை வழங்கி கௌரவிப்பு

அரசுப்பள்ளி மாணவனுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஓர் அங்கிகாரமாகவும் மேலும் மாணவனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் THE YOUNG RESEARCHER AWARD" எனும் மதிப்புமிக்க சான்றிதழினை வழங்கி கௌரவிப்பு  அரசுப்பள்ளி மாணவனான ரியாஸ் முகமதுவின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஓர் அங்கிகாரமாகவும் மேலும்  மெருகூட்டி மாணவனின்  ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் - "SIVAKAMI ACADEMY (REG-1/2020)  மூலம் 2021 க்கான- 🏅🏅THE YOUNG RESEARCHER AWARD" எனும் மதிப்புமிக்க சான்றிதழினை  பெருமையுடன் ரியாஸ் முகமது என்னும் அரசுப்பள்ளி மாணவனுக்கு கிடைத்துள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

விடியல் நலமாகட்டும்..

நமக்கு வாழ்கை பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றது அதில் முக்கியமான ஒன்று தான் நாம் யார் யாரிடம் எவ்வாறு பழக வேண்டும் எந்த அளவோடு பழக வேண்டும் என்பது. உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவது புத்திசாலித்தனம் என்று நினைக்காதீர்கள் அது தான் துரோகத்தின் உச்சம். உங்களுக்கு தெரிந்த விடயங்களை மட்டும் மற்றவர்களுடன் பேசி பழகுங்கள் இது காலப்போக்கில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகப்படுத்தும். சந்தோஷமான நேரத்திலும் துன்பமான நேரத்திலும் நாம் நினைவில் வைத்திற்குக்க வேண்டிய ஒரு உண்மை இந்த நிமிடம் கூட நிரந்தரம் இல்லை. நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள். கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும். கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே தூக்கத்தை பறித்து விடும். ஒரு தவறை செய்தால் ஒத்துக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் தயங்காதீர்கள் அவற்றை சரி செய்து கொள்ள முடியும். ஆனால் செய்த தவற

2012 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு ஆசிரியர்கள் - பணியிட நிரப்புதலில் முன்னுரிமை கோரி வேண்டுகோள்!

  ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதலில் தற்போது TET நடைமுறையில் இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனால் கடந்த  2010 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் போது (சரியாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில்) அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார். அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இருந்த ஆசிரியப் பணி நாடுநர்களுக்கு 5:1 என்ற விகிதாச்சார ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி 2010 மே, ஜுலை, நவம்பர், டிசம்பர் & 2011 பிப்ரவரி, 2012 ஜனவரி என பல கட்டங்களில் CV எனப்படும் சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும், மாநில அளவிலும் நடைபெற்றன. பலருக்கு 5:1 விகிதத்தில் பணியும் கிடைத்தது. பொதுவாக 5:1 என்ற விகிதத்தில் ஒரு பணி நாடுனர் பெயர் வந்தாலே அடுத்தடுத்த CV க்களில் விரைவில் பணி கிடைக்கும் என்ற சூழலில் மீதமுள்ள அப்போதைய 5:1 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் சுமார் 11000  ஆசிரியக் குடும்பங்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருந்தன.  ஆனால் அடுத்தடுத்து

30 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணி நியமனம் இருக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணி நியமனம் இருக்க வேண்டும் , என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆசிரியர் நியமன கோரிக்கை நிராகரிப்பு நெல்லை ஐகிரவுண்டு பகு தியில் உள்ள ஒருமேல்நிலைப் பள்ளி தாளாளர் முகமது நாசர் , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது : எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் படிக்கின்றனர். 18 ஆசிரியர்கள் , 2 ஆசிரியர் கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். கடந்த 2019 - ம் ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 - ம் வகுப்புகளில் தமிழ் வழிப்பிரி வுக்கு இணையாக ஆங்கில வழிப்பிரிவு தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.  ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும் , எங் கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததைரத்து செய் யும்படியும் பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நிய மிக்க அனுமதி கேட்டும் பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் எங்கள் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்வ துடன் , ஆ

TODAY'S THOUGHT..

*ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இன்று இருக்கும் சமூகத்தில் ஒரு தனி மனிதனை நீ நல்லவனா , கெட்டவனா என்று கேட்பது முட்டாள் தனம்.* *இந்த சமூகத்தில் அனைவர்க்கும் நல்லவனாக இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்று .* *சுயநலம் , கோபம், பகை, துரோகம், பழி வாங்குதல், உதவி இன்மை, தவறாக புரிந்து கொள்ளுதல், குறுகிய மனம்,* *இது போன்று பல சூழ்நிலைகள் , இயற்கையாகவும், செயற்கையாகவும், நம்மை சுற்றி வளைக்கிறது. அப்படி இருக்கையில் வாழ்க்கையில் எப்படி ஒரு மனிதனால் அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியும்.....* *இந்த மாய உலகத்திற்கு கோடி கண்கள்.  எனவே அவை ஒவ்வொன்றும் பார்ப்பது தனி தனி பார்வை. எனவே அவை பார்ப்பவர் கண்களை பொறுத்தது.....* *""அது போல""* *நம் வாழ்க்கையில் அற்பம், அற்புதம், என்னும் ஆறு குணங்கள்.*    *மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்ணைத் தின்று,* *ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.   ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்.* *வேப்பமரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.....!!!* *நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.* *ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,   ஒர

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

  அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.                    

உங்களை நம்புங்கள்..

*உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.* *அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.* *உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்?* *நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும்.* *அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக் கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத்தில் மறைந்து இருந்தால்,அது தானாகவே அழிந்து விடும்.* *குடும்பப் பொறுப்புகள், பணியாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும்.* *பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர்கள்.* *தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பீர்கள்.* *பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேருகிற போது நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.* *நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத்* *தொடங்கினால் நீங்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை.* *மற்ற

FLASH NEWS..

 Madurai Highcourt has suggested Tamilnadu School Education Department to follow 30:1 ratio in teachers appointment.. ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும். நெல்லை ஹைகிரவுண்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவிக்கு மனுதாரரின் மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது என உயர்நீதிமன்ற கிளை ஆணை.

இன்றைய சிந்தனை..

*தனக்கு தேவையில்லாத எதையும் கடல் தனக்குள்ளே புதைத்து வைப்பதில்லை..!உங்களையும் உங்கள் இயல்பையும் சிதைத்து தள்ளும் கெட்டதை உங்களுக்குள்ளே வைக்காதீர்கள்....!!* *நாளையென்பது நாளையல்ல.. இன்றைய செயல்கள்தான் நாளைய பிரதிபலன் என்பதையும்.. வாழ்க்கையில் மறுவாய்ப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்!* *படித்து வாங்கிய பட்டங்கள் நடித்து வாழ்பவரின் முன்னே தோற்றுப் போகாது.. உழைத்து பெறும் வெற்றி, நிலைக்காமல் போகாது...* *ஆர்ப்பாட்டம் இல்லாத தென்றல் இனிமை தானே.. ஆணவம் இல்லாத மனிதமும் புனிதம் தானே...* *நல்ல புத்தகங்களோடும், நல்ல நண்பரோடும் நீங்கள் இருந்தால் தோல்விக்கு இடமில்லை.* *வாழ்க்கையில் இறைவன் நமக்கு கொடுத்திருப்பது வேற்றுக் காகிதம். அதில் எழுதுவதா, வரைவதா, கிறுக்குவதா, இல்லை கிழிப்பதா என்பது நம் கையில் தான்....* *ஆயிரம் சொற்களைவிட, ஒரு செயல் வலிமையானது.* *கனவுகளையும் லட்சியங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டாம். அதை அடையும் இலக்கை மட்டும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்..* *வலித்தாலும் வாழ்ந்துவிடுங்கள். அந்த வாழ்க்கையும் மண்டியிடும் ஓர் நாள்..உங்கள் தன்னம்பிக்கைக்காக...* *பிரச்ச

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு.

  தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு.   இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் , உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும் . அதே நேரத்தில் , தமிழ்நாட்டு மக்களுக்கு , குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் .  இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் , ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் , தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும். DIPR - TNLA - Governor Address -(Tamil)- Date - 21.06.2021.pdf

யார் மாற வேண்டும்..

அது தவறு, இது தவறு, அவர் தவறு செய்கிறார், இவர் தவறு செய்கிறார் என்று நாள் முழுவதும் யாராவது ஒருவரை குறை சொல்லியே வருகின்றோம்...... ஆனால் மற்றவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து கொண்டு தான் வருகின்றோம்.....!!!!! இதில் யார் செய்தது தவறு....? யார் மாற வேண்டும் என்பதே கேள்வி....!!!! எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறி விட முடியாது...... ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டுமென்றால்  முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்....!!!! எந்தச் செயலிலும் நாம் முன்மாதிரியாக இருந்தால் தான்..,. நம் சொல்லுக்கு மரியாதை இருக்கும்....!!!!! நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக ..,.. உலகத்தை எப்படியாவது மாற்றி அமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்....!!!! அது சாத்தியமல்ல... மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் .... திருத்த வேண்டியது நாம் தான் என்பது புரியும்....!!!! மாற்றத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் முதலில் தங்களிடமிருந்து தொடங்க வேண்டும்....!!! நாம் மாறினால் மொத்தச் சமூகமும் மாற வாய்ப்பு உருவாகும்....!!!! ஆம். முதலில் நாம் மாறுவோம்..... தானாகவே மக்கள் மாறுவார்கள்..... மாற்

ஜூலை 2 ஆவது வாரத்தில் 10 & 12 ம் வகுப்பு திறக்கப்பட வாய்ப்பு- காணொளி

    CLICK HERE TO VIEW THE VIDEO

அப்பா..

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ.. எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா.. அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினாயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்... ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!! கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும் அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..?? உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்.. நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்.. சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா... மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை நான் அறியாமல் யார் அறிவார்?? தாவணியின் நுனியினை பிசைந்தவாறு வண்ணம் உன் முன் நாணி நான் நிற்க.. உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய்

சாலையோரத்தில் காத்திருந்த ஆசிரியர்களிடம் காரை நிறுத்தி விசாரித்த முதல்வர்.

  சாலையோரத்தில் காத்திருந்த  ஆசிரியர்களிடம் காரை நிறுத்தி விசாரித்த முதல்வர்.

உங்கள் தொகுதியில் முதல்வர்-;திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தீர்வு காண்பது- சார்ந்த- வழிகாட்டுதல்கள்

  உங்கள் தொகுதியில் முதல்வர்-;திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தீர்வு காண்பது- சார்ந்த- வழிகாட்டுதல்கள்

இதுவும் கடந்து போகும்..

 நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.  எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது. வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?  வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில்

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆங்கில வழி வகுப்புகள்

    ஜூன் 18 அரசு பள்ளிகளில் கூடுதல் ஆங்கில வழி வகுப்புகளை துவங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. தனியார்பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயரும் மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இந்நிலையில்தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நேற்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுமேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் மற்றும் ஆங்கில வழி வகுப்புகளை துவங் குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண் ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

TODAY'S THOUGHT..

                சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான். நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான். அதனை கவனித்துவிட்ட ராமபிரான், அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்டபோது, தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங

அரசு பள்ளியில் மூன்றே நாட்களில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்!

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாட்களில் இருக்கைகளை தாண்டி 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அரசிடம் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை கேட்டுப் பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும்நிலையில், அரசு உத்தரவுப்படி ஜூன் 14 முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளன. தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்களும் 218 மாணவர்களும் இருந்தனர். அதே ஆண்டு புதிதாக தலைமைஆசிரியராக பொறுப்பேற்ற ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் 2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படி

"அரசுப் பள்ளிக்கு மாறுபவர்களுக்காக ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஸ்

  NEWSUPDATE | "அரசுப் பள்ளிக்கு மாறுபவர்களுக்காக ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஸ்