Skip to main content

Posts

Showing posts from March, 2022

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘

18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பழுதடைந்த 10 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. 5 ஆண்டு காலத்தில் 18 ஆயிரம் வகுப்பறைகள், ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட உள்ளோம். முதல் கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும். இதில் கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடங்கி இருக்கும்.

பிழைகள் பிழைக்கிறது!!

நேர்மையின் விலா எலும்புகள் சிற்சில நேரங்களில் நொறுங்கித்தான் போகிறது பாலெது கள்ளெதுவென இனங்காணலில் தவறிழைக்கிறோமோ என்னவோ? சட்டாம்பிள்ளைகள் நியாயத்தீர்ப்பெழுதும் என்பதில் ஐயப்பாடேதுமில்லை தவறிட வாய்ப்பே இல்லையென சொல்வதற்குமில்லை சேர்த்து வைக்கிற உழைப்புப்பெயரையெல்லாம் ஓர் நொடியில் பொடியாக்குகின்றன ஊடக வாய்கள். வாழ்க்கை எனும் ஓட்டத்தில் நிறைய நபர்களை சந்தித்திருக்கலாம்  நிறைய பேரை நண்பர்கள் ஆக்கியிருக்கலாம்  நிறைய பேரை தவிர்த்திருக்கலாம்  நிறைய பேரை   ஒதுக்கி இருக்கலாம்  நிறைய பேரை விலக்கி இருக்கலாம்  நிறைய பேரை உங்கள் தோல்  கொடுத்து தூக்கி நிறுத்தியிருக்கலாம்  ஆனாலும் எல்லா நேரத்திலும்  எல்லாரும் ஒரேமாதிரியாய் இருப்பார்கள்  என்று நினைப்பதுதான் மனிதனின் மிகப்பெரிய முட்டாள்தனம்., உண்மை வெல்லுமென பலகைகளில் தான் இப்போதெல்லாம் காண நேர்கிறது கோபங்கள் கையறு நிலைதனில் கிடந்திட வெட்கமின்றி வாசித்துத் தொலைக்கிறேன் பொய்களின் தலைப்புச் செய்திகளை ஓர் ஓரமாய் வக்கிரங்கள் சிரித்துக்கிடக்க யாருமறியாமல் அழுகிறது நிஜங்களின் கண்கள் இதோ பெருக்கெடுக்கும் என் பெருமூச்சிலேனும் அணைந்து போய்த்தொலையுமா அநியாயங்கள

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை..

    அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு பிறகு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை எனவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெறாத படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது, யூஜிசியின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது, மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள யு.ஜி.சி., இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பு என, தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன . குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளுக்காக ஏராளமான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட குரூப் -4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு குரூப் - 4 தேர்வு எப்போது நடைபெறும் அரசுப் பணியை லட்சியமாகக் கொண்ட இளைஞர்கள் காத்திருந்தனர். இந்தநிலையில், குரூப் - 4 தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

TODAY'S THOUGHT..

நாம் வாழ்வதற்குப் பிறந்தோம் என்று சொல்கிறோம். இந்த வாழ்க்கை என்றால் என்ன? இதை நாம் எப்படி அமைத்துக் கொண்டால் வெற்றி பெறலாம் என்ற வழிமுறைகளைத் தெரிந்து அதன்படி நாம் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது குடை போன்றது. அதில் வெயிலும், மழையும் உண்டு. மேடுகளும், பள்ளங்களும் கலந்தது தான் வாழ்க்கை.  இதில் சுகங்களை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் சலிப்பு ஏற்பட்டு விடும்.  சோகங்களை மட்டும் அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் தளர்ச்சி ஏற்பட்டு விடும்.  இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் ? என்று ஒரு அறிஞரிடம் கேட்டதற்கு செயல் விளக்கம் கொடுத்தார்.  மேஜையில் மூன்று கண்ணாடிக் குவளைகளை தண்ணீருடன் வைத்தார். அதற்குப் பக்கத்தில் மூன்று பொம்மைகளையும் வைத்தார்.  முதல் பொம்மை களிமண்ணாலும், இரண்டாவது பொம்மை பஞ்சாலும், மூன்றாவது பொம்மை சர்க்கரையால் செய்யப்பட்டவை.. *முதல் வகை மனிதர்கள்....* .................................... முதல் பொம்மையை எடுத்துத் தண்ணீரில் போட்டார். அது தானும் கலங்கி தண்ணீரையும் கலக்கி அசுத்தப்படுத்தி விட்டது.  இவர்கள் தன்னையும் கலக்கி மற்றவர்களையும் கலக்கி விடுவார்கள். இவர்கள் குழப்பவாதிகள், 

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -II க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ? ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -II க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ? ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் 

SUNDAY'S THOUGHT..

தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார். மன்னன் சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என சொல்லி விட்டு சென்றார். மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடு

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!- pdf

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!- pdf  Click here to download

PGTRB Answer Key Related Press Release by TRB!

    2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper உடன் வெளியிடப்படும் , தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேர்வர்கள் தெரிவிக்கும் முறை ( Objection Tracker ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் முற்றிலும் கணினிபடுத்துவதில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது. இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன் , தேர்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் ( View Your QP with candidate response ) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக விடைக்குறிப்புடன் Master Q.P , ( Tentative Key answers with Master Q.P

இன்றைய சிந்தனை..

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை. யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது... யானையின் எடையை எப்படி அறிவது..? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும்

அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

LIVE, LET LIVE..

ரஷ்யா-உக்ரைன் போரிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? *என்னுடைய 6 இலக்க சம்பளம்.* *எனது 3/4 BHK வீடு / பங்களா.* *எனது கார், எனது தொழில், எனது 50 ஏக்கர் நிலம் போன்றவை.* *என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இதெல்லாம் பாதுகாப்பானது... மற்றபடி எல்லாம் அழிந்து போக அதிக நேரம் எடுக்காது!* இன்று, *ரஷ்யா-உக்ரைன் போரில், குறைந்தது 2 மில்லியன்* *உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.* அவர்களுக்கு மற்ற நாடுகள் அடைக்கலம் கொடுத்தன... நமக்கு *ஒரு பக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் வங்கதேசம், கீழே இலங்கை, மேலே சீனா... நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தஞ்சம் புகுவதற்கு வேறு நாடு இல்லை.* எனவே வாழும் வரை யாரையும் ஏமாற்றாமல், சந்தோஷமாக வாழுங்கள். மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடுங்கள்....

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் ... தற்போது வெளியான Group-4 Notification தவறானது.....  TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு 

TNTET- 2022- ALL NEWS

TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு CLICK HERE #NOTIFICATION- Last date to Apply -13.04.2022 -  CLICK HERE CLICK HERE-LINK -2 #G.O -128-ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! CLICK HERE # ONLINE APPLY செய்வதற்கு முன்  தங்களது போட்டோ மற்றும் கையெழுத்து மாதிரி நகல் ஆகியவற்றை 10KP-30KP க்குள் உங்களது மொபைல் மூலமாக எளிமையாக மாற்றிக் கொள்ளும் வழிமுறை CLICK HERE- #Tn Tet Exam Online Apply/ மொபைல் மூலமாக தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?    CLICK HERE- TNTET- SYLLABUS-  CLICK HERE

எல்லாம் மாறும், உன் மனம் மாறினால்!!

*யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?* *யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?* *இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.* *சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?* *இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.* *உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...* *உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.* *அது மனதின் வேலை.* *உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.* *எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.* *சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.* *சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.* *அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.* *கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.* *வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.* *இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்த

A DETAILED VIEW ABOUT TRT SYLLABUS..

Friends click the below link for details.. For whom link is not opening check with the video below.. https://drive.google.com/file/d/1dBVg_xZ0h8npQz3svcB7oeak5AO3xm6B/view?usp=drivesdk அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித்தெரிவிற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதி மற்றும் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்தினை பற்றிய அறிவிக்கை .  TRB Teacher Post - Gazette PDF - Download here

FLASH NEWS..

 For candidates who still have doubt the syllabus published.. Go through the tv channels, its authentic news.. And date has nothing to do with this..

TRT SYLLABUS..

 Click the below link for pdf.. https://drive.google.com/file/d/1b00kYWyA4IsuFgebVPdYqU6ZBrSW4tyu/view?usp=drivesdk

TET - தகுதி தேர்வு பதிவில் சிக்கல்!

இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையில் விண்ணப்பிக்க முடியாமல், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தேர்வர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, மார்ச் 14ல், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் துவங்கியது. ஏப்., 13 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்புகளில், குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.அதேநேரத்தில், இந்த தகுதி மதிப்பெண்ணில், இட ஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத விருப்பம் உள்ள பட்டதாரிகள், விண்ணப்ப பதிவுக்

இன்றைய சிந்தனை..

 ஒரு இராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றார்.  அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றார்.  நேரம் போய்க்கொண்டே இருந்தது.  இவர் தள்ளி நின்றதால் இவருக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவரை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவர் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டார். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்&

ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சர் பேட்டி சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று மாலை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவது, தரமான கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் காலிப்பணியிடம் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கழிவறைகள் அமைப்பு, குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகள் தான் அதிகளவில் உள்ளது. தற்போது ஆசிரியர்களின் பணி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிந்தவுடன் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் அந்தந்த மாவட்ட முதன்ம

நம்மை_நாமே_செதுக்குவோமா..

*அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.*  *ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு. அதன்பின் அந்தக் கடைக் காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.*  *'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.*                                           *பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்தச் சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.* *அந்தச் சிலை கடைத்தெருவில் விலை க்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.*  *முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.*                                      *அந்தச் சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலை க்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்த

Minister's interview about TET and posting..

 

நூறு ஒட்டகங்கள்..

பிரச்சனைகளே இருக்கக் கூடாது என மனிதனாய்ப் பிறந்த யாரும்… ஏன்? உயிர்கள் ஏதும் நினைத்து விட முடியாது…  உயிர்களாகப் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதேதோ வழிகளில் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும்..  அதை யாரும் இல்லாமல் செய்ய இயலாது. ஆனால், மனிதனாய்ப் பிறந்த நாம் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தீவிரம் அமைகிறது.. வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்புக் குறைவே.. ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...சில பிரச்சனைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம்..  ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்... அனைத்துப் பிரச்சனையும் முடிந்தால் தான் நிம்மதியாகத் தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது.. பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் எனக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.... எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே ஒரு அறிஞர் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது  மாலை நேரம்.. அய்யா."நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்..பல பிரச்சனைகள்.

மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!!!

  by   மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!! CLICK HERE TO DOWNLOAD-EXCEL FILE

TODAY'S THOUGHT..

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த  “வரிசையில்”  நின்றுகொண்டிருக்கிறோம்.  நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.  நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை. நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.  எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள். தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.  பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.  நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள். உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள். சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள். சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.   சமாதானம் செய்யுங்கள்.  நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .  மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

  TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு  

News about posting..

ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

  தமிழ் நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) தகுதிகள்: தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு: குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500, தாழ்த்தப்பட்

துணிந்தபின் மனமே, துயரம் கொள்ளாதே..

ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை. தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை.  இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை. எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை.  எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன. சற்றே இதை கவனியுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள்.  மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  எல்லா முயற்சிகளும் பயனற்றவையே.  நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.              மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை இருள் பூசிய காடாக இருக்கலாம். ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம், கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலை முகடாக இருக்கலாம் வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்.  இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே செல்க

150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்! வாய்ப்பு! Click here to download proceedings