மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.. 'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்.. குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்.. மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்.. ரொம்ப உயரம் போலவே... ஏற முடியுமா என்னால்... மலையைச் சுற்றிலும் பல வழிகள்.. மேலே போவதற்கு... அமைதியான வழி.. ஆழ்ந்த தியானத்தி்ன் வழி.. சாஸ்திர வழி... சம்பிரதாய வழி.. மந்திர வழி.. தந்திர வழி.. கட்டண வழி.. கடின வழி... சுலப வழி... குறுக்கு வழி.. துரித வழி... சிபாரிசு வழி... பொது வழி.. பழைய வழி.. புதிய வழி.. இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா... அடேயப்பா....எத்தனை வழிகள்... ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி.. கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்.. 'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...' ஒதுக்கினர் சிலர்.. 'நான் கூட்டிப் போகிறேன் வா... கட்டணம் தேவையில்லை.. என் வழியி்ல் ஏறினால் போதும்.. எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...' என கை பிடித்து இழுத்தனர் சிலர்... 'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் உனக்குப்பதில் நான் போ