Skip to main content

Posts

Showing posts from November, 2021

முடியாதது ஏதுமில்லை..

மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக தூங்கச் செல்லுகிறோம்.  வீட்டிற்கு நிச்சயமாய்த் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.  ஆக, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.. அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால்,  ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார். பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்குத் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.  அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் செ

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து CEO உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து CEO உத்தரவு   CLICK DOWNLOAD

ஈர்ப்புவிதி_நன்றியுணர்வு..

"நமது எண்ணங்களின் விளைவு தான் நாம் வாழும் இன்றைய நிலை." நம்முடைய எண்ணங்கள் எப்படி உள்ளதோ அதன்படிதான் நம் வாழ்க்கையும் அமைத்துள்ளது என்பதை நம்முடைய முந்தைய கால அனுபவங்களைக் கவனிப்பதன் மூலமாகப் புரிந்துகொள்ளலாம்.   இதுவரை நமது எண்ணங்கள் எப்படி இருந்துள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய எண்ணங்கள் பெரும்பாலும் இவர்கள் ஏன் இப்படி உள்ளார்கள்? இது ஏன் இப்படி நடக்கிறது? நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நான் நல்லதைத் தானே நினைக்கிறேன் பிறகு எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்பது போன்ற எண்ணங்கள் தான் அதிகமாக ஓடியது/ஓடுகிறது. இதன் விளைவு தான் நாம் இன்று சந்திக்கும் பயம், கோபம், கவலை போன்ற மன அழுத்தங்கள் மற்றும் பல சிக்கல்களுக்கான காரணங்கள்.  இதைப் புரிந்துகொண்டு இதை அப்படியே மாற்றி சிந்திப்பது தான் இதற்கான சரியான தீர்வாக இருக்கும்.  முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்...? எல்லாம் நன்மைக்கே! எல்லோரும் நல்லவர்களே! நமக்கு நடக்கும் அனைத்தும் நமது நன்மைக்காகத் தான் நடக்கிறது. என்பது போன்ற எண்ணங்களை நமக்குள் நாம் உருவாக்க வேண்டும்.  இதுபோன்ற எண்ணங்களை நமக்குள் எப்படி நம்மால் உருவாக்க முட

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்

  தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவினால் அதன் எதிா்விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா். அதைத் தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த 25-ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறைச் செயலரிடமிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் ஒன்று வந்தது. புதிய வகை கரோனா தீநுண்மியான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியா்கள், விமான நிலைய அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த வகை தீநுண்மிகள் எளிதாகவும், விரைவாகவும் பிறருக்குப் பரவி விடும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது கரோனா தொற்றுக்குள்ளானோா் மற்றும் தடுப்பூசி செலுத்தியோரையும் அந்த வகை தொற்று தாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, அதற்கான ஆயத்த

Google Map..

நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லது திட்டுவதோ கிடையாது  என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி  , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை. அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும். நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை  அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல. இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது.. தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.  அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்ட

11 மாவட்டங்களுக்கு "Red Alert" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 11 கடலோர மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயமும் கடும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்கள

TODAY'S THOUGHT..

 *சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.* *மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.* *குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.* *அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.* *சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.சாது மெல்லச் சிரித்தார்.* *"சொல

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - இணைப்பு: மாவட்ட வாரியாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட பாட வாரியான பணியிடங்கள் எண்ணிக்கை!!   CLICK DOWNLOAD

இன்றைய சிந்தனை..

                  ஒரு கட்டுமான எஞ்ஜினியர்… 13-வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…! ஒரு முக்கியமான வேலை… கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…! செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்ஜினியர்...! போனை எடுக்கவில்லை...! என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...! அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை…! இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…! எஞ்ஜினியர் என்ன செய்வதென்று யோசித்தார்…! ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…! ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்…! ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை… என்ஜினியருக்கு மிகவும் கோபம்... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…! அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு…கொத்தனார் மும்முரமாக இருந்தார்…! எஞ்ஜினியர் பொறுமை இழந்து, ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார்…! அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு,

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!!! CLICK DOWNLOAD

அசௌகரியங்கள்..

கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், *’நான் கற்ற பாடம்’* என்ற தலைப்பில் *அவர் வாழ்க்கையில் கற்ற பாடங்களைப்* பற்றி எழுதியுள்ளார். அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில்  சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. *வேலைப்பளு அதிகம்* இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் *உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.* " ஏற்கெனவே என் பணிக்கு உதவியாளர் யாரையும் தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். *எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?"* என்கிற ரீதியில் சுமார் பத்து நிமிடம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் *’பிரச்சினை’* என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். *"நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய்.  பிரச்சினை என்றால் என்ன

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 71 லட்சமாக அதிகரிப்பு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

  அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுவை திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி நேற்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 66லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 71 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ, அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 புகார் எண் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தின் போன் எண்ணையும் பதிவிட வேண்டும் என தெரிவித்து இருக்கிறோம். இதில் வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது

எதார்த்தமான உண்மைகள் சில..

கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்., உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..! *(நம்ம ஊரு டிசைன் அப்படி)* 🔸கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !! *(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! *(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது!!! *(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!! *(மரணம் ஒரு முடிவு அல்ல... !)* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !! *(நிதர்சனமான உண்மை)* அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !! ஏன் இந்த கொடுமை..!!! *(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினை

ஆசிரியர் - மாணவர்கள் பணியிட நிர்ணயம் - ஆய்வு செய்ய இயக்குநர் உத்தரவு.

    தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021 இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகரட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 இன்படியும் , அரசாணையின்படியும் , ஒவ்வொரு ஆண்டும் காலமுறை தோறும் ( Perodically ) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 01.08.2021 இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1 முதல் 8 படிவங்களில் 01.08.2021 அன்று பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது சார்பாகவும் , மேலும் மேற்குறித்த படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு

  TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை ஏற்பாடு! தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் TRB தேர்விற்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது. TRB தேர்வு: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு அதற்கான அறிவிப்பு TRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு

தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் – அன்பில் மகேஷ்

* பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும் என அன்பில் மகேஷ் தெரிவிித்தார். மேலும்,  * மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும். * தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். * அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். * பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும். * பொதுத் தேர்வு என்பதால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது * கொரோனா தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இன்றைய சிந்தனை..

 முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை.. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை. "என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,” என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார். பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார். மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம். பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள

தொடக்கக் கல்வி - பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து அனுப்பிடக் கோரிய 15.11.2021 அன்றைய இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

  தொடக்கக்   கல்வி  -  பதவி   உயர்விற்கான   தேர்ந்தோர்   பட்டியல்   தொகுத்து   அனுப்பிடக்   கோரிய  15.11.2021  அன்றைய   இயக்குநர்   அவர்களின்    செயல்முறைகளில்   பார்வையில்   காணும்   செயல்முறைகளில்  "  முந்துரிமைப்   பட்டியலில்   திருத்தங்கள்   செய்தல் ,  விதிகளுக்கு   முரணாகப்   பெயர்களைச்   சேர்த்தல்   போன்ற   செயல்கள்   வருங்காலங்களில்   கண்டறியப்பட்டால்   சார்ந்த   அரசுப்   பணியாளர்  /  அரசு   அலுவலர்   மீது   கடும்   நடவடிக்கை   எடுக்கப்படும்   என்பதைக்   கவனத்தில்   கொண்டு    உரிய   முந்துரிமை  /  தேர்ந்தோர்   பட்டியல்களை   தயார்   செய்து   வழங்க   தெரிவிக்கப்பட்டுள்ளது ".  கூடுதல்   விபரங்களுக்கு   செயல்முறைகளை   பதிவிறக்கிப்   படிக்கவும் . CLICK HERE TO DOWNLOAD-

1000..

 கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்க

மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் வழிமுறைகள் வெளியீடு.

    01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்த அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு. மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது 01.08.2019 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டதைப் போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. DSE - PG Teachers Panel List Proceedings - Download here...

சந்தோஷ விதி(law of happiness )..

நாம் சமூகத்திற்கு, அடுத்தவற்கு, இயற்கைக்கு என்ன கொடுக்கிறோமோ, அதுவே சமூகம் நமக்கு தருகின்றது. நன்மை கொடுத்தால் நன்மை கிடைக்கும். தீமை கொடுத்தால், தீமை நல்கும். ஆகவே எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விரும்பினால் பிறர்க்கு எப்போதும் நன்மையே செய்யுங்கள். பிறரும் உங்களுக்கு நல்லதையே வழங்குவார்கள். வாழக்கை இனிமையானதாக மாறும்.   மகிழ்ச்சியாக இருக்க, 20 வழிகள் ! 1. *எல்லோரையும் கொண்டாடுங்கள்!* உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. . நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. . உங்களை சுற்றியிருக்கும் எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.. 2.*நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!*   மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும். 3. *கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!*  “வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது”  நீங்கள் ப

01.08.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: கணக்கீட்டு படிவம்!!!

    01.08.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: கணக்கீட்டு படிவம்!!! CLICK HERE TO DOWNLOAD-DIR.PRO CLICK HERE TO DOWNLOAD-SATFF FIXATION SHEET

TODAY'S THOUGHT..

*நாம பல சமயங்களில் உணவிற்காக தான் உழைக்கிறோம் என்பதை உணராமல் உண்ணாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.* *சில பேர் கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியைக்கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.* *பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை விட, பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது.* *சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை.* *சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு, பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்.* *சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள். பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.* *சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும், பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.* *நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில், ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.* *குளிரில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.* *கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும், கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் வறுமையான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.* *இத்தகைய சூழ்நிலையில், நாம் ஒரளவு மேன்மையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து, இந்த

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின் அலகு விட்டு அலகு மாறுதல்

மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலகு விட்டு அலகு மாறுதல் கோரிய விண்ணப்பங்கள் மீது - பதில் வழங்குதல் - சார்பு. பார்வை:- முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் கடித ஓ.மு. எண்.012591/இ3/2021 நாள்.10.11.2021. உடன் இணைக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து (மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட) 08.11.2021 நாளன்று பெறப்பட்ட மனு எண்.012595 பார்வையில் காண் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ள மனுவில், கோவை மாநகராட்சி பள்ளி 39 ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பட்டதாரி / முதுகலை ஆசிரியர்களாக (பெரும்பாலும் பெண் ஆசிரியர்களாகவும்) பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாலும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் / மனைவி குழந்தைகள் மற்றும் வயதான உடல்நிலை இயலாத பெற்றோர்களை கவனிக்க இயலாததாலும் பல்வேறு மன அழுத்தங்களுக்கிடையே பணிபுரிந்து வருவதாலும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு, அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் மற்றும் பொதுமாறுதலில் கலந்து கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். 2021-2022-ம் கல

இந்த நிலை மாறும்..."

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை. மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான். “வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான். இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான். மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான். சில வருடங்கள

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு.

  புதிய விதிகளின்படி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நவம்பரில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வழக்கமாக ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். அதன்படி ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. பூஜ்ஜிய கலந்தாய்வு அதன்படி, இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மாவட்டக்கல்வி அதிகாரிகள