Skip to main content

Posts

Showing posts from August, 2021

புத்தியை தீட்டு..

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!.. நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை. மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான். மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான். நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்

ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

    பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா் பயிற்றுநா்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளா் காகா்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியா் பயிற்றுநா்களை பட்டதாரி ஆசிரியா்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும், தற்போது தோவு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியா் பயிற்றுநா்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014-ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சோந்த 500 பட்டதாரி ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும், பணி இடங்களுக்கு பாட வாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும்

புதிய கல்வி கொள்கையின்படி பல்கலை, ஐஐடி பாடத்திட்டம்: இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்

  ஒன்றிய அரசு தயாரித்து அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை மீது பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும், அதன் மீது பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்து கேட்டு அதற்கு பிறகே புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் பேரில் தற்போது புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி, தங்களுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் பல்வேறு பல்கலைக் கழகங்களும், ஐஐடி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வரும் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொண்டால், மத்திய பல்கலைக் கழகங்கள், முதுநிலைப் பட்டப் படிப்பில் தொழில் படிப்புகள் அல்லாத, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் நேரடியாகவே சேரும் வகையில் ஒரு புதிய முதுநிலைப் பட்டப் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

TODAY'S THOUGHT..

சிலர் பேசும் போது மத்தவங்களுக்குப் புரியுதா? புரியலையா? அப்படிங்கறதப் பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதைப் பாதியிலேயே நிறுத்திடுவாங்க.  அதனால, மத்தவங்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேசணும். அப்ப தான் நமது பேச்சை விரும்பிக் கேட்பாங்க. ஒரு தலைச்சிறந்த ஆன்மீகப் பேச்சாளர் இருந்தார்..பல பட்டங்கள் பெற்றவர்.. தத்துவங்களை கரைத்துக் குடித்தவர்.. அவரை ஒரு ஊரில் சொற்பொழிவு ஆற்ற  கூப்பிட்டு இருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் அவரிடம் சொல்லி இருந்தார்கள். அவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரர் சென்றிருந்தார். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை.  கூட்டம் ரத்து ஆகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்று விட்டார்கள். பேச்சாளர் வந்த போது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் செய்து வந்த பேச்சாளருக்கு பெருத்த ஏமாற்றம்.. இருக்கிற குதிரைக்காரருக்காக மட்டும் பேசலாம் என்றால் மனசு இல்லை.'குதிரை வண்டிக்காரரைப் பார்த்து ''என்னப்பா செய்யலாம்?’னு கேட்டார். அய்யா! நான் குதிரைக்காரன்..

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு நீக்கபடுமா? 45 வயதை கடந்த பட்டதாரிகள் எதிர்பார்ப்பு - The hindu tamil news paper

 

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

   

இன்றைய சிந்தனை..

தவறுவது, தவறில்லை... தவறுகளில் இருந்து கற்று கொள்ள தவறுவதே தவறு... எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி.... எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்.. எனவே, நாம் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய்  இருப்போம்... எதையுமே யோசிக்காமல் சில நேரங்களில் சிலர் கோபப்படுவது...  உரிமையின் வெளிப்பாடு... எல்லாமே யோசித்து எதுவுமே பேசாமல் மெளனமாய் இருப்பது...  உறவு நிலைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு... மனசு சரியில்லை என்ற எண்ணம் தோன்றும் போது, மனம் சரியாக இருக்கிறது என்றே அர்த்தம்... ஏனென்றால் எப்போதும் மனது தன் தவறை மறைத்து, யார் மீதாவது குற்றம் சாட்டுவதில் மிகவும் வல்லமை படைத்தது... முள்ளை மிதித்து விட்டேன் என்ற உண்மையை மறைத்து, முள் தேடி வந்து குத்தியதுபோல முள்ளு குத்திவிட்டது என்றே சொல்லும்... அதே போல தன்னிடம் இருக்கும் குறை, புரிதலில் வேறுபாடு போன்றவற்றைக்  கூட  ஒத்துக் கொள்ளாது... யார் கிடைப்பார்கள் அவர்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டு விடலாம் என்று இருந்து, உன்னிடம் இருக்கும் குறையை உனக்கே மறைப்பதில் மனத்தின் வல்லமை அதிகம்... ஆனால்... தான்தான் சரியில்லை  என்று மனம் எப்போதாவது ஒத்துக் கொள

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு பணியாளர் நிர்ணயம் உரிய ஆய்வு அலுவலர்களால் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது , அதேபோன்று 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்து உரிய ஆணைகள் வழங்கப்படவேண்டும் . அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் நெரிமுறைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்படுகிறது , மேலும் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இப்பணியினை முடித்து உரிய ஆணைகளை வழங்குவதை உறுதி செய்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மூங்கிலும், முட்புதரும்..

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” “ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். “நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை. இரண்

G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES

    பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழுள்ள மாநில , மாவட்ட , திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் பயிற்றுநர்கள் ஆணை பணிமாறுதல் வெளியிடப்படுகிறது. குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது. ஆணை : மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் வகுத்து ஆணைகள் வெளியிடப்பட்டன . இவ்வாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . 2 மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான உரிய நெறிமுறைகள் பிறப்பிக்குமாறு திரு . K. சம்பத் மற்றும் 6 பேர் , சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் .27085 / 2019 - ல் வழக்கு தொடர்ந்தனர் . இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனத

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’- சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியது: பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்துவது பற்றிபேரவைத் தலைவர் கூறியிருக்கிறீர்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்தீர்கள். அரசுப்பள்ளிகளில் 8, 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களால் ஆங்கிலத்தில் பேச முடிவது இல்லை. பள்ளிக்கூட நேரத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தினால், வழக்கமான பாடத் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும், 9, 10, 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் பள்ளி நேரம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். பேரவைத் தலைவர் அப்பாவு:இது நல்ல அறிவிப்பு. தமிழக மக்கள் சார்பாக நன்றி. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரைதமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசத் தெரியாமல் இருந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள். அதற்காக முதல்வருக்கும், உங்களுக்கும் நன்றி. அமைச்சர்: மனப்பாடம் செய்துதேர்வில் வெற்ற

TODAY'S THOUGHT..

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது. மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான். பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார். அவரை பார்க்க வந்

இந்த கல்வியாண்டில் 2,098 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இந்த கல்வியாண்டில் 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். முதுகலை ஆசிரியர்கள்: தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சென்னையில் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் சட்டப்பேரவை விவாதம் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார். மேலும் தேசிய மாணவர்கள் சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு ஆகும். மேலும் கொரோனா பரவல் காரணாமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்படுகின்றன. அதனால் உயர்கல்வி மாறி வரும் சூழல் மற்றும் தொழில்நுட

பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!

  பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 - மானியக் கோரிக்கை எண் 43 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு. தனிமனிதனின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் பள்ளிக் கல்வியே அடித்தளமாக விளங்குவதால் , மாணாக்கரின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது . பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது . ஒவ்வொரு மாணாக்கருக்கும் தரமான கல்வியை வழங்கி முழுமையான வளர்ச்சியை அளிப்பதே தொலை நோக்குப் பார்வையாகும் . மாணவர்களுக்குப் அறிவோடு வாழ்வியல் திறன்களையும் அளித்து அன்றாட வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் தகுதி உள்ளவர்களாக உருவாக்குவதில் நமது கல்வி அமைப்பு கவனம் செலுத்துகிறது .  அரசின்  நோக்கங்கள் : முழுவதும் படிக்க கீழ் உள்ள இணைப்பை பபதிவிறக்கம் செய்யவும்.... Maniya korikai 2021 - 2022 | Download here...

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.

  ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கொள்கை : அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக , ஆண்டுதோறும் பொதுமாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி 2021 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என இன்று வெளியிடப்பட்ட பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிந்தனை..

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன. தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. "ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீ

அரசு பள்ளிகளின் ஆற்றலை மீட்டெடுக்க வேண்டும்: கல்வியாளர்கள் கருத்து

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவுக்கு சிஇஓவே அங்கீகாரம் வழங்கலாம்: கூடுதல் அதிகாரம் வழங்கி ஆணையர் உத்தரவு.

  தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சுயநிதி பள்ளிகளும் முழுமையாக ஆங்கில வழிப்பிரிவுக்கு மாறி வருகிறது. ஆங்கில வழிப்பிரிவு தொடங்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால் அங்கீகாரம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுக்கு அந்தந்த மாவட்ட சிஇஓக்களே அங்கீகாரம் வழங்கும் விதமாக, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுயநிதி, நிதியுதவி, பகுதி நிதியுதவி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள், சம்ப

அனைத்தும் அவர் அறிவார்..

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது. மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான். அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன. அவன் உரக்கச் சிரித்தான். முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார். கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன். கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார். இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை  விடுத்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை மாற்றப்பட்டு, டெட் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பாமக  நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது: ''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்பட உள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த 10ஆம் தேதி கோரிக்க

எதுவும் நிரந்தரமில்லை..

இங்கே பல துயரங்களுக்குக் காரணம்..எல்லாமே நிரந்தரம் என எண்ணிக் கொள்வது தான்..... ஒரு துன்பம்..ஒரு பிரச்சனை வந்து விட்டால் போதும்... எல்லாவற்றையும் வெறுத்து அப்படியே ஜடம் போல்  ஆகி விடுகிறார்கள்.... சாப்பிடப் பிடிக்காது.. தூக்கம் வராது.. யாரோடும் மனமொத்துப் பேச முடியாது. எப்பொழுதும் எதையோ இழந்தது போல் சோகக் காட்சி தான்.... இங்கே நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துக்கங்கள் எப்படி நிரந்தரமில்லையோ,... அதுபோல நிலையற்ற இந்த உலகில் நிலையானது.. நிரந்தரமற்றத் தன்மையே... இன்று ஆயிரம் ரூபாயைத் தொலைத்து விட்டால்.. எல்லாமே முடிந்ததா என்ன... நாளையே கூட... புதிய வருமானங்கள் வந்து சேரலாம்.. புதிய வாய்ப்புகள். எதிர்பாராத சொத்துக்கள் வந்து சேரலாம்..இங்கே எல்லாமே எதிர்பார்ப்பு தான்..... எதிர்பார்த்தலில் தான் நம்பிக்கையோடு காலம் நகர்கின்றது.... இந்த நிமிடத்திற்கும்... அடுத்த நிமிடத்திற்கும் இடையே எது வேண்டுமானாலும் நடந்தேறி விடலாம்.... ஒரு எதிர்பார்ப்போடு, ஈர்ப்போடு,ஆனந்தமாக. உற்சாகமாக,அடுத்து என்ன ..அடுத்து என்ன... என்ற உந்துதலோடு. நமது அன்றாடக் கடமைகளை... ஒரு சஸ்பென்ஸ் நாவல் படிப்பது போல்.. அட்டகாசமாக வாழ்க்

G.O -128-ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!

CLICK HERE-TET - Lifetime Validity-PDF