Skip to main content

எதுவும் நிரந்தரமில்லை..

இங்கே பல துயரங்களுக்குக் காரணம்..எல்லாமே நிரந்தரம் என எண்ணிக் கொள்வது தான்.....


ஒரு துன்பம்..ஒரு பிரச்சனை வந்து விட்டால் போதும்... எல்லாவற்றையும் வெறுத்து அப்படியே ஜடம் போல்  ஆகி விடுகிறார்கள்....


சாப்பிடப் பிடிக்காது.. தூக்கம் வராது.. யாரோடும் மனமொத்துப் பேச முடியாது. எப்பொழுதும் எதையோ இழந்தது போல் சோகக் காட்சி தான்....


இங்கே நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துக்கங்கள் எப்படி நிரந்தரமில்லையோ,... அதுபோல நிலையற்ற இந்த உலகில் நிலையானது.. நிரந்தரமற்றத் தன்மையே...


இன்று ஆயிரம் ரூபாயைத் தொலைத்து விட்டால்.. எல்லாமே முடிந்ததா என்ன... நாளையே கூட... புதிய வருமானங்கள் வந்து சேரலாம்..


புதிய வாய்ப்புகள். எதிர்பாராத சொத்துக்கள் வந்து சேரலாம்..இங்கே எல்லாமே எதிர்பார்ப்பு தான்..... எதிர்பார்த்தலில் தான் நம்பிக்கையோடு காலம் நகர்கின்றது....


இந்த நிமிடத்திற்கும்... அடுத்த நிமிடத்திற்கும் இடையே எது வேண்டுமானாலும் நடந்தேறி விடலாம்....


ஒரு எதிர்பார்ப்போடு, ஈர்ப்போடு,ஆனந்தமாக.

உற்சாகமாக,அடுத்து என்ன ..அடுத்து என்ன... என்ற உந்துதலோடு. நமது அன்றாடக் கடமைகளை... ஒரு சஸ்பென்ஸ் நாவல் படிப்பது போல்.. அட்டகாசமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமே அல்லாமல் கவலைப்பட்டு இருக்கக் கூடாது..


எதற்காக இந்தக் குறுகிய கால வாழ்க்கையில் எப்பவும் ஒரே சோக வயலின் இசைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டு... கண்ணீர் விட்டுக் கொண்டு வாழ வேண்டும்.?


ஆற்றில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டு இருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.


அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.


ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.


அங்கு இருந்த ஒரு பெரியவர்,”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததைப் பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?” என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.


பெரியவர் சொன்னார், ”அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.

ஆற்றில் கைத்தடி மிதந்து வந்தது.

இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.


அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்து இருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா? ” என்றார்.


வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.


ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் அது தான் காரணம்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
    BE HAPPY

    ReplyDelete
  3. tet சான்றதழ் ஆயுள் வரை செல்லும்-அரசானை வெளியீடு

    ReplyDelete
  4. 2011 முதல்
    puthiya thalaimurai news

    ReplyDelete
    Replies
    1. ஒரு பிரோயோஜனமும் இல்லை

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் : தமிழக அரசு அறிவிப்பு

    ReplyDelete
    Replies
    1. மதிப்பெண் அதிகம் வேண்டும் என்பவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம்

      Delete
    2. மீண்டும் தேர்வு எழுதி என்ன பண்றது

      Delete
    3. Mark score பண்ணிக்கங்க, tet mark +Employment seniority mark ல பணிநியமனம் செய்வாங்க னு அர்த்தம்

      Delete
    4. அது எப்படி சீனியர்ட்டி தான் வரும்னு சொல்றிங்க

      Delete
    5. ஆள் ஆளுக்கு ஒன்னு சொல்றிங்க

      Delete
    6. TET mark ku
      important kudukkuraanga.
      So,TRT irukkaadhunu thonudhu.
      Idhu ennoda thanippatta karuthu.

      Delete
  7. Mam appo trt exam or employment seniority yah சீக்கிரம் நமக்கு தெரிந்து விடும் , வாழ்நாள் சான்றிதழ் கொடுத்தது மகிழ்ச்சி தான் ஆனால் அதைவிட மகிழ்ச்சி அனனத்து ஆசிரியர்களும் எதிர்பார்த்த மாதிரி எந்த முறையில் பணிநியமனம் நடைபெறும் என்ற கேள்விக்கு விரைவில் ஒரு முடிவு கிடைத்துவிடும் தோன்றுகிறது.....(விரைவில்_என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு அனைத்து ஆசியர்களும் மன்னிக்கவும் நமக்கெல்லாம் பிடிக்காத ஒரே வார்த்தை விரைவில்.....)அப்ப இருந்த கல்விஅமைச்சரும் இப்போ இருக்க கல்வி அமைச்சரும் இந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      Ama, government oru decision eduthu dhan aganum.. Inimelachum namakku ellam edho oru nalladhu nadakkumnu nambuvom..

      Delete
  8. இது ஏற்கனவே எதிர்பார்த்த விஷயம் தான

    ReplyDelete
    Replies
    1. இதை தான் தற்போது உள்ள முதல்வர் சொன்னது....
      சீனி சக்கர சித்தப்பா...
      சீட்ல எழுதி நக்கப்பா....

      சீட்னா டெட் செர்டிபிகேட் தான்...
      இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல...

      Delete
  9. First posting podunga, central government already announced pannathu than, first neenga sollala, okay epo pass panna ellarum, entha method la posting nu sollunga, niyamana thervu vacha first syllabus sollunga, or Tet with employment seniority la fill pannunga, pass panna yarachum posting pokattum, summa avanga mathri neengalum, 8 +5 years kalatha ottathinga

    ReplyDelete
  10. Very happy news..Soon something good will happen for all of us🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

    ReplyDelete
  11. இனியாவது கண் திறக்குமா அரசு?
    கருணை காட்டுமா நமக்கு?

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா நம்பறீங்க...
      27ந்தேதி அல்வா ரெடி...
      அன்பில்லா சுரேஷ் அல்வா கடை
      H.O.திருச்சி
      கிளை கோபிச்செட்டிப்பாளையம்

      Delete
    2. 26; date change pannathu kuda ungalukku therila

      Delete
  12. Today had a chance of attending HM's meeting regarding reopening of schools. There CEO's PA was saying about how hardworking teachers are, that is its because of teachers only they were able to conduct unit test since question papers were prepared by teachers. She thanked teachers. That time she also said even for TRB many teachers are still working. She mentioned it as TRB's confidential work means question paper preparation. So very soon we can expect all the pending exams.

    ReplyDelete
    Replies
    1. Then soon pgtrb and polytechnic exam will come

      Delete
    2. ஒரு வழியா பீஜி வரப்போகுது

      Delete
    3. PG Teachers take question only for TET....

      Delete
  13. ஆமாண்ணே...
    பேசாம டெட் பாஸ் பண்ணவங்க எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சா என்ன???
    "டெட் பாஸ் முன்னேற்றக் கழகம்"
    இல்லனா "டெட் திராவிட முன்னேற்றக் கழகம்" இல்லனா நீங்க சொல்ற மாதிரி 🤔🤔🤔

    ReplyDelete


  14. TET தேர்வு ஆயுட்கால சான்றிதழுக்கு, ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தனியாக சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று TRB விளக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா டிஆர்பி தர்மபிரபு நீங்க இன்னும் உயிரோட தான் இருக்கிங்களா

      Delete
  15. சான்றிதழ் தவிர என்னத்த கண்டோம்

    ReplyDelete
  16. இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன!

    ReplyDelete
    Replies
    1. K T ராகவன் தம்பியா நீ

      Delete
    2. இல்ல அவங்க அண்ணன்

      Delete
    3. பொது வெளியில் நாகரியமான வார்த்தையை பயன்படுத்தி பழகு,

      Delete
    4. நா கவுண்டமணி டயலாக் தான் சொன்னேன். உங்களுக்கு மனசுல இருக்க அழுக்குக்கு நான் பொறுப்பு இல்ல

      Delete
    5. நல்லவன் மாதிரி நடிக்கரியா, அவன் கூத்தாடி, நீ ஆசிரியர் பாத்து, போக்ஸோ ல கைது பண்ணிட போறாங்க

      Delete
    6. ஆசிபா ஞாபகம் இருக்கா? போங்க சார் போய் வேலைய பாருங்க. பொறுக்கிங்க கிட்டயும் பாயட்டும் உங்க போஸ்கோ.

      Delete
    7. ஆசிபா ரேப் case ல குற்றவாளிகள் அனைவரும் ஜெயில் தான் இருகாங்க, நிருபாய case ல 4பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்து தூக்குல போட்டுட்டாங்க, உன்னுடைய நடிப்பை பாத்துட்டு தான் இருக்கோம்

      Delete
    8. எத்தன வருஷம் கழிச்சு தூக்குல போட்டாங்கன்னு எனக்கும் தெரியும். ஜெயில்ல இருந்தா ஆசிபா திரும்பி வந்துருவாளா?? ஹாசினி என்ன ஆச்சு? ஒரு பொண்ணுக்கு தான் தெரியும் அதோட வலி. வடிவேல் டயலாக் மாதிரி கவுண்டமணி டயலாக் சொன்னதுக்கு ஓவரா பேசுறிங்க. இவ்ளோ நாள் கோமால இருந்துருப்பிங்க போல. ஆளும் மண்டையும்.

      Delete
  17. ITHU maniya korikkai vivathathil yarum kelvi kekka koodathu enra konathil vidapattatho ena doubt varuthu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here