Skip to main content

Posts

Showing posts from August, 2019

நம்பிய_பேருக்கு_ஏது_பயம்..

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.! அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்..! அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது..! ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை..! ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்..! 'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்..! நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்..! ''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.! ''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.! ''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட

மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை

மதுரை, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பை இந்திய அளவில் பெற்ற மூவரில் ஒருவரான மதுரை மாணவி தான்யா தஸ்னிம், 'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' என்றார்.'கோ 4 குரு' என்னும் அமைப்பு இந்திய அளவில் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியை இணையதளம் மூலம் நடத்துகிறது. வெற்றி பெறுவோரை 'நாசா' விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லும். நடப்பாண்டிற்கான போட்டியில் 11 ஆயிரத்து 700 பேர் பங்கேற்றனர். முடிவில் மூவர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த தான்யா தஸ்னிம் 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் ஒருவர். இவரது தந்தை ஜாபர் உசேன் டீக்கடை வைத்துள்ளார். தாயார் சிக்கந்தர் ஆசிரியை. தான்யா தஸ்னிம் கூறியதாவது:சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது அதீத காதல் உண்டு. 5ம் வகுப்பிலேயே எனது கதாநாயகனாக அப்துல்கலாமை தேர்ந்தெடுத்தேன். புத்தகங்கள் மூலம் அவரை ஆழமாக படித்தேன். இதனால் விண்வெளி அறிவியல் மீது ஈடுபாடு ஏற்பட்டது. 'கோ 4 குரு' அமைப்பு நடத்திய போட்டியில் பங்கேற்று 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும்

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை

பள்ளிக்கல்வித்துறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்ட சிஇஓ, 50 டிஇஓக்கள் உள்பட 100 அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

நாராயணசாமி..

*மதுரை ஒத்தக்கடைல ஒரு சின்னப்பையன் இருந்தான் . அவன் பெயர் நாராயணசாமி.* *க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் நாராயணசாமி.* *படிப்புல எல்லாருக்கும் பின்னால இருந்தாலும் அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. . சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்....* *சங்கடத்தோட அவனோட அம்மா ஒத்தக்கடையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.* *25 வருஷத்துக்கு அப்புறம்.....* *பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.* *எல்லா டாக்டர்களும் பரிசோதித்தார்கள். அவர்கள் கூறினார்கள். நீங்கள் கிரிட்டிக்கல் சிச்சுவேஷனில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்.....* *அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.* *ஹெட்மாஸ்டரை வென்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.* *ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்..... எதிரே அழகான இளவயது டாக்டர் தன்முன்னில்.....* *தன் உயிரை காப்பாற்றிய

தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? - முனைவர் மணி கணேசன்

அண்மையில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 2340 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உதவிப் பேராசிரியர்கள் நிரப்பும் பணி சான்றிதழ் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டுக் கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு முறையில் முதலாவதாகக் கல்வித்தகுதிச் சான்றிதழ்களுக்கு ஒன்பது மதிப்பெண்ணும் பணிஅனுபவத்திற்குப் பதினைந்து மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு இரண்டாவதாக நடக்கும் நேர்முகத் தேர்விற்குப் பத்து மதிப்பெண் என மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சேதி எதுவெனில் குறிப்பிட்ட துறையில் அவர்கள் காட்டிவரும் தனித்திறன்கள், படைப்புகள், பரிசுகள், விருதுகள் முதலியன கவனத்தில் கொள்ளப்படும் என்கிற விவரம் சுட்டப்படவில்லை. இதைப் பற்றி இங்குப் பேசுவதற்கு உரிய காரணமும் இருக்கிறது. மேல்நிலைக்கல்வி என்பது அறிவாற்றலுக்கான ஓர் உந்து சக்தி. கல்லூரிக்கல்வி என்பது முற்றிலும் அதிலிருந்து வேறுபட்டது. வெறும் பாட அறிவு மட்டும் அதற்குப் போதாது. அதனைத்தாண