Skip to main content

Posts

Showing posts from September, 2022

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

SUNDAY'S THOUGHT..

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இன்பம், துயரம் போன்றவை வரவே செய்யும். இது இயற்கை. மேடு,பள்ளங்கள் இருப்பது போல மனிதனுக்கும் இன்ப, துன்பம்  இரண்டுமே மாறி மாறி வருவது இயல்பு. மின்சாரத்தில் ''positive, negative'' என்ற இரண்டும் இருந்தால் தான் ஒளியை நாம் பெற முடியும். இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி,தோல்வி என அனைத்தும் கலந்திருப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தால் கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது. பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், ‘’அவங்களுக்கே என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க.’’. என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு. ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளைக் கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்து இருக்க மாட்டோம். அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆ

PGTRB - முதற்கட்டமாக தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு!

PGTRB - முதற்கட்டமாக வரலாறு, புவியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு! 2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாசி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.  25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் பணிநாடுநர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது . பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்..

 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும், அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நிதழாண்டில் 2, 955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவா் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் த