Skip to main content

SUNDAY'S THOUGHT..

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இன்பம், துயரம் போன்றவை வரவே செய்யும். இது இயற்கை.


மேடு,பள்ளங்கள் இருப்பது போல மனிதனுக்கும் இன்ப, துன்பம்  இரண்டுமே மாறி மாறி வருவது இயல்பு.


மின்சாரத்தில் ''positive, negative'' என்ற இரண்டும் இருந்தால் தான் ஒளியை நாம் பெற முடியும்.


இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி,தோல்வி என அனைத்தும் கலந்திருப்பது தான் வாழ்க்கை.


வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தால் கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது.


பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், ‘’அவங்களுக்கே என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க.’’. என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு.


ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளைக் கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்து இருக்க மாட்டோம்.


அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்..)


பெரும்பாலானோருக்கு ‘’ஸ்டீவ் ஜாப்ஸ்’’ என்றாலே முதலில் எண்ணத்தில் உதிப்பது ஆப்பிள் தான். இவர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலுக்கு முந்தியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டவர் அல்ல.


தனது அயராது உழைப்பால், எண்ணற்றத் தடைகளை, தோல்விகளைக் கடந்து வந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

தனது வாழ்வின் சில கட்டங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் பொருளாதாரரீதியாக மிகவும் கீழ் மட்டத்திற்குச் சென்றுள்ளார். இது பலரும் அறியாத உண்மை.


வாரம் ஒரு முறையாவது நல்ல உணவு கிடைக்கும் என்பதால் சில நாட்கள் ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஒரு கோவிலில் வழங்கப்படும் உணவை உண்டு உள்ளாராம் ஸ்டீவ் ஜாப்ஸ். 


*ஆம்*


வாழ்க்கையில் நமக்கு வரும் , துன்பங்கள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் போது நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில் தான் இருக்கிறது வெற்றியும், தோல்வியும். 


நமக்கு ஏற்படும் துயரங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் மிக முக்கியம்.


''How You make it'' என்பதை விட.,


''How you take it'' என்பது தான் முக்கியம்.


வெற்றிப் பெற எண்ண செய்ய வேண்டும் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.


புரட்சிகரமாக செயல்களை செய்து, வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும்..

Comments

Post a Comment

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..