உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக* *அமைவது* ஏன் ? நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"* எனப்படுகிறது. *சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.* சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல *