Skip to main content

ஏப்ரல் மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையாக இருங்க



சென்னை: ஏப்ரல் மாதம் மீனம் மாதமும் மேஷம் மாதமும் இணைந்த மாதம். சூரியன் மீனம் ராசியில் பாதி நாட்களும், மேஷம் ராசியில் பாதி நாட்களும் ஆக சஞ்சரிப்பார். ஏப்ரல் மாதம் மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெறும் மாதம். இந்த மாதம் மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.




ஏப்ரல் மாதம் கிரகங்கள் மாற்றத்தை பார்த்தால் ஏப்ரல் 8ஆம் புதன் மீனம் ராசியில் நீசமடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மேஷத்தில் உச்சமடைகிறார். 24ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு வந்து புதனோடு இணைகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரம் பலருக்கும் நன்மை தரக்கூடியதாகவே இருக்கிறது. சிலருக்கு சோதனைகளை தரப்போகிறது.
உலகம் முழுவதும் நோய் தாக்குதல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து அனைத்து ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம். பண வருமானம் வந்தாலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் அனுபவிக்க முடியும். ஏப்ரல் மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நிம்மதியும் கும்பம் ராசிக்காரர்களுக்கு யோகமும், மீனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமைந்துள்ளது.


மகரம்
குரு மங்கள யோகம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்க ராசியில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் கூடியுள்ளன. இரண்டாம் வீட்டில் புதன் இருந்தாலும் சில நாட்களில் மூன்றாம் வீட்டிற்கு சென்று நீசமடைகிறார். மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியன் நான்காம் வீட்டில் உச்சமடைவது உங்களுக்கு சாதகமான அம்சம். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ராகு ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கேது விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். உங்க ராசியில் குரு செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகம் கூடி வந்துள்ளது. இந்த மாதம் ரொம்ப சாதகமான மாதம்.

வெற்றிகரமான மாதம்
மன அழுத்தம் குறையும்

உங்களுக்கு இந்த மாதம் வேலை விசயமாக நிறைய நன்மைகள் நடக்கும். செவ்வாய் உங்க ராசியில் உச்சம் பெற்றிருப்பதால் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். உங்களுக்கு பெர்சனல் வாழ்க்கையில இந்த மாதம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் மாதத்தின் முற்பகுதியில் சில மன அழுத்தங்கள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் உங்களுக்கு வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து வைத்திருப்பீர்கள்.





லாபமான மாதம்
நல்லது நடக்கும் மாதம்

வேலையில மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள் மாத பிற்பகுதியில் முயற்சி செய்யலாம். விஆர்எஸ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான முயற்சி செய்யலாம். ஆட்சி பெற்ற சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் வேலையில் நிம்மதி கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். சுபமான பார்வை லாப ஸ்தானத்தின் விழுவதால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். மாத முற்பகுதியில் மன அழுத்தம் இருந்தாலும் மாத பிற்பகுதியில் நீங்க பிசினஸ் பண்ணுங்க நல்லதே நடக்கும்.





கும்பம்
விரைய செலவுகள்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் புதன் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி, செவ்வாய், குரு, ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியன் மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியன் உச்சமடைகிறார். சுக்கிரன் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஐந்தாம் வீட்டில் ராகு லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு நிறைய விரைய செலவுகள் ஏற்படும். ரொம்ப கவனமாக இருங்க. உங்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் இந்த மாதம் வரலாம்.


ஆரோக்கியம்
ஆயுள் ஆரோக்கியம்




நீங்க இந்த மாதம் முற்பகுதியில் உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. நல்ல தசாபுத்திகள் நடந்தால் நீங்க தப்பிச்சீங்க அதே நேரம் உங்க தசாபுத்தி சரியில்லை என்றால் சில பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். அதிசார குருவின் பார்வை உங்க ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. இதனால் உங்களுக்கு வங்கிக்கடன்கள் கிடைக்கலாம் ஆனால் கடன் கிடைக்கிறதே என்று வாங்கி போடாதீங்க. மாத பிற்பகுதியில் ஆயுள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இந்த மாதம் புதிய தொழில்கள் எல்லாம் வேண்டாம். பயணம் செய்ய வேண்டாம் பாதிப்புகள் வரலாம்.


முதலீடுகள் கவனம்
முன்யோசனை அவசியம்

புதிய முதலீடுகள் செய்யும் போது கவனமாக இருங்க. எந்த புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்து போடாதீங்க. மாணவர்களுக்கு இந்த மாதம் கவனமாக இருங்க மேல்நிலை கல்வியை தேர்வு செய்யும் போது கவனமும் பெரியவர்களின் ஆலோசனையும் தேவை. வீட்டோட ரெஸ்ட் எடுங்க வெளியே போய் யார் கிட்டையும் வம்பு வச்சிக்காதீங்க. இந்த நேரத்தில எந்த புது வேலைக்கும் மாறாதீங்க. பூமி சார்ந்த விசயங்களில் பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்கும் போது யோசித்து எடுங்க. குடும்ப விசயத்தில விட்டுக்கொடுத்து போங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். இந்த மாதம் விழிப்புணர்வோட இருங்க வெற்றிகரமான மாதமாக அமையும்.





மீனம்
சந்தோஷமான மாதம்

மீனம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் உங்க ராசியில் இருக்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் சூரியன் இரண்டாம் வீட்டிற்கு போய் உச்சமடைகிறார். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் குரு, சனி, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் நிறைய சாதகங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்காக நீங்க நிறைய முதலீடுகள் பண்ணலாம். உங்களால் பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும். நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. உங்க உடன் பிறந்தவர்கள் மூலம் நிறைய லாபம் கிடைக்கும்.


உயர்கல்வி யோகம்
குடும்பத்தில் கவனம்




லாப ஸ்தானம் வலுவாக இருக்கிறது. செவ்வாய், சனி, குரு கூட்டணி நிறைய மாற்றங்களை தரப்போகிறது. புதிய வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். உங்க தனாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் பண வருமானம் வரும். நிறைய லாபம் வரும். வங்கியில் கடன் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் மாத பிற்பகுதியில் தொடங்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட வாஸ்து செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் பற்றி யோசிக்கலாம். நிறைய பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று உள்ள சூரியன் உங்களுக்கு சாதகங்களை செய்வார். குடும்பத்தில் இருப்பவர்களுடன்
பேசும் போது கவனமாக பேசுங்க. மொத்தத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...