Skip to main content

Posts

Showing posts from June, 2019

அப்துல் கலாம்..

டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக்கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள். திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள். அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அப்துல் கலாம், ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார். மீண்டும் அழைத்தார்கள். இன்னும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் நான் ஆலயத்தில் ந

புதிய தலைமுறை மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய மாண்புமிகு மாணவனே என்னும் நிகழ்வு

புதிய தலைமுறை  மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய மாண்புமிகு மாணவனே  என்னும் நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பங்குபெற்ற அத்தனை பேருக்கும் நெகிழ்வான தருணமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. *இந்தியாவின் தங்கமங்கை* கோமதி *புதியதலைமுறை முதன்மை மேலாளர்* இளையராஜா *கல்லூரி முதல்வர்* முனைவர்.ஹயாசிந் சுகந்தி *தமிழர்மரபுவழி அறக்கட்டளை தலைவர்* கமலி இவர்களது பங்கேற்பிலும், அனுபவப்பகிர்விலும் நிறைந்தது அரங்கம்.. இப்படி ஒரு நிகழ்வு எங்கள் பகுதி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என பெருமுயற்சி எடுத்து இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த *விழுதுகள் அமைப்பினருக்கு* எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.. *மாணவர்களின் பங்கேற்பும்,பங்களிப்பும்* வியப்பிற்குரியதாகவும், வரவேற்புக்குரியதாகவும் இருந்தது. மாணவர்களுக்கான வாய்ப்பையும், வழிகாட்டலையும் வழங்காமல் இருந்துவருவதே மாணவர்கள் முன்னேறிச் செல்ல முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றது என்பதை இங்கு உணர முடிந்தது..எல

தமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்.புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம்!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக கே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் , 2 முறை சென்னை காவல் ஆணையராகவும் இருந்தவர். திரிபாதி தென்மண்டல ஐ.ஜி.சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.  சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத்தர திட்டங்களை செயல்படுத்தினார் ஆவார். புதிய தலைமை செயலாளர் சண்முகம் : தமிழகத்தில் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம். வேளாண் துறையில் முதுகலை

சென்னையை மீட்ட காமராஜர்!!

👉காமராஜர் தன் அதிரடியை தொடங்கினார். தமிழ்நாடு எல்லைக்கமிட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில் 'தமிழ்நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 👉தேர்தலில் தமிழ்நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியை தழுவினார்கள். இதன்மூலம் சென்னை நகரை காமராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்கவைத்துக் கொண்டார். 👉இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள், சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதை கைவிட்டுவிட்டனர். இதன்மூலம் காமராஜர் தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 👉இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார். பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்த வரிகள் :  👉பள்ளிக்கு படிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த காமராஜர், அந்த விழாவில் பேசியது : 👉கடைசி மனிதனுக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டும் என்பது

580 பேருக்கு பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., சாதனை

ஒரே நாளில் 580 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனம் வழங்கி டி.என்.பி.எஸ்.சி. சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக வேளாண் துறையில் உதவி வேளாண் அதிகாரி பதவியில் 580 காலியிடங்களுக்கு இந்த ஆண்டு ஏப். 7ல் தேர்வு நடத்தப்பட்டது; 4158 பேர் பங்கேற்றனர். அவர்களில் 797 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு நாட்கள் 'ஆன்லைனில்' சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பின் 797 பேருக்கும் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. சான்றிதழ்களின் அசல் சரிபார்க்கப்பட்டு நேற்று ஒரே நாளில் தகுதி பெற்ற 580 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

குறைந்தபட்சம் ஒரு இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் அதில் ஓர் ஆண்டு பணிபுரிந்திருந்தால் மாறுதல் வழங்கலாம் என தடையாணை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே மாறுதல் பெற விரும்பும் ஆசிரிய நண்பர்கள் அனைவரும் இன்று கடைசி நாள் என்பதால் மாறுதலுக்கான விண்ணப்பப் படிவத்தினை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம், அலுவலகத்தில் வாங்க மறுத்தால் தற்போது விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளுங்கள் மூன்றாண்டுகள் தளர்வு செய்யப்படாவிட்டால் திருப்பி விடுங்கள் என்று கூறி பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப்படிவத்தினை இன்றைக்கு 28.06.2019 மாலைக்குள் கொடுக்கவும். செய்தி பகிர்வு 2009&TET போராட்டக்குழு

2017-18இல் முடித்த +2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

கோவை, ''பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகர்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களில் லேப்டாப் வழங்கப்படும்'', என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித் துறையை பொருத்தவரை, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு படிப்பு முடித்து சென்றவர்களுக்கும் விலையில்லா லேப்-டாப் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2017- 18 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்தில் லேப்டாப் வழங்கப்படும். பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை பல்வேறு புதிய திட்டங்கள் வரும் 2ம் தேதி சட்ட சபையில் அறிவிக்கப்படும். கடந்த 2006 ல் ஆசிரியர் பணியமர்த்தப்படும் போதே ஓய்வூதிய திட்டம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதைத்தான், தமிழக அரசும் பின்பற்றி வருகிறது.மனித நேயத்தோடு அனைவருக்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற வேண்டும் என நினைத்தாலும், நிதி நெருக்கடியால் எல்லோரும் வாழ வேண்டும், என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவருகிறது. இதற்கு ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன

இதுவும் கடந்து போகும்..!!!

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.😒😔😥 வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில்

சென்னை,வேலூர், சேலம் உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

சேலம் உள்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவு:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்) எம்.விஜயலட்சுமி- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் (அரியலூர் மாவட்ட ஆட்சியர்) டி.ஜி.வினய்- அரியலூர் மாவட்ட ஆட்சியர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்) எஸ்.ஏ.ராமன் - சேலம் மாவட்ட ஆட்சியர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்) டி.எஸ்.ராஜசேகர்- மதுரை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர்) -மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வருவாய் கோட்ட அதிகாரி எஸ்.சாந்தகுமார் கூடுதலாக கவனித்து வந்தார். ஆர்.சீதாலட்சுமி- சென்னை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகப் பதிவாளர்) ஏ.சண்முகசுந்தரம் - வேலூர் மாவட்ட ஆட்சியர் (சென்னை மாவட்ட ஆட்சியர்) ரோகிணி ஆர்.பாஜிபாகரே- தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகப் பதிவாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்)

இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பல்வேறு விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.இதன்படி ஆன்லைன் வழியில் இடமாறுதல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 22ல் துவங்கியது. இன்றுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அவகாசம் முடிகிறது. ஜூலை 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.

சர்ச்சைக்குரிய பதிப்புகள்: தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10,11-ம் வகுப்பு பாடங்களில் இருந்து அய்யா வைகுண்டர் குறித்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி பாடநூல்களில் அய்யா  வைகுண்டர் குறித்து, தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அய்யா வழியினர் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மனு அளித்த அய்யா வழியினர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு வரலாறு பாடநூலில் அய்யா வைகுண்ட சுவாமியை  மனிதனாக, போராளியாக, புரட்சியாளராக குறிப்பிட்டுள்ளதாக கூறினர். பாடநூலில் வைகுண்டர் என குறிப்பிட்டு போலி படத்தை பதிவிட்டுள்ளதாகவும் அய்யா வழியினர் குறை கூறினர். மேலும், அய்யா வைகுண்டர் பற்றிய தவறான பதிவை  திருத்தாவிட்டால், சென்னையில் வரும் 30-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அய்யா வழி அன்பவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்க

வரலாற்றை படிக்காத இனம் வாழாது..

சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.* ஆனால், *ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.* *வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.* இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. *உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.* மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.* கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் க