புதிய தலைமுறை மற்றும்
கல்வியாளர்கள் சங்கமம்
இணைந்து நடத்திய
மாண்புமிகு மாணவனே என்னும் நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
மாணவர்கள்,
பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பங்குபெற்ற அத்தனை பேருக்கும் நெகிழ்வான தருணமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
*இந்தியாவின் தங்கமங்கை* கோமதி
*புதியதலைமுறை முதன்மை மேலாளர்* இளையராஜா
*கல்லூரி முதல்வர்*
முனைவர்.ஹயாசிந் சுகந்தி
*தமிழர்மரபுவழி அறக்கட்டளை தலைவர்*
கமலி
இவர்களது பங்கேற்பிலும்,
அனுபவப்பகிர்விலும் நிறைந்தது அரங்கம்..
இப்படி ஒரு நிகழ்வு எங்கள் பகுதி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என பெருமுயற்சி எடுத்து இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த *விழுதுகள் அமைப்பினருக்கு* எத்தனை நன்றி சொன்னாலும் போதாது..
*மாணவர்களின் பங்கேற்பும்,பங்களிப்பும்* வியப்பிற்குரியதாகவும், வரவேற்புக்குரியதாகவும் இருந்தது.
மாணவர்களுக்கான வாய்ப்பையும், வழிகாட்டலையும் வழங்காமல் இருந்துவருவதே மாணவர்கள் முன்னேறிச் செல்ல முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றது என்பதை இங்கு உணர முடிந்தது..எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆற்றலை நாம் உணர வைக்க இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்து, ஒவ்வொரு மாணவர்களையும் பங்குபெறச் செய்ய வேண்டும் என்பதே உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விசயமாக இருக்கின்றது..
இங்கு பங்கேற்ற *மாணவர்களுக்கு நிச்சயமாக இது ஒரு திருப்புமுனையான நிகழ்ச்சியாக* இருக்கும் என்பது உறுதி..
*கல்வியாளர்கள் சங்கமம்* என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனது பயணம் சரியான திசையில் சென்றுகொண்டு இருக்கின்றது என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது..
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்
*புதிய தலைமுறையோடு* இணைந்து *கல்வியாளர்கள் சங்கமத்தின்* இப்பயணம் இனிதே தொடரும்..
Comments
Post a Comment