Skip to main content

Posts

Showing posts from December, 2018

இதுவும் கடந்து போகும்..!!

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.😒😔😥 வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில்

முக்கிய செய்தி!

பிரிவு உபச்சார விழா! அன்பர்களே! உங்களுக்கு நான் கூற விரும்புவது யாதென்றால்... இந்த மாதம் 31 ஆம் தேதி திருவாளர் 2018 ஓய்வு பெறுகிறார். அவருடைய 12 மனைவிகளும், 52 பிள்ளைகளும், 365 பேரக் குழந்தைகளும், டிசம்பர் 31 அன்று, 23.59 மணிக்கு,  பிரிவு உபச்சார விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர். திருவாளர் 2018 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால், திருவாளர் 2018 ஓய்வுபெறும் அப்பொழுதே உங்களுடைய அனைத்து பிரச்சினைகள், துக்கங்கள்,  வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றை தன்னுடனே எடுத்து செல்வதாக கூறியுள்ளார். அடுத்ததாக குமாரர் 2019 பதவி ஏற்க போகிறார். குமாரர் 2019 கூறியதாவது, நீங்கள் 2018 ல், இழந்தவைகளுக்கு ஈடாக வெற்றி, நீண்ட ஆயுள், ஆரோக்யம், அன்பு, மகிழ்ச்சி, மன நிறைவு, செல்வம், கீர்த்தி, வளமை மற்றும் நீங்கள் நினைக்கும்  நல்லவைகள் அனைத்தையும் வழங்கப் போவதாக உறுதி அளித்துள்ளார்! இனிய 2019 வாழ்த்துக்கள்!!!

TODAY'S THOUGHT..

ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கியிருந்தார்.._ அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்.._ _பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம்_ *நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன்..* _என்று சொன்னார்.._ _அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்_ *என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக்கொன்றார்.. தெரியுமா?* _என்று பெருமையாகச் சொன்னார்.._ _அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம்.._ *எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார்* _என்று கூறினார்.._ _அதனைக் கேட்ட அத்தோழி_ *எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார்..* _என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.._ _இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி.._ *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர..* *உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்..* _என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.._ _அதைக்கேட்ட விவசாயி_ *தான் இரண்டை  மூன்றாக்கியது.. இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்

*எத்தனுக்கு எத்தன்..

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.._ _அக்கடையில் முதலாளியே தொழிலாளி.._ _ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்_ *முதலாளி மூளையிருக்கா..?* என்று கேட்பான்.. _அதற்கு முதலாளியோ_ *மூளை இல்லை* _என்றவுடன்,_ *என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?* _என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.._ _இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.._ _நாட்கள் நகர்ந்தன.._ _ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.._ _அவரிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற,_ *அட இவ்வளவு தானே.. நான் பார்த்துக்கொள்கிறேன்..* _என்று நண்பரும் கூறினார்.._ _கடையை மூடப்போகும் சமயம்,_ _அத் திமிர்பிடித்தவன் வந்து.. முதலாளியிடம்,_ *முதலாளி மூளையிருக்கா..?* _என்று வழக்கம் போலக் கேட்டான்.._ _அதற்கு முதலாளியின் நண்பர் அவனைப் பார்த்து,_ *இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது.. ஆனால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை..* என்றார்.. _திமிர்பிடித்தவனின் ப

இதுவல்லவோ தாம்பத்தியம்!!

கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து ஒன்றும் கேட்டிலன். மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்: "உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்". அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள். கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், ஒரு லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான். மனைவி விளக்கினாள்: "நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள். நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாத

TODAY'S THOUGHT..

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.._ _அக்கடையில் முதலாளியே தொழிலாளி.._ _ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்_ *முதலாளி மூளையிருக்கா..?* என்று கேட்பான்.. _அதற்கு முதலாளியோ_ *மூளை இல்லை* _என்றவுடன்,_ *என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?* _என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.._ _இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.._ _நாட்கள் நகர்ந்தன.._ _ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.._ _அவரிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற,_ *அட இவ்வளவு தானே.. நான் பார்த்துக்கொள்கிறேன்..* _என்று நண்பரும் கூறினார்.._ _கடையை மூடப்போகும் சமயம்,_ _அத் திமிர்பிடித்தவன் வந்து.. முதலாளியிடம்,_ *முதலாளி மூளையிருக்கா..?* _என்று வழக்கம் போலக் கேட்டான்.._ _அதற்கு முதலாளியின் நண்பர் அவனைப் பார்த்து,_ *இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது.. ஆனால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை..* என்றார்.. _திமிர்பிடித்தவனின் ப

CHRISTMAS SPECIAL..

"Santa Claus is anyone who loves another and seeks to make them happy; who gives himself by thought or word or deed in every gift that he bestows." "His eyes -- how they twinkled! His dimples, how merry! His cheeks were like roses, his nose like a cherry! His droll little mouth was drawn up like a bow, and the beard on his chin was as white as the snow." “Happiness lies in making others happy, in forsaking self-interest to bring joy to others.”- Only few can do it sir, thanks for bringing smile on every little face, thanks for bringing happiness in everybody's heart.. Every year u made it a point to make all of us happy.. Long Live sir, thanks for your unconditional love and affection.. Hereby wishing all my friends a very Happy Christmas..:-)

கன்றுக்குட்டி..

ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த திருமணத்தை நடத்தி வைக்க அந்தணர் வந்தார்.._ _அந்த வீட்டில் நிறைய கன்றுகுட்டிகள் இருந்தன.._ _*அதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள்.. அதை வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில், கடவுளின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறேன்..*_ _என்று செல்வந்தரிடம் கேட்டார்.._ _அவரும் கொடுத்து விட்டார்.._ _மிகச்சிறிய அந்தக் கன்று, தன் ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தோளில் சுமந்தபடி நடந்தார்.._ _வழியில் மூன்று திருடர்கள் வந்தனர்.._ _கன்றைப் பறிக்க எண்ணிய அவர்கள் ஒரு ஓரமாகப் பதுங்கினர்.._ _முதலில் ஒருவன் வெளியே வந்து.._ _*சாமி! யாராவது பன்றிக்குட்டியைச் சுமப்பார்களா..? நீங்கள் சுமக்கிறீர்களே..?*_ _என்று கேட்டான்.._ _*மடையா..! மடையா..! இந்த கன்றுகுட்டியாடா..! பக்கத்து ஊர் செல்வந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்..*_ _என்றதும் அவன் போய்விட்டான்.._ _அடுத்தவன் வந்தான்.._ _*யாராவது பன்றிக்குட்டியை சுமப்பார்களா..? நீர் சுமக்கிறீரே..?*_ _என்றதும், அவனுக்கும் தகுந்த பதிலை சொன்னார் அந்தணர்.._ _மூன்றாமவன் வந்தான்.._ _*சாமி..! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட

TODAY'S THOUGHT..

ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.._ _வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,_ _அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.._ _போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள்.._ _சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்.. இப்படியாக.._ _அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார்.._ *இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!*   _அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது.._ *அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!* *சரி.. உங்கள் எல்லோருக்கும் நல

TNTET NEWS..

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

மினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை!

எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார். ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’ இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை. இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க! தங்