Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கியிருந்தார்.._

அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்.._
_பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம்_ *நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன்..* _என்று சொன்னார்.._

_அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்_ *என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக்கொன்றார்.. தெரியுமா?* _என்று பெருமையாகச் சொன்னார்.._

_அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம்.._ *எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார்* _என்று கூறினார்.._

_அதனைக் கேட்ட அத்தோழி_ *எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார்..* _என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.._

_இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி.._ *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர..* *உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்..* _என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.._

_அதைக்கேட்ட விவசாயி_ *தான் இரண்டை  மூன்றாக்கியது.. இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான்..* _ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெறுமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை.._

*தன் வீரம் பற்றி, புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும்?*  _என்று அலட்சியமாக கேட்டான்.._

_உடனே, ஞானி விவசாயின் ஐந்து வயது மகனை அழைத்தார்.._ *உன் அப்பா.. முப்பதடி பாம்பை கொன்றாரா?* _என்று கேட்டார்.._

_ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்து விட்டு.._ *செத்த பாம்பு, வளருமா?* என்று கேட்டான்..

_அதை கேட்டு ஞானி பெரிதாக சிரித்தார்_

*தனது தந்தையார், பாம்பை கொன்றதாக சொன்னபோது ஓடிப்போய் பார்த்திருக்கிறான்.. அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது..*
*அந்தப் பையனைப் போல, எல்லோரும் உண்மையை ஆராய்ந்ருந்தால்.. வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா..?* _என்று அவர் ஊர் மக்களை பார்த்து கேட்டார்.._

_மக்கள் அனைவரும் தலைகுனிந்து கொண்டனர்.._

👇
*இன்று ஊரும் செய்திகளும் அப்படித்தான் உலா வருகிறது..*

*ஈரை பேனாக்கி..*
*பேனை பெருச்சாளியாக்கும் உலகமிது..*

ஆகையால்.. எதையும் ஆராயாமல் பரப்ப வேண்டாம்..

*நல்லவையே படிப்போம்..*
*நல்லவையே பரப்புவோம்..*

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...