பறவைகள் ஏன் முக்கியம்? பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? 1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன. 2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன. 3, விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை மலர்த்து கின்றன. 4,வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன. 5, இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்! நாகணவாய் (மைனா) இல்லாது போனால் வெட்டுக்கிளிகள் பெருகும். ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம். கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் . பறவைகளை, ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி "காக்கை குருவி எங்கள் சாதி " என்று பாடியிருப்பார் போலும்... மனிதர்கள், கிளிப்பேச்சு கேட்கவும் குயிலிசையில் கிறங்கவும் மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை! பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச