Skip to main content

Posts

Showing posts from November, 2017

High school HM case stay vacated..

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள சில கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் முழு விவரங்கள் உரிய ஆணை கிடைத்த பின்புதான் தெரிய வரும். பதவி உயர்வில் முதுகலை ஆசிரியர்களாகச் சென்றவர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்குவது குறித்து எதுவும் சொல்லப் படவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் மழை எப்படி?- தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சென்னை மழை: தற்போது உள்ள சூழ்நிலையில் சென்னையில் கனமழை இல்லை, மிதமான மழை இருக்கும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், விரைவில் மலேசிய கடலிலிருந்து காற்றழுத்த தாழ்வு ஒன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக நூல் பதிவு: “சென்னையில் இன்று இரவு அல்லது நாளை காலையில் இருந்து டிசம்பர் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கனமழை இருக்க வாய்ப்பில்லை. இன்று இரவு மழை இல்லாவிட்டாலும், நாளை காலையில் இருந்து மழை இருக்கும். கவலைப்படும் அளவுக்குமழை இருக்காது. மலேசிய கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வு ஒன்று உருவாகி அந்தமான் வழியாக வருகிறது. இது புயலாக மாற அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அதன் அழுத்தம் குறைவாக இருப்பதால், புயலாக வேகமாக மாறும். இது குறித்த சிறப்பு பதிவை நான் பின்னர் பதிவிடுகிறேன். அடுத்த வாரத்தில் மழை தொடர்பாக நான் பிஸியாகிவிடுவேன். முதலில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யட்டும். அதன்பின் மற்றவற்றை பார்க்கலாம். நமக்கு அதிகநேரம் இருப்பதால், இப்போதே புயல் குறித்து பதிவு தேவையில்லை. ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அடுத்து நான் பதிவிடுக

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் அரையாண்டு தேர்வு

சேலம்: நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்துக்கும், 200 லிருந்து, 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு, முன்னோட்டமாக, அனைத்து பாடங்கள் உள்ளடக்கி, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 7 முதல், 23 வரை, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. வழக்கமாக, பிளஸ் 1 வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும், வேறு வேறு தேதிகளிலும், காலை, மாலை என மாற்றி நடத்தப்படுவது வழக்கம். நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2வுக்கு தேர்வு நடக்கும், அதே நாளில், அதே நேரத்தில், பிளஸ் 1க்கும் தேர்வு நடத்தப்படுகிறது, டிசம்பர், 7 - தமிழ் முதல்தாள், டிசம்பர், 8- தமிழ் இரண்டாம்தாள், டிச., 11- ஆங்கிலம் முதல்தாள், டிசம்பர் 12- ஆங்கிலம் இரண்டாம்தாள், டிச., 14- கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டிச., 15- உயிரியல், தாவரவியல், வரலாறு, டிச., 18 - கணிதம், விலங்கியல், டிச., 19 - வணிகவி

’நீட்’ பயிற்சி; மாணவர்கள் ஆர்வம்

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, ’நீட்’ தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது: ’நீட் ’தேர்வுக்கு பாட வாரியாக நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சியளிக்க தமிழக அரசுடன் புதுடில்லியில் உள்ள ’ஸ்பீட்’ பயிற்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் 100 மையங்களை தேர்வு செய்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. தேனியில் இப்பயிற்சிக்கு 2016 மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.11 மையங்களில் 3ல் பயிற்சி துவங்கியுள்ளன. மற்ற கல்வி மாவட்டங்களில் பயிற்சிக்கான ஆன் -லைன் பதிவுகள் தொடர்ந்து நடக்கிறது, என்றார்.

கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 30) விடுமுறை

சென்னை : கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மாணவர்கள் நலன்கருதி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவடடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

ஆசிரியர் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து நடிகர் கமல் கருத்து!!!

பள்ளிவரும் பிள்ளைகள், பயின்றுவரும் கிள்ளைகள்; தற்கொலைசெய்து சாவு! இக்கொலையில் ஆசான்தானே காவு? பள்ளி வருவது படிக்க- கூடாது சுள்ளி எடுத்து அடிக்க, ஆசிரியருக்கு கட்டுப்பாடு ஆசு களைவதில் தட்டுப்பாடு ; ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும், வழுக்கிப் போனால் தடுக்க வேண்டும்; தடுக்காவிட்டால் வேலைப்பழி! தடுத்துவிட்டால் கொலைப்பழி? கண்டிக்கவும் உரிமையில்லை! தண்டிக்கவும் உரிமையில்லை! அழைத்துவா பெற்றோரை, அறியட்டுமுன் அக்கப்போரை; இதுதான் ஆசானெடுத்த முடிவு! இனிமேல் அவருக்குண்டா விடிவு? 'காப்பியடித்ததை' கண்டறிந்தால் கைபிடித்திழுத்த 'காமுகன்' பட்டம்! 'தப்பென' கண்டித்தால் தற்கொலையால் 'காலன்' பட்டம்! அழியாத கல்வி கொடுத்தவன், அழிகிறானே குற்றம் தடுத்தவன்; போதிக்கிறவன் பேச்சு, பேதலித்தே போச்சு; குருவென எம்மை வணங்கவும் வேண்டாம், எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம்; எம்மிதயமும் சதையால்தானே ஆனது-இன்று எம்வாழ்வுதானே சிதையாகிப் போனது! வேதனையுடன், கமல் வணங்குகிறோம் உம்மை எம் இன்னல்களை அறிந்து குரல் கொடுத்தமைக்கு... இச்சமூகத்தை மாற்றிடலாம் என நினைத்து

TODAY'S THOUGHT..

ஒரு குடிகாரனை சந்தித்த பாதிரியார் அவனை திருத்த எண்ணி அவனிடம் பேசினார், "தம்பி! குடிகாரர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. குடிக்காத உன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நீ மட்டும் தனியாக நரகத்தில் இருப்பாய்!" அந்த குடிகாரனுக்கு கண்களில் நீர் கோர்த்தது. தழுதழுத்த குரலில் பாதிரியாரிடம் கேட்டான், "சாமி! வெறுமனே குடிக்கிற நானே நரகத்துக்குப் போவேன்னா எனக்கு மது விற்ற கடைக்காரன், ஊற்றி கொடுத்தவன், அந்த மது பாட்டில்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?" குடிகாரன் திருந்தி வருவதில் பாதிரியாருக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. உற்சாகமாக பதிலளித்தார், "அந்த மது பாட்டில்கள் உட்பட அவர்களும் உன்னுடன் நரகத்தில் தான் இருப்பார்கள்" மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டு குடிகாரன் மீண்டும் கேட்டான், "அப்படீன்னா அந்த மதுக் கடைக்கு வெளியே சிக்கன் வறுக்கிறவன், அந்த சிக்கன், அதெல்லாம் ...?" குடிகாரன் பாதிரியார் வழிக்கு வருவதை உணர்ந்த பாதிரியார் துள்ளி குதித்து பதில் சொன்னார், "அந்த சிக்கன் உட்பட வறுக்கிறவனும் அடுப

புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு; டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: புதிய பாடத்திட்டத்துக்கான கருத்து கேட்புக்கு, ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, நவ., 20ல் வெளியிட்டார்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், tnscert.org என்ற இணையதளத்தில், நவ., 21ல், பாடத்திட்ட வரைவு பதிவேற்றம் செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், ஒரு வாரம் வரை கருத்து கூறலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை முடியும் நிலையில், கருத்து கூறுவதற்கு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின், பாடத்திட்டத்துக்கான கருத்து கூற, இன்று முதல், ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்படும் என, அறிவித்தார். இதன்படி, டிச., 4 வரை, பாடத்திட்ட கருத்துக்களை பெற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?

மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். நிபுணர்கள் நியமனம் : தமிழகத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களுக்கு, கல்வி மாவட்டம் வாரியாக, உளவியல் கவுன்சிலிங் வழங்க, மூன்று உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், கூடுதலாக, ஏழு மனோதத்துவ நிபுணர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக, உளவியல் கவுன்சிலிங் வாகனங்களும் வாங்கப்பட்டன. ஆனால், எந்த பள்ளியிலும், இந்த கவுன்சிலிங் நடத்தப்படவில்லை; மனோதத்துவ நிபுணர்களும் நியமிக்கப்படவில்லை. 'பேஸ் புக்' : பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு, உளவியல் கவுன்சிலிங் செய்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக பள்ளி மாணவ - மாணவியர், மனதளவில் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சக மாணவர்களுடன் சகஜமாக பழகுவதில்லை. ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போட்டி போட

மூடிய ஆட்டோவுக்குள் கைவிடப்பட்டுக் கதறிய பிஞ்சு; காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த ஈரமுள்ள நெஞ்சு!

மும்பை இளைஞர் 26 வயது அமான், வழக்கம் போல இரவு சாப்பாட்டுக்குப் பின் குட்டியாய் ஒரு வாக்கிங் சென்று வந்த பிறகே தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் தனது வீட்டில், இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வாக்கிங் செல்லத் தெருவில் இறங்கினார், சற்று தூரத்தில் தெரு முக்கு தாண்டும் போது எங்கிருந்தோ ஒரு மெல்லிய ஓலம் போன்ற பரிதாபச் சிணுங்கல் காதில் விழவே முதலில் அதை ஏதோ பூனை அழுகிறது போலும் என்று புறம் தள்ளியவர் மீண்டும் தனது வாக்கிங்கைத் தொடரப் போனார். ஆனால் அவரால் அந்த ஓலத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. பூனையாகவே இருந்தாலும் கூட ‘தானொரு விலங்குகள் நேசன் என்பதால்... ஏதாவது பூனைக்கு அடிபட்டு, காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் அது அழுகிறது போலும் என்றெண்ணி சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். கிட்டெ நெருங்க, நெருங்க அந்த ஓசை இன்னும் அதிகரிக்கவே அருகில் சென்றார். அங்கே தெருமுனையில் மாநகராட்சி குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு மூடப்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்றுணர்ந்து அமான் அதைத் திறக்க முயற்சித்தார். சற்று சிரமப்பட்டேனும் ஆட்டோவைத் திறந்து உள்ளே பூனை

மூடிய ஆட்டோவுக்குள் கைவிடப்பட்டுக் கதறிய பிஞ்சு; காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த ஈரமுள்ள நெஞ்சு!

மும்பை இளைஞர் 26 வயது அமான், வழக்கம் போல இரவு சாப்பாட்டுக்குப் பின் குட்டியாய் ஒரு வாக்கிங் சென்று வந்த பிறகே தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் தனது வீட்டில், இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வாக்கிங் செல்லத் தெருவில் இறங்கினார், சற்று தூரத்தில் தெரு முக்கு தாண்டும் போது எங்கிருந்தோ ஒரு மெல்லிய ஓலம் போன்ற பரிதாபச் சிணுங்கல் காதில் விழவே முதலில் அதை ஏதோ பூனை அழுகிறது போலும் என்று புறம் தள்ளியவர் மீண்டும் தனது வாக்கிங்கைத் தொடரப் போனார். ஆனால் அவரால் அந்த ஓலத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. பூனையாகவே இருந்தாலும் கூட ‘தானொரு விலங்குகள் நேசன் என்பதால்... ஏதாவது பூனைக்கு அடிபட்டு, காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் அது அழுகிறது போலும் என்றெண்ணி சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். கிட்டெ நெருங்க, நெருங்க அந்த ஓசை இன்னும் அதிகரிக்கவே அருகில் சென்றார். அங்கே தெருமுனையில் மாநகராட்சி குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு மூடப்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்றுணர்ந்து அமான் அதைத் திறக்க முயற்சித்தார். சற்று சிரமப்பட்டேனும் ஆட்டோவைத் திறந்து உள்ளே பூனை

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் ஏற்புடையதுதான் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.28) நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் பங்கேற்றுப் பேசியதாவது:- தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 44.3 சதவீதம்: இந்திய அளவில் இப்போது 799 பல்கலைக்கழகங்களும், 39,071 கல்லூரிகளும், 11,923 கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவற்றின் மூலம் 3.46 கோடி மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுகின்றனர். இதனால் உயர் கல்வியில் 24.5 சதவீத ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. இதில், மாநில அளவில் ஒப்பிடும்போது, தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 44.3 சதவீதம் ஆகும். தொலைநிலைக் கல்வியிலும்... இதே போன்று அதிக அளவில் தொலைநிலைக் கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலமும் தமிழக