சென்னை : கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மாணவர்கள் நலன்கருதி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவடடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்
Comments
Post a Comment