Skip to main content

Posts

Showing posts from May, 2019

பழைய பொக்கிஷங்கள்!!!!

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.. ♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… ♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்… ♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை… ♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்… ♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது… ♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்… ♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்க

TNTET 2019 தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதிச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் விலக்கு வழங்கப்படும் எனவும் அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு, ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை

மாணவர்கள்‌ பள்ளிக்கு ஸ்‌மா‌ர்ட் போன், ‌இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவர கூடாது என  உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக ‌உயர்நிலை, மேல்நிலை‌ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்‌பிள்ளது. அதில் காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும் இருச்சக்க‌ர வாகனம், செல்போன் உள்ளிட்ட பொருட்‌களை கொண்டுவர கூடாது என்றும், மீறினால் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பி வழங்‌கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு என சீ‌ருடையில் ‌குறிப்பிடப்பட்டுள்ள ஆடை வரம்பை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

TNTET ஹால்டிக்கட் பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினையா? மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்!!

PROCEDURE TO DOWNLOAD HALL TICKET FOR FORGOT USER ID / PASSWORD               TRB issued Hall Tickets to attend TamilNadu Teacher Eligibility Test-2019 – Paper I and Paper-II, through TRB website from 26.05.2019.              Some candidates forgot their user ID / Password, hence they are unable to download the Hall Ticket. To download their Hall Ticket, the following steps to be followed by them.             Forgot User ID             Step 1 – Click Forgot User ID.             Step 2 – Type the registered Email ID and Submit.             Step 3 – User ID will be sent to the registered Email ID.             Forgot Password             Step 1 – Click Forgot password.             Step 2 – Type User ID, Email and submit.             Step 3 – Link will be sent to the registered Email ID.             Step 4 – Click the link to reset password.             Step 5 – Type the new password and login again.             Teachers Recruitment Board reserves the right to correct any erro

TODAY'S THOUGHT..

*பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.* *பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.* *இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்* *விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.* *உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.* *பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.* *தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.* *கோபப்படுவது உண்மையான அன்பு அதற்காக பிரிவது *அது விலகுவதற்கான முன் எற்பாடு..!* *யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.* *அவர்கள் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது* *உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.* *பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.* *அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்* *ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.* *விலகியிருக்க விரும்புபவரிடம் அன்பை திணிக்காதீர்கள்.* *தற்சமயம் அதை அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.* *யார் வெறுத்தாலோ விலகிப்போனாலோ - நீங்கள் நொந்து போகாதீர்கள்.* *கிளை உடைந்தாலோ மரம் சாய்ந்தாலோ - சிறு குருவியே சிறகை நம்பி பறக்கிறது.*

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பி.இ.ஓ., நியமனம்

திண்டுக்கல், தொடக்க கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் (பி.இ.ஓ.,) 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.தொடக்க, நடுநிலை பள்ளிகளை ஆய்வு செய்யவும் மேற்பார்வையிடவும் ஒன்றிய அளவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. தற்போது இது வட்டார கல்வி அலுவலர் பணியிடம் (பிளாக் எஜூகேஷன் ஆபீஸர்) என பெயர் மாற்றப்பட்டுள்ளது.நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். பள்ளிகளை ஆய்வு செய்வது, மேற்பார்வையிடுவது, ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பது, ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது, விடுப்பு அனுமதித்தல், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு பராமரித்தல், அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சென்றடைய உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியன்று ஏற்படும் காலி பணியிடத்துக்கு ஏற்ப 30 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், 70 சதவீதம் பணிமாறுதல் மூலமும் நியமிக்கப்பட்டனர். தொடக்க, நடுநிலை பள்ளிகளை மட்டுமே வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு

வட்டார கல்வி அதிகாரி பதவி உயர்வு விதி மாற்றம்

சென்னை, பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அதிகாரி இடங்களை நிரப்பும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கீழ், வட்டார கல்வி அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். மாநிலம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, பள்ளி கல்வி துறை பட்டியல் எடுத்துள்ளது.இந்த இடங்களில், 50 சதவீதத்தை, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழியாகவும், மற்ற இடங்களை, ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வு வழியாகவும் நிரப்ப, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே, இந்த பணியிடங்கள், 70 சதவீதம் பதவி உயர்வு வழியாக, நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய உத்தரவால் இனி, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு: 1,552 மையம்

சென்னை, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வுக்கு, 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு, மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி, 'டெட்' தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பணியாற்ற, தகுதி தேர்வின், முதல் தாளும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதி தேர்வின், இரண்டாம் தாளும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, இந்த ஆண்டுக்கான, டெட் தேர்வு, ஜூன், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில், ஆறு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 2010ம் ஆண்டுக்கு பின், அரசு உதவி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில், இதுவரை, தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு, இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு, 32 மாவட்டங்களில், 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்ப

TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார் தொிவித்துள்ளனர். மேலும் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு மே 26-ல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படித்ததில் பிடித்தது..

_உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.* ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது...._ _அதைப் போல் உறு

1-01-2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தொடர்பான இயக்குநர் செயல்முறை

 

அங்கன்வாடியில் எல்.கே.ஜி., ஆசிரியர்கள் இடமாற்றம்

அங்கன்வாடிகளில் புதிதாக துவக்கப்படும், எல்.கே.ஜி., வகுப்பில் பாடம் எடுக்க, 2,400 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், ஆங்கில வகுப்புகள் துவங்க வேண்டும்' என, பல்வேறு மாவட்டங்களின் பெற்றோர், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை ஆங்கில வழியில் நடத்த, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளிகள் அருகேயுள்ள, 2,381 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், எல்.கே.ஜி., வகுப்புகளை துவக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. இந்த அங்கன் வாடிகளில் வரும், 3ம் தேதி முதல், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2,381 அங்கன்வாடிகளிலும், எல்.கே.ஜி., பாடம் நடத்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்

மாணவர்களின் புத்தக சுமை குறைகிறது?

மாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கின்றன. 'விதவித வண்ணங்களில், 'ஸ்கூல்' பைகள் வந்தாலும், மாணவர்களின் புத்தகச் சுமை மட்டும் குறையவில்லை. புத்தகச் சுமை காரணமாக, மாணவர்கள் உடல்நலன் பாதிக்கப்படுகிறது' என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'ஒன்று முதல், இரண்டாம் வகுப்பு - 1.5 கிலோ, மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு - 2 - 3 கிலோ வரை, ஆறு, ஏழாம் வகுப்பு - 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்பு - 4.5 கிலோ, 10ம் வகுப்பு - 5 கிலோ அளவுக்கு புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் பருவ முறை அமலில் இருப்பதால், புத்தகங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பள்ளி நிர்வாகம், அனைத்து வகுப்பு பிரிவுக்கும், சரியான பாட அட்டவணையை உருவாக்க வேண்டும். இதன் மூலம், அன்றைய தினம் என்ன பாடமோ, அதற்குரிய புத்தகங்களை மட்டும், மாணவர்கள் எடுத்து வருவர்.பெற்றோரும், தங்கள் குழந்தைகளிட