Skip to main content

Posts

Showing posts from February, 2021

இன்றைய சிந்தனை..

 "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா?  முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந...

அரசு பாலிடக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது சரி தான்: மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

    அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது சரி தான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2017-ல் நடைபெற்றது. இந்த தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது சான்றிதழ் சரிபார்ப்பில் தெரியவந்தது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அந்த 196 பேரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமிக்கக்கோரியும் பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்து உயர் நீதிமன்றம், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியென உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கூறி பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை தனி நீதிபதி விசாரித...

தைரியம்..

 ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்...!!அதிகாலையில் எழுந்தவுடன் "சூரிய உதயத்தைப் பார்ப்பது" , அவனது வழக்கம்....!! ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது, தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது....!!  கோபம் கொண்ட அரசர், பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து, தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்.....!!   பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை.....!! கல கலவென சிரிக்கத் தொடங்கினான்....!! அரசருக்கு அவன் சிரிப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது ...!! மற்றவர்களுக்கு திகைப்பு...!!  அரசன் பிச்சைக்காரனை      "ஏன் சிரிக்கிறாய்?" என்று கோபமாக கேட்க.. பிச்சைக்காரன்,  "என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே  அரசே....!!   ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால் " என் உயிரே போக போகிறதே" ,...!! இப்போது மக்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்....   மன்னன் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம் என்று...!!   அரசனின் முகம் ...

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது - தேர்தல் ஆணையர் கடிதம்

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது என அனைத்துத் துறை செயலர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

TODAY'S THOUGHT..

ஓருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்) கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.  சந்தோஷமாக வீடு திரும்பினான். மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அ...

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.

  தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம்  விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின்  ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டது.  இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் ...

PGTRB CASE DETAILS..

 Case has been filed against age criteria mentioned in PGTRB2021 notification at Madurai High Court.. No stay order and soon this case will be disposed..

ஓய்வு வயது 60 - தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்

  அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த ஆண்டு மே 31 முதல் இது அமலாகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததாவது: “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே.31/2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்ப...

சிக்கல்கள் இல்லாவிட்டால்..

சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை. சிக்கல் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதேபோல தீர்வுகள் இல்லாத சிக்கல்களும் இல்லை... ஆனால்!, நாம்தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சில வேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறு செயல்கள் கூட பெரிய சிக்கல்களாக கருதுவதுண்டு... அதைப் பற்றியே நினைத்து, நினைத்து கலங்குவதுண்டு. ஆனால்!, அவை மிகச் சிறிய செயலாக இருக்கும். முதலில் நாம் சிக்கலுக்குள்ளேயே இருக்காமல், அதைவிட்டு வெளிவர வேண்டும்... அதை தீர்க்கும் வழிபற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் உரிய சிக்கலுக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பதில்லை... அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள்... அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக சுவையானதாக இருக்கும். ஆனால்!, மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்..

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்: பள்ளிக்கல்வித் துறை முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி

வீழ்வேன் என நினைத்தாயோ..

   *பேரம் பேசி வாங்கி வந்த ஒரு கிலோ தக்காளியில்,* *ஒன்றிரண்டு அழுகிப் போக......*  வேண்டாம் என்று அதை புழக்கடையில் வீசி எறிய......... பத்து நாட்களுக்குப் பிறகு எதேச்சையாக அந்தப் பக்கம் போனபோது பச்சைபசேலென முளைத்த குறுத்து கண்களில் பட..... இது என்ன பெரிதாக தளிர்த்து விடப்போகிறது என்று நான் நகர்ந்துவிட..... அழுகிய தக்காளியில் இருந்து விழுந்த விதைகளும், மண்ணிலிருந்த ஈரத்தன்மையும்... இவை இரண்டும் சங்கமிக்க....... இந்த நிகழ்விற்கு வானம் அவ்வப்போது (மழையாய்) நீர் இறைக்க...... விழுந்த நீரின் வேகம் தாளாமல் மேலெழுந்த மண்புழுக்கள் குறுக்கும், நெடுக்குமாக நகர்ந்து அதற்கு பிராணம் கொடுக்க....... கதிரவன் ஒளி சேர்க்க...... இரண்டு மாதம் கழித்து அந்த செடியில் பூத்துக் காய்த்து தக்காளி என் கண்களை உறுத்த....... அவை கனிவதற்குள்  பறித்துவந்து கூடையில் அடுக்கி விட்டேன்.........  *விழவேண்டும்,*  *விழுந்தாலும்,,,,,,,,*   *வித்தாக எழ வேண்டும்* *என்பதை,*   *இயற்கை* அனுதினமும் தானியங்கி, நமக்கு ஒன்றை  உணர்த்திக்கொண்டே  தான் இருக்கிறது........  *"முயன...

ADW - உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்குள், பிற மாவட்டத்திற்கு பணி நிரவல் செய்ய உத்தரவு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Director Proceedings

  AWD - உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் – ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் Click Here To Download - AWD -  Deployment - Norms & Full Instructions - Pdf

இரக்கம் கொள்ளுங்கள்..

இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா...? இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது... மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது...? சச்சரவுகள் ஏது...?  மனம் மென்மைப்படும் போது இரக்க உணர்வு தானாய் மனத்தில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரிகம் அடைந்ததன் வெளிப்பாடுதான் அவனது இரக்க உணர்வு... அது கடுமையான கோடைக்காலம். கொளுத்தும் வெயிலில் ஒரு வழிப்போக்கர் நடந்து கொண்டிருந்தார், வெயிலின் கடுமையை அவரால் தாள முடிய வில்லை... இறுதியில் தண்ணீர் உள்ள ஒரு கிணறையும் கண்டு பிடித்துவிட்டார். ஆனால்!, தண்ணீர்' கிணற்றின் ஆழத்தில் இருந்தது. அத்துடன் நீரை இறைக்க வாளியோ, கயிறோ எதுவும் இல்லை... கடைசியில், வேறு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கிணற்றில் இறங்கினார். உள்ளே வெயிலின் கடுமை இல்லை. தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்தது... இரு கரங்களால் தண்ணீரை அள்ளி தாகம் தீரக் குடித்தார். அதன் பிறகுதான் அவருக்கு உடலில் வலிமை பிறந்தது. கிணற்றிலிருந்து வெளியே வந்தார்... கிணற்றின் பக்கத்தில் ஒரு நாய் ந...

PG Panel Counselling Circular

PG Panel Counselling Circular for Chennai District was published..

இன்றைய சிந்தனை..

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்.,  அவன் அதை உணரும் போது,  கையில் ஒரு பெட்டியுடன்  கடவுள் அவன் அருகில் வந்தார்.. #கடவுள் : "வா மகனே....  நாம் கிளம்புவதற்கான  நேரம் வந்து விட்டது.." #மனிதன் : "இப்பவேவா?  இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள்  என்ன ஆவது?"  #கடவுள் : "மன்னித்துவிடு மகனே.... உன்னைக் கொண்டு  செல்வதற்கான நேரம் இது.." #மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" #கடவுள் : "உன்னுடைய உடைமைகள்....." #மனிதன் : "என்னுடைய உடைமைகளா!!! என்னுடைய பொருட்கள்,  உடைகள், பணம்,.... எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?" #கடவுள் : "நீ கூறியவை அனைத்தும்  உன்னுடையது அல்ல..  அவைகள் பூமியில்  நீ வாழ்வதற்கு தேவையானது.." #மனிதன் : அப்படியானால்,  "என்னுடைய நினைவுகளா?" #கடவுள் : "அவை காலத்தின் கோலம்...." #மனிதன் : "என்னுடைய திறமைகளா?" #கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன்  சம்பந்தப்பட்டது...." #மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய  குடும்பமும் நண்பர்களுமா?" #கடவு...

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும் கூட மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 74% இந்த இரண்டு மாநிலங்களில் இருக்கின்றன. தொடர்ந்து ஒரு வாரமாக கொரோனா தொற்று தினமும் அதிகமாக பதிவாகி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளை தவிர மற்றவை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனேவில் பள்ளி - கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் முழு பொதுமுடக்கம் கொண்டு வரும் திட்டம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது . எனவே கொரோனா நம்மை விட்டு சென்றுவிட்டது என்று எண்ணாமல் முன்பு இருந்தது போன்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் .

இடம் மாறிப் பார்ப்போம்..

 ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார். அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள், "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார். தாகூர் தொடர்ந்து எழுதுகிறார், "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள் எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது" என்று. தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும், கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும், சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ? எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை ...

முதுநிலை ஆசிரியர் பணி எப்போது கிடைக்கும்?

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கான அமைப்பு சார்பில், நிர்வாகி வன்னிமுத்து தலைமையில், சென்னையில் உண்ணாவிரத போராட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன், போராட்டத்தை துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக இருந்த, 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, 2019 செப்டம்பரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, 2017- - 18 மற்றும் 2018- - 19ம் ஆண்டு காலியிடங்களுக்கு மட்டும், பணி நியமனம் வழங்கப்பட்டது. 2019- - 20ம் ஆண்டுக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளி கல்வி செயலர், இயக்குனர் உள்ளிட்டோரிடம், பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக, 2,098 முதுநிலை ஆசிரியர் பணிய...

கவலையை தூர எறியுங்கள்..

கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியல் ஆளர்கள்... அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கி கொள்கிறோம்... நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை அவதிக்கு உள்ளாக்குகின்றன... ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்ற அச்ச விளைவு. வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளை யும் தூக்கி தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்... உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை பணியாளர்களுக்கு மன இருக்க மேலாண்மை குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்... எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப் பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்து இருந்த கண்ணாடி குடுவையில் நீரை ஊற்றினார். குடிப்...

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

  ஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:-  சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பதான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  பாடம் நடத்த போதிய கால அவகாசம் இல்லாததால், ஆசிரியர்கள் கூடுதலான நேரம் மனித நேயத்தோடு, தங்கள் குழந்தைகளைபோல் பாடம் நடத்த வேண்டும். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்குவது எளிதான காரியம் இல்லை என்றார்

காத்திருக்க பழகு..

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்... !!! நான் அழைக்கும் வரை காத்திரு'. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு கனி கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு உணவு தயாராகும் வரை காத்திரு போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு பிறர் கோபம் தணியும் வரை காத்திரு இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தை...

"+2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் "

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மே 3ம் தேதி மொழிப்பாடம், மே 5ம் தேதி ஆங்கிலம், மே 7ம் தேதி கணினி அறிவியல், மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், விலங்கியியல், மே 19ம் தேதி உயிரியியல், வரலாறு மே 21ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது’ எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதிப்பு..!!

  தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.  அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர், கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும், சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள்.  ஊசி சிறியது.. மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்...?” என்று கேட்டான். “நீ சொல்வது உண்மை தான்” என்றார் தையற்காரர்.  “கத்திரிகோல் அழகாகவும்... மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது பிரிப்பது..! ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. *ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல"* என்றார்.

17.02.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

    பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17.02.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2021 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndse@nic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .  மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாக்க் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக்க் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .  மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப...

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்..

 அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம்தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு  நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை.  மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான். மனம் மகிழ்ச்சியே அடையவில்லை. துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்‘ என்று யாரோ சொல்ல, அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான்.  தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம்என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு, ஸ்வாமி  இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன்.  இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை.  நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே“ என்று யோகியிடம் சரணடைந்தான். அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார்.  கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலை...

டிஆர்பி தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய்ப்பு?- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    45 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிஆர்பி தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே பெரிய கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை இன்று திறக்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பள்ளி மாணவர்களுக்கு முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்துத் தற்போது எதுவும் கூற முடியாது. உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்களைத் தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிஆர்பி தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்களின் கோரிக்கைகளை ஆலோசித்து, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதி முடிவு செய்யப்படும். முதல்வரின் ஒப்புதல் பெற்று, தேர்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என அமைச்சர் ...

கர்மா..

 கர்மா பொல்லாதது.. அதை வெல்ல யாராலும் முடியாதது..  இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் .. மறைந்ந பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார்.. ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார். எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசை கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார். ஸ்டாலினும் சசிகலாவும் , வைகோவும் 30 வருசமா முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்... எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே... ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்... ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான க...

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பணி

  திண்டுக்கல்லில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியது:  இந்தாண்டு நடக்க உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.  பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க கூடாது.தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.  உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர்களாக 50 சதவீதம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இன்றைய சிந்தனை..

 வரலாற்றை படிக்காத இனம் வாழாது!! சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், *ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.* *வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு. இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. *உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.* மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.* கிட்டத்தட்...