17.02.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17.02.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2021 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndse@nic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாக்க் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக்க் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .
மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ( Eligible vacancy ) தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Ithan varusa varusam nadakuthey
ReplyDeleteஆனால் இந்த முறை நமக்கான வாய்ப்பாக அமையும். நண்பரே.
ReplyDelete