Skip to main content

Posts

Showing posts from June, 2018

சுட்ட நாக்கு..

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார். மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர். குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார். மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர். ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர். வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான். குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார். சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குரு 'என்ன இது எதற

அரசு அருங்காட்சியகங்களில் வரலாற்று நூலகங்கள்

சென்னை: தமிழக அரசு அருங்காட்சியகங்களில், விரைவில், நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக தொல்லியல் துறை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மற்றும் அகழாய்வு களை செய்து வருகிறது. அப்போது, கண்டுபிடிக்கும் தொல்பொருட்களை பற்றி, ஒப்பீட்டாய்வு அடிப்படையில், ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடுகின்றன.அவை, சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஆய்வாளர் கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், &'மாவட்டங்களில் உள்ள, அருங்காட்சியகங்களில், அந்த நுால்களை வைக்க வேண்டும்&' என, ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்த செய்தி, நமது நாளிதழிலும் வெளியானது.இந்நிலையில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, &'மாவட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் அகழ் வைப்பகங்களில், நுாலகங்கள் அமைக்கப்படும். &'நுாலகம் அமைக்க, எட்டு லட்சம் ரூபாயும், நுால்கள் வாங்கி பராமரிக்க, இரண்டு லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படும்&' என, தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்கு

குட்டி சாக்பீஸ்...!

ஒரு_ஆசிரியையின்_கனவு... ஒரு நிமிடக் கதை.. "பசங்களா.. ஒரு சின்ன கற்பனை.. அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..? வரிசையா சொல்லுங்க பாப்போம்..!" "மிஸ்.. நான் வந்து ரோஸ்...!" "வாவ்... ஆனா ஏன்..?" "அப்போ தான் வாசனையா இருப்பேன்..!" "ஓ... குட் அடுத்து" "மிஸ்... நான் மயில்..!" "ஹாஹா.. ஏன்..?" "அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல.. எனக்கும் புடிக்கும்.. அதனால..!" "செம... அடுத்து..?" "மிஸ்... நான் பட்டாம்பூச்சி ஏன்னா.. அதுக்கு றெக்க இருக்கும்...!" "செம... செம... அடுத்து" "மிஸ்... நான் மான் ஏன்னா.. அது துள்ளி துள்ளி ஓடும்..!" "மிஸ்... நான் ட்ரீ.. ஏன்னா.. அதுல தான் நெறைய பறவைங்க வந்து தங்கும்..!" "ஹே.. வாவ்.. அடுத்து" "மிஸ்... நான் பாரதி.. பெரிய மீசை வெச்சிப்பேன்.." "ஹாஹா.. அடுத்து" "மிஸ்... நான் முயல்.. ஏன்னா.. அது உங்களுக

பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை:

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பள்ளிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுகிறது. பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும். மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்ச

மருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.

அரசு மற்றும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், இன்று காலை, 9:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார். முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், ''மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிக்கவில்லை. திட்டமிட்டபடி, இன்று தரவரிசை பட்டியல்வெளியிடப்படும்,'' என்றார்.

ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்

ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய சீருடை என்பதால், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே அளவுள்ள சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மூன்று, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் இறுக்கமாகவும், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதாகவும் உள்ளது. அளவுக்கு ஏற்ப சீருடை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு செட் மட்டும் வழங்கியிருப்பதால், கடந்தாண்டு சீருடையையும் அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காரமடை வட்டார கல்வி அலுவலர் தேசிங் கூறியதாவது:காரமடை ஊராட்சி

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல் மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட்டது. 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்து சேர்ந்தன.தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது. இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள

உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் வெளியீடு

2017- ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் தகுதிச்சான்றிதழ் வெளியிடப்பட்டது.தேர்வானவர்கள் trb.tn.nic.in. என்ற இணையதளத்தில், வரிசை எண், பிறந்ததேதியை குறிப்பிட்டு உள்ளீடு செய்து தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

TODAY'S THOUGHT..

*இது ஓர் ஆய்வு அல்ல,* *ஆழ்ந்த அனுபவப்பூர்வமான பதிவு* விமர்சனங்கள் வரலாம்... இருந்தபொழுதும் சரியானது எதுவென்று தெரிந்த பின்னும் அதை செய்யாமல் இருந்தால் அவர்தான் கோழை எனச் சொல்வார்கள்.. எனவே எனக்குச் சரியெனப் படுவதை இப்பதிவில் இடுகிறேன்..உங்களுக்கு தவறெனப் பட்டால் கடந்துபோகவும்... மனித உணர்வில் அழுகை என்பதும், சிரிப்பு என்பதும், கோபம் என்பதும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தது.. ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருந்து பணியாற்றிப் வேறொரு பள்ளிக்குச் செல்லும்பொழுது மாணவர்கள் அழுதனர்.. அதனால் அவர்  ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்கிறனர். குடியரசுத் தலைவர் விருது கொடுக்க வேண்டும் என்கிறனர் சிலர்.ஊடகங்கள் உச்சியில் தூக்கிவைத்து கொண்டாடி தீர்க்கின்றன.இத்தனை ஆண்டுகள் யாருக்கும் தெரியாத ஆசிரியர் பகவானின் செயல்பாடுகளுக்கு அளவுகோல் மாணவர்களின் அழுகை..இந்த அழுகையினை பணிமாறுதல்,பணிநிறைவு, பணி உயர்வு எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களிடம் எதிர்கொண்டிருப்பர்.. ஆனால் யாரும் இதனைச் செய்தியாக மாற்றியிருக்க மாட்டார்கள்.அது தங்களது பணி அனுபவத்தில் ஒன்று என எளிதில் கடந்திருப்

ஆசிரியர்களின் பணியை கண்காணிக்க வந்துவிட்டது அலைபேசி செயலி

பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது. பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும். அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன

பள்ளிகளில் மாணவர்களின் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே.... சுறுசுறுப்பு குறைந்து மனநிலை மாறுவதால்...

விருதுநகர் மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம்கொடுக்காததால், மாணவர்கள் இறுக்கமான மனநிலையில், சுறுசுறுப்பு குறைந்துவருவதால், உடற்கல்வி வகுப்பில், பல்வேறு விளையாட்டுகளை கற்றுத்தர ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இட நெருக்கடியில் இயங்குகின்றன.மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், பள்ளியின் தரத்தைஉயர்த்துவதிலும் குறிக்கோளாக இருப்பர்.பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருப்பதில்லை. இருந்தாலும் அவற்றை பராமரிப்பது கிடையாது. உடற்கல்விஆசிரியர் இருப்பர். கற்றுத்தர முன்வருவதில்லை. உடற்கல்வி வகுப்பில் ஏதாவது ஒருபாடத்தை நடத்துவர். எப்போதும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி கூடுதல் சுமைகளை திணிக்கின்றனர்.இதனால் வாட்டி வதைக்கப்படும் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.மாணவப் பருவத்தில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.அறிவு வளர்ச்சிக்கு கல்வி, உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி கட்டாயம் தேவை. தற்போது,போட்டி மனப்பாண்மையால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, கூடுதல் மதிப்பெண்கள்எடுத்தால்த

படித்ததில் பிடித்தது..

ஒரு குட்டி நகைச்சுவை கதை!!!! இந்தியஅளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து மாநில பூனைகளையும் வீழ்த்தி குஜராத்  பூனை முன்னனியில் இருந்தது! கேரளா பூனை டெல்லி பூனை கர்நாடக பூனை ஆந்திரா  பூனை இப்படி அத்தனை அனைத்து பூனைகளும் குஜராத் பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன! குஜராத் பூனையல்லவா பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது! கடைசி இறுதி சுற்று.... இந்தச் சுற்றில் குஜராத் பூனையிடம் தமிழ் நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்! பார்வையாளர்களுக்கு வியப்பு! தமிழ் நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது! இதுவா குஜராத் பூனையிடம் மோதப்போகிறது! பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்! போட்டித்துவங்கியது! குஜராத் பூனை அலட்சியமாக தமிழ் நாட்டு பூனையின் அருகில் நெருங்கியது! தமிழ்நாடு பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி! குஜராத் பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது! கண்கள் இருண்டு மயங்கி சரிந்த