Skip to main content

Posts

Showing posts from April, 2019

மகிழ்வித்து மகிழ்

1♥. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.. 2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.... 3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..! 4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..? 5♥.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! 6.♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்.. 7♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்... 8♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்... 9♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்...... 10♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம். தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக

ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போருக்கு முதல்ல வேலை கொடுங்க.. டிஎன்பிஎஸ்சிக்கு ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை வைத்து காலிப் பணியிடங்களில் நிரப்பிவிட்டே புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2014ம் ஆண்டு தேர்வு எழுதி வேலைக்கு தேர்வான தனக்கு இன்னும் பணிவழங்கப்படவில்லை என்றும், தனக்கு பணிவழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலிப்பணியிடங்களில் நிரப்பிவிட்டு அதன் பிறகே வேலைக்கான அடுத்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடம் இருந்தால் மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம் மேலும் ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலிப்பணியிடங்களில் நிரப்பாமல் புதிய அறி

கல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்

கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கையின் போது, மாணவர்கள், பிளஸ் 1ல் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள், வழங்கப்படுகின்றன. பிளஸ் 2வில் முக்கிய பாடங்களில், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து கல்லுாரிகளுக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர், சாருமதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடம், பொது தேர்வாக அறிமுகமாகி உள்ளது. அதன்படி, பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்ச்சி செல்லும். எனவே, இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்கள், சென்ற கல்வி ஆண்டில், பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காமராஜர்

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார்.  பதிலில்லை. முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.  ஒன்றும் நடக்கவில்லை. காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார்.  உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். காகிதங்களைப் புரட்டிய நேரு  கையை விரித்தார் .. " இதெல்லாம் சாத்தியமில்லை..!" "ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன. ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை.  அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.." கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை  கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர். காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால்  பிரதமராவது, பெரிய தலைவராவது ,. .. ( உள்துறை செயலாளரைப் பா

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "அரசுப் பள்ளிகளில் பயின்று 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று கணிதம் மற்றும் வணிகக் கணிதம் பாடத்தை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் 84380 02947 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ட்ஸ்ரீப்ஃட்ஸ்ரீப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலிலும் சுய விவரக் குறிப்பை அனுப்பி கலந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி 84483 86390, 84483 86392 என்ற எண்களில் மிஸ்டு கால் அளி

TNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை -பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

RTE அமலாக்கம் தமிழகத்தில் முறைப்படி செயல்படுத்தாத போது ஆசிரியர்கள் நியமனங்கள் நடந்தன. இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர அரசு ஒப்புதல் அளித்தது. TNTET நிபந்தனைகள் இவர்களுக்கு பொருந்தும் என்ற அறிவிப்பு வந்ததும் , பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் நாடினர். அதன் அடிப்படையில் சுமார் 9000  ஆசிரியர்கள் ( அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் ) TNTET லிருந்து விலக்கு பெற்றனர். மீதமுள்ள சுமார் ஆயிரத்து ஐநூறு ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள். இவர்களும் நீதிமன்றம் சென்ற நிலையில் கடந்த 07/09/18 ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.  அதன்படி இந்த அரசு உதவி பெறும் பள்ளி TNTET நிபந்தனைகள் தளர்வு சம்மந்தமான முடிவு அரசு எடுக்க நான்கு மாத கால அவகாசம் அளித்தது. தற்போது அந்த கால அவகாசம் நிறைவு பெற்று பல நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை. TNTET நிபந்தனைகள் முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டது காரணமாக சம்மந்தமே இல்லாமல் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக சிக்கலில் சிக்கித் தவிக்கும் இந்த வகை ஆசிரியர்கள் காலம் 

Sunday's Special Thought..

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது. ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான். இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்

ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர் - சாதனைப் படைத்த கிளாரி போலோசாக் !

சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் ஒருவர் நடுவராக இருக்கும் சாதனையை இன்று நிகழ்த்த இருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளாரி போலோசாக்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 31 வயதாகும் கிளாரி போலோசாக் கடந்த 2016 ஆம் ஆண்டுமுதல் பெண்கள் கிரிக்கெட்டில் களநடுவராகப் பணியாற்றி வருகிறார். 2018-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பை டி-20 அரையிறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டார். இதுவரை 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ள இவர் இன்று சர்வதேசக் கிரிக்கெட்டில் புது வரலாற்றைப் படைக்க இருக்கிறார். நடைபெற்று வரும் உலகக் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2 தொடரில் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இன்று மோதுகின்றன. அதில் களநடுவராக கிளாரி பணியாற்ற இருக்கிறார். இது குறித்து ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் 'கிளாரி போலாசாக் இண்று வரலாற்று சாதனைப் படைக்கப் போகிறார்' என அறிவித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் குறித்து பேசியுள்ள கிளாரி 'ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக இருக்கும் பல்வேறு தடைகளை உடைப்பதாக இந்நிகழ்வு இருக்கும். இதனால் ப