"ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்.. தூங்கமுடியவில்லை, எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.. முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான். "நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்.. "சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்.. "என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.. "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன.. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்த...
இந்தியா சுதந்திரம் அடைந்த 15- வது ஆண்டில், அதாவது 1962 -ல் முதன் முதலாக ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்தவர் முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன். அவர் ஒரு மிகச் சிறந்த கல்வியாளர். ஆசிரியராக பல்வேறு நிறுவனங்களில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். ஆசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது பிறந்த நாளே இந்தியாவின் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கோர்ஸ் சேர் முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் 5.9.1888ல் ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தில் பிறந்தவர். இவர் மதராஸ் பிரசிடென்சி கல்லூரியிலும், மைசூர் பல்கலைக்கழகத்திலும் பின்பு கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 14.5.1962ல் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இது இவரிடம் படித்த மாணவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அம்மாணவர்களில் சிலர் இவரை அணுகி இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் நெடுங்காலமாக ஆசிரியர் பணி செய்ததாலும், ஆசிரியர் பணிமேல் அவருக்கு ...