படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.
பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.
வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு மதிப்பு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.
பெயின்டருக்கோ அதிர்ச்சி. நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே, எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.
இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு என்றார் படகின் உரிமையாளர்.
இல்லை, சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள் என்றார் பெயின்டர்.
நண்பரே... உங்களுக்கு விஷயம் புரியவில்லை. நடந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள், என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.
நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டையைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன்.
பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.
படகில் ஓட்டை இருந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.
நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.
கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.
உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது. என்றார்.
*ஆம்.,*
யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.
*நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை/குறைகளை கவனமாக அடைப்போம். செய்வன திருந்தச் செய்வோம். அப்போதுதான் நமது ஓட்டைகளை/குறைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.*
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteதற்காலிகம், தொகுப்பூதியம் என்ன வித்தியாசம். அதே Salary தானே. ஒரு மாவட்டத்திலிருந்து இன்னெரறு
ReplyDeleteமாவட்டத்தில் ரூ.10,000/ல் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமா?
Today case enna mudivu
ReplyDelete*🔴 தற்காலிக ஆசிரியர் நியமனம்*
Delete*🔷நேற்று ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணையின் இன்றைய தீர்ப்பு என்ன?*
*முழுவிபரம்*👇
https://youtu.be/hfbEKy-OoZg
Mam, oru doubt temporary teachers ah piragu permanent pannuvangala? Ug trb thana varum nu govt court la sonnadu.so naan apply pannalal.ippa bayamaga irukku.
ReplyDeleteTrt dhan varum sir..
DeleteTemporary posts ah permanent ellam aaka mudiyathu. Don't worry..
DeleteSister. Nanum temporary post apply panla Competative exam kku padikra orey kulappama irukku
ReplyDeleteஇதற்கு ஒரே தீர்வு டெட் EXAM 2022 முடிய வேண்டும்.
ReplyDeleteதற்காலிக ஆசிரியர் நியமன வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும் மதுரை கிளை தீர்ப்பும் முரண்பட்டுள்ளதால் தலைமை நீதிபதி விசாரிப்பார்
ReplyDelete