Skip to main content

Posts

Showing posts from March, 2019

இன்றைய நற்சிந்தனை..

*எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.* *எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும்,* *நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !* *நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .* *நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள்* *அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !* *உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,* *நீங்கள் நிதானமாக இருந்தால்* *அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .* *உங்களுக்கு உதவ யாருமே* *தயாராக இல்லாத சமயத்திலும்* *நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !* *எல்லோரும் உங்களைக்கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக* *இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .* *எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள* *அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்* *அதன் பெயரே நம்பிக்கை ! ! !* *உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள்* *அழகாகதிட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .* *உங்களுடைய எல்லா முயற்சிகளும்* *தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று ந

ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ளது. இங்கு,பிளஸ் 2 முடித்தவர்கள்நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த எம்எஸ்சி (வேதியியல், கணிதம், வாழ்வியல், இயற்பியல்) மற்றும் எம்ஏ (பொருளாதாரம்) படிப்புகளும், கணிதத்தில் 5 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட்படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த முதுகலை படிப்பில் தலா 30 பேரும், பிஎஸ்சி.பிஎட் படிப்பில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். 4 ஆண்டுகளில்... இங்கு வழங்கப்படும் படிப்புகளில் பிஎஸ்சி,.பிஎட். படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரணமாக பிஎஸ்சி கணிதம் முடித்துவிட்டு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இப்படிப்பு ஒரு வரப்பிரசாதமாக

தேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளிவைக்க வேண்டும்: முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

தேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கிய நிலையில், தொடர் பணிச்சுமையால் தேர்வு முடிவுகளை ஒத்திவைக்க முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் காரணமாக ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிளஸ்2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் இப்போது தொடங்கிஉள்ளன. இதுதவிர மாணவர்களுக்கான நீட் பயிற்சி, ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி தரப்பட்டுள்ளன.இத்தகைய தொடர் பணிச்சுமைகளுக்கு இடையே ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது. இந்த சூழலில் குறைந்த கால அவகாசத்தில் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுத்துறை அழுத்தம் தருகிறது. இதற்கு சற்றே கூடுதல் அவகாசம்

சனிக்கிழமையும் பெருமாளும்..

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும்.. சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார். “அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?”

TNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 55 காலியிடங்களையும் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களையும் நிரப்புவதற்காக பிப்ரவரி16 மற்றும் 17-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள், அரசு ஐடிஐ முதல்வர், தொழில் பயிற்சி உதவி இயக்குநர், தொழில் துறை உதவி பொறியாளர் பதவிகளில் 41காலியிடங்களை நிரப்ப மார்ச் 2-ல் நடைபெற்ற தேர்வு, மாவட்டகல்வி அதிகாரி பதவியில் 20 காலியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 2-ல் நடத் தப்பட்ட தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.  உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் மார்ச் 3-ல் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவும், அதேபோல், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தில் வரைவாளர் (

பொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு

சென்னை, :தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும் நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள், 2018, ஜூனில் அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி, மார்ச், 1ல் தேர்வுகள் துவங்கின.பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, மார்ச், 19ல் முடிந்தன. பிளஸ் 1 தேர்வுகள், மார்ச், 6ல் துவங்கி, மார்ச், 22ல் முடிந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதம் நடத்தப்பட்ட பொது தேர்வுகள், எந்த குளறுபடியும் இன்றி, வினாத்தாள், 'லீக்' ஆகாமல், முடிந்துள்ளன.பிளஸ் 2 வினா தாள்கள் எளிதாக இருந்தன. ஆனால், பிளஸ் 1 தேர்வுகளில், கடின வினாக்களால் மாணவர்கள் திணறினர். பத்தாம் வகுப்பு தேர்வில், எப்போதும் இல்லாத அளவுக்கு, கணிதம், அறிவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்தன. மற்ற பாடங்கள் எளிதாக இருந்தன.இந்த தேர்வுகளுக்கான விடை தாள் திருத்தம், படிப்படியாக துவங்க உள்ளது. முதலில், பிளஸ

பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா

புதுக்கோட்டை,மார்ச்.29: பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நிறைவேற்றியதால் அப்பள்ளி ஆசிரியர்களும் ,குழந்தைகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறையுடையோர்களுக்கான அரசுப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 43 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா சென்றுள்ளார்.அப்பொழுது அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளார் .அப்பொழுது அக்குழந்தைகள் தாங்கள் கல்வி கற்க ஏதுவாக கணினி வாங்கி கொடுங்கள் அம்மா என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.உடனே அவர்களது கோரிக்கையை ஏற்று இன்று அக்குழந்தைகளுக்கு தன் சொந்த பணத்தில் கணினி வாங்கி கொடுத்ததோடு  மட்டுமல்லாமல் அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார்.பின்னர் சிறிது நேரம் அவர் கணினி வழிக் கல்வி கற்கும் முறை குறித்து  ஆசிரியர்களிடமும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.  இது குறித்

தெய்வீக்க்காவியம்!!

இன்று ஒரு தெய்வீக ஊடல் நாடகம் ச்ருங்கேரியில் நடந்தது. அதை அனுபவிக்கும் பாக்யம் எங்களுக்குக் கிடைத்தது. இதோ அந்த ஊடல். பார்வதி நாயகனான சிவன், சிவராத்திரி கழிந்து வேட்டைக்குச்சென்று தனது இருப்பிடமான கைலாசத்திற்கு திரும்புகிறார். ஆனால் உமையவள் கையிலாய வாயில் காப்போனிடம் அவரை யாரென்றே தெரியாது என்றும் எனவே கண்டவர்களையும் உள்ளே விட முடியாது என்று சொல் என்றும் அலட்சியமாக சொல்லி அனுப்புகிறாள்.  ஊடல் இருக்காதா பின்னே. வேட்டைக்குப் போய் இரண்டு மூன்று நாள் கழித்து ஆர அமர வந்தால் சிரித்த முகத்தோடு ஆர்த்தியா எடுப்பார்கள்? போனால போன இடம் வந்தால் வந்த இடம். இந்த ஈஸ்வரனுக்கு தன் மனைவி என்றால் கிள்ளுக்கீரையா என்ன? இன்று அவரை அழ விட்டுதான் உள்ளே விடுவது. இருக்கட்டும் எனக்காச்சு அவருக்காச்சு. பாத்துடலாம் என்று கருவுகிறார் தேவி. இனிதான் தொடங்குகிறது நாடகம். சமஸ்க்ருதத்தில் ஒரே பதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டல்லவா? அதை வைத்தே வார்த்தை விளையாட்டு நடத்தி ஈசனை மண்டியிட வைக்கிறாள் இமவான் மகள். பாவம் தூதுவன் பாடு திண்டாட்டம். வாயிலுக்கும் உள்ளுக்கும் இனி அவன் அலையப்போகும் கொடுமையை கற்பனை பண்ணிக்கொள்ளு

தேர்தல் முடிந்ததும் ஆங்கில பள்ளி துவக்கம்

கோபிசெட்டிபாளையம், ''தேர்தல் முடிந்து, பள்ளி துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில பள்ளி கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர், செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர்பேசியதாவது:எட்டு முதல், 10 வகுப்புக்கும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்து செல்லும், 28 லட்சம் மாணவ - மாணவியருக்கு, ஜூன்.,15க்குள் லேப்டாப் வழங்கப்படும். தேர்தல் முடிந்து, பள்ளிகள் துவங்கியதும், தமிழகத்தில், ஆங்கில பள்ளியும் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர்பேசினார்.