Skip to main content

Posts

Showing posts from January, 2021

வாழ்ந்து காட்டுவோம்..

 சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு, அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம். உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்.... சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன். புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை. இங்கு கோயில்கள், மசூதிகள்,  திருத்தலங்கள் வேடிக்கையானவை.. பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான், ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்.... ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே. காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள், கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள். மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை, ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை, சாகும்போதும் அழுகை, இடையில் எல்லாம் நாடகம்..... தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான், அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார். பால்காரரைப் பார்த்தால் பாலில் தண

7,100 பேர் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் - பிப்.13-ம் தேதிக்குள் TRB மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

  சிவகங்கையில்     அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது: ’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும். மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்

பத்தடியே போதும்..

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார் அப்போது அங்கு ஒரு பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார். நகரவாசி அந்த பெரியவரிடம் தன் சந்தேகத்தை கேட்டப் போது, பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்

9, பிளஸ் 1 பள்ளி திறப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு

ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு, இரண்டு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கிஉள்ளன.  மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்., 1 அல்லது 2ல், நேரடி வகுப்புகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், இன்று அல்லது நாளை, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

TODAY'S THOUGHT..

 *ஜெயித்தவர் களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?* *💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.* *💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.* *💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.* *💪 அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.* *💪 அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.* *💪 வாய்ப்பு எங்கே??? எங்கே??? என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.* *💪 வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.* *💪 உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.* *💪 தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.* *💪 அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.* *💪 தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே??? எங்கே??? என்கிற தேடல் இருக்கிறது.* *💪 தொடர்ந்து எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.* *💪 சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப் போகும் அடக்கம் இருக்கிறது.* *💪 விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது.* *💪 அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனை

ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவிகளை தனிமைப்படுத்த உத்தரவு!!

  தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது வகுப்பறை மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேலம், திண்டுக்கல், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. தற்போது தருமபுரி மாவட்டத்திலும் பள்ளி ஆசிரியை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்கோடு அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடந்த ஜனவரி 21ம் தேதி பணிக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு உடல்நிலை ச

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்!!

 "ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.. இதோ அதற்கு ஓர் உதாரணம்: அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். ""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். ""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டி

TRB - முதுநிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு.

    அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை,  http://trb.tn.nic.in  என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

TRB - BEO Exam Result And Final Key Answer Published

  வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்! Publication of Computer Based Examination Result               As per Notification No. 13/2019, dated 27.11.2019, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for the Direct Recruitment for the post of Block Educational Officer from 14.02.2020 to 16.0.2020.              42686 candidates appeared for Block Educational Officer Examinations. The Tentative Answer Keys were published on 20.02.2020 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc., were invited from the candidates up to 05.30 p.m on 26.02.2020. All the representations received within the stipulated time have been thoroughly examined by Subject Experts. After thorough scrutiny, revised and Final Answer Key has been arrived. Based on

மதிப்பு..

 தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் இறைவனிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள் என்று கேட்டான்..? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். இறைவன் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான். மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த நம் நண்பன் இறைவனிடம்  நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு இறைவன் பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு  கொடுத்தனர். ஆனால், கடைச

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

    நடப்பாண்டு நடக்கும் பொதுத்தேர்வில் கொரோனா தொற்றின் காரணமாக, மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் சென்ற 19ஆம் தேதி செயல்பட ஆரம்பித்தன. பொது தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 ,மற்றும் ௧௨,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு சுமார் 25 மாணவர்கள் இருக்கலாம், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தெர்மல் ஸ்கேனர் மூலமாக வெப்பநிலை பரிசோதனை, போன்ற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், தொற்று காரணமாக ,எந்த ஒரு பொது தேர்வும் ரத்தாகாது என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார் செங்கோட்டையன். ௧௦, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தொற்றின் காரணமாக இந்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்

மாற்றி யோசிப்போம்..

               ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா???  ஒரு நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை  என்று அறிவித்தது... அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு  வந்திருந்தார்கள்... அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார  வைத்தார்கள்... அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது... இப்பொழுது அந்த  நிறுவன மேலாளர்  பேசினார்.. இந்த வினாத்தாளில் பத்து  கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்... அதற்க்குள் இந்த  வினாக்களுக்கு நீங்கள்  பதிலலிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்  என்றார். ஐந்து நிமிட நேரம்  ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர்.  நேரம் முடிந்த பின்... அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்.. விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும்  நேரம்  குறைவாக  கொடுத்து விட்டீர்கள்... எங்களால் ஐந்து  கேள்விகளுக்கும், ஏழு  கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தா

பிப்ரவரி முதல் 9,11-ம் வகுப்புகள் ஆரம்பமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    பிப்ரவரி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் தொடங்குமா? என்பதை தமிழக முதல்வர் தான் முடிவு செய்வார் என ஈரோட்டில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் சமீபத்தில்தான் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் பிப்ரவரி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனடிப்படையில் பிப்ரவரி முதல் 9, 11ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பிப்ரவரி முதல் 9 11ஆம் வகுப்பு சிறப்பு குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார் என்றும் விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் கூறியுள்ளார்

TODAY'S THOUGHT..

               ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!. வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!. போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்... இப்படியாக!. அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப்போகிறான். "இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!" அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது... "அது மட்டுமில்லை... கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!" "சரி... உங்க

பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீடு ஆசிரியர்கள் முற்றுகை

    கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டை வீட்டை தகுதி தேர்வில் வெற்றிப்பெற்ற ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.  கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 4,500க்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்தனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் 2013ம் ஆண்டு நடைபெற்றது.  இதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (மதிப்புகாண்) வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.  ஆனால் பெரும்பாலானோருக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. தகுதிகாண் அடிப்படையில் நியமனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்குள் நியமனம் கிடைக்காவிட்டால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டி வரும் என்பதால் தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு கடந்த 7 ஆண்டுக்குள் நிய

ஒரே ஒரு முறை வாழப்போகிறோம்..

  *உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்*. "உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்." *மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*. "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது." *ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்*. "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்." *அரசியல்வாதியின் கல்லறையில்*, "தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது." *ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.* "இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்." இவ்வளவு தானா வாழ்க்கை❓ ஆம் அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான். அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினி

முதல்வன் பட பாணியில் ஒருநாள் முதல்வராகிறார் ஹரித்துவார் மாணவி!

  தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19) செயல்பட உள்ளார். ஜனவரி 24-ஆம் தேதி உத்தரகண்டின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இவர் பணியாற்ற உள்ளார். அப்போது, அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் இவர் ஆய்வு செய்கிறார். வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ள பிஎஸ்.சி. மூன்றாம் ஆண்டு மாணவியான ஸ்ரீஸ்தி இது பற்றி கூறுகையில், இது உண்மையா என்று இதுவரை என்னால் நம்பமுடியவில்லை. நான் மிகவும் உற்சாகத்தில் உள்ளேன். ஆனால் அதே சமயம், மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் எனது சிறந்தப் பணியை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இவர் ஆய்வு செய்யவிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சட்டப்பேரவையில் ஸ்ரீஸ்திதான் முதல்வராக இருந்து வருகிறார் என்பது

இன்றைய சிந்தனை..

நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைப்பது நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்... அப்பொழுதுதான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்கமுடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்... இந்த எண்ணம்தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்!, உயர உயரப் பறந்து செல்லும் பறவைகளைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான்வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்... மாவீரன் நெப்போலியனுக்கு, அவருடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைச் கூறிக்கொண்டு இருந்தார்கள்... அதனைத் தொடர்ந்து நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளை தளபதிகள் செய்திருந்தார்கள். நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது... அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்த பின்பு, குண்டு வெடித்தது. தளபதிகளின் கைகளிலிருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கிவி

10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி

    10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் இதற்காக பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள். பணியின்போது தேர்வு கட்டணமும் மாணவர்கள் செலுத்த வேண்டும். இந்த பணிகளின் போது சமூக இடைவெளி  கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Teachers Wanted - Permanent Govt Aided School - Last Date To Apply 27.01.2021

  ஆசிரியை தேவை நிரந்தரப்பணியிடம் ( அரசு நிர்ணய ஊதியம் ) வ.எண் . விபரம் இனம் கல்வித்தகுதி வேதியியல் முதுகலை M.Sc .. 1 . Oc . ( Chemistry ) பட்டதாரி ஆசிரியை B.Ed. , தகுதியுள்ள ஆசிரியை தங்களது கல்விச்சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கவும் . கடைசி தேதி : 27.1.2021 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலர் , பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருமங்கலம் 625706 .

வாழ்க்கை நிலையற்றது..

 150 வருடங்களாக காபி எஸ்டேட் வைத்து வாழ்ந்த செல்வ செழிப்பான குடும்பம்..Born with Golden Spoon..... அதிலிருந்து வந்து.. ஒரு ஜெர்மானிய காஃபி அவுட்லெட் செயின் கண்டு inspire ஆகி, நாமும் நம் நாட்டில் அப்படி ஆரம்பித்தால் என்ன என யோசித்து.. 1994ல் பெங்களூரில் முதல் அவுட்லெட் ஆரம்பித்தார், with a tag line  "A Lot Can Happen Over A Cup Of Coffee"... அது அப்படியே வளர்ந்து...இந்தியா முழுவதும் இருநூறு நகரங்களில்..1850 கஃபே காபி டே #CCD அவுட்லெட் வைத்த one of the most powerful indian business men , இந்த சித்தார்த்தா... இதல்லாமல் வெளிநாட்டிலும் சில நகரங்களில் அவுட்லெட் உண்டு... 2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்.. இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.. ஆறு நாடுகளில், ஒரு நாளைக்கு 18 கோடி கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா... வாழ்க்கையில் தொழிலில்... தோற்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு... ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிறார்... பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத

News about TNTET..

 TET news published in newspapers.. The News is so irrelevant in both editions.. Its just manipulation and interpretation of the reporters..

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

  தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். ஆசிரியர் தேர்வு: கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியி

கடவுள்..

 கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.....!! பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.....!! கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ...... அதேபோல ராணியாருக்கும், மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் மக்கள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும் என்று ஆவலான வரத்தை கேட்டான். இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும், மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.....!! "அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை , அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா.. காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்.....! மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்..  மலையை நோக்கி புறப்பட்டான்....! அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்....! சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன....! உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத

பள்ளி வேலை நாள் எத்தனை நாள் ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

  ‘  ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-  கொரோனா வைரஸ் உள்ள காலத்தில்கூட துணிந்து, நேற்று (நேற்று முன்தினம்) பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் நாளே 92 சதவீத மாணவர்கள் வந்துள்ளனர். ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் பள்ளிகள் நடைபெறும். அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும். பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாளும் பொதுத்தேர்வும் இருக்கும் என்றார்.

நாலுபேர்..

 முகத்தில் புன்னகையோடு வலம்வந்தேன்       "கள்ளச்சிரிப்பு "என்றார்கள்.. கோபக்காரனானேன் " உம்மணாம் மூஞ்சி" என்றார்கள்.. அதிகம் பேசாமலிருந்தேன் " ஊமையன்" என்றார்கள்.. சளசளவென்று பேசினேன் " வாயாடி " என்றார்கள்.. புதிய தகவல்களை பரிமாறினேன் " கருத்து கந்தசாமி " என்றார்கள்.. அவர்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்த்தேன் " ஜால்ரா " என்றார்கள் எல்லா செயல்களிலும் முன்நின்று செய்தேன் " முந்திரிக்கொட்டை" என்றார்கள்.. அவர்களைப் பின் தொடர்ந்தேன் " பச்சப்புள்ள" என்றார்கள் யாரைப்பார்த்தாலும் வணங்கினேன் " கும்பிடு கள்ளன் "என்றார்கள் வணங்குவதை நிறுதினேன்   "தலைக்கனம்" என்றார்கள் ஆலோசனை வழங்கினேன் " படிச்ச திமிர்" என்றார்கள் சுயமாக முடிவெடுத்தேன் " அதிபுத்திசாலி " என்றார்கள் நான் அடிக்கடி அழுததால் "இவனிடம் கவனம்" என்றார்கள் நான் சிரித்தபோதெல்லாம் "மறை கழண்டுப்போச்சி" என்றார்கள் எதிர்கேள்வி கேட்டால் "வில்லங்கம்"என்றார்கள் ஒதுங்கி இருந்தால் "பயந்தாங்கொள்ளி &quo