Skip to main content

TODAY'S THOUGHT..

              


ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!.

வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!.

போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்... இப்படியாக!.

அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப்போகிறான்.

"இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!"

அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது...

"அது மட்டுமில்லை... கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!"

"சரி... உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்!.

சொல்லி முடித்தவுடன்... மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது... அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச்சென்றது!.

அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்!.

"இதென்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்?. பார்க்கலாம்! எவன் இதில் ஜெயிக்கிறான் னு?" “நிச்சயமா எவனாலும், முடியாது!” என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்!.

அப்பொழுது,…

திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்!.

அத்தனை பெரும் மூச்சுக்கூட விட மறந்து,.. உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்!.

அந்த இளைஞன்,.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி, வெட வெடவென நின்றான்!.

பணக்காரனால், தன் கண்களை நம்பமுடியவில்லை.!

"பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல,.. உனக்கு என்ன வேணுமோ கேளு!
நான் தர்றேன்! எதுவாக இருந்தாலும்!"

அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை!
வாய் தந்தியடித்தது, மிரட்சியில்!
கண்கள் அரண்டு போய் இருந்தது!
பின், ஒருவித வெறியுடன்...

"அதெல்லாம் இருக்கட்டும்...
என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்!!!

நீதி-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை... உன் திறமை என்னவென்று, உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்,.. என்பதும் புரியவரும்!!!)

நீதி-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்... உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)

நீதி-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான், நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!

நீதி-4 :
சிலருக்கு,.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப்பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்.

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. அமைச்சர் வீட்டுக்கே குடி போனாலும் ஒன்னும் நடக்காது

  ReplyDelete
 3. நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே! பல பேர்களுக்கு தேவையான வார்த்தை

  ReplyDelete
  Replies
  1. உனக்கு தான் முதல்ல தேவை.

   Delete
 4. 2013 Above 90 தேர்வர்களுக்கு குறைந்தபட்ச பணியிடங்களை நிரப்ப ஆலோசனை

  ReplyDelete
  Replies
  1. Trt தான் வரும், அமைச்சர் உறுதி

   Delete
  2. 2013 டெட்பணி நியமனம் விரைவில் பாலிமர் நீயுஸ் பா௫ங்க டீஆா்டி 100℅வராது

   Delete
  3. Polimer channel oru fake channel..

   Delete
 5. கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் காலங்களில் படப்படியாக பணிகள் வழங்கப்படும் - ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி

  ஆதாரம் : பாலிமர் செய்தி நேரம்:10.04AM

  ReplyDelete
 6. Annual planner ready....any time release trb....planner la trt exam um ullathu......no any method only trt for tet passed candidates in admk govt.....

  ReplyDelete
  Replies
  1. அப்படியே என்ன என்ன தேர்வு அட்டவணையில் இடம் பெற்றுள்ளது என்று சொல்லுங்க sir, தேர்வுக்கு படிக்க useful ல இருக்கும்

   Delete
  2. Sir if dmk comes no trt???

   Delete
  3. Yaar vandhalum TRT dhan, incase dmk vandha seniority marks add agalam final calculation la..

   Delete
  4. ௭ன்ன சண்முகம் சாா்2மாதம் ஆளையே காணம் பேப்பர் ல ஒ௫ வாரத்திற்கு முன் வந்த நீயுஸ் இப்பதான் பாத்தீங்களா? இன்று பாலிமர் நீயுஸ் பா௫ங்க புரியும்

   Delete
  5. Enna SK unga second list madhiri illa TRT.. Unknown nu comments potalum yaarunu ellarukkum theriyum.. Aduthavangala criticise panra madhiri comments avoid panradhu naladhu illana oru comment yum publish agathu..

   Delete
  6. யோவ் sk உனக்கு எல்லாம் வேற வேல இல்லையா. செகன்ட் லிஸ்ட்னு சொல்றதோட நிறுத்திக்கணும்

   Delete
 7. Arul Anna......
  Ivanga ipdi soliye irka 2month a otidanumnu plan panitanga pola....

  ReplyDelete
  Replies
  1. மதிப்பிற்குரிய சகோதரி ரதிமணி அவர்களே Annual planner வந்தால் ஒரு முடிவு தெரிந்து விடும் அது வரை காத்திருப்போம்

   Delete
 8. Good evening admin madam. TRB (English) exam eapadi Ellam ready aagalam ungaloda thought pls

  ReplyDelete
  Replies
  1. Hi Suresh sasi sir..

   Endha subject ah irundhalum, first previous year question paper gather pannikonga.. 5years varaikkum iruka question paper gather pannitu, unit wise marks weightage epdi irukunu analyse pannunga accordingly prioritize the units for your preparation..

   And when you are studying try to take notes.. Try to study as a student as well as a teacher.. Try to test your level with simple slip tests.

   All the best..

   Delete
 9. ஏம்மா புத்தகசாலை Admin எல்லாமே Fake news Fake Channel Fake news னா நீங்க சொல்றது Fake ஆ இருக்காதா? நடுநிலையா பதிவிடுங்க உங்க பதிவு ஊக்கமா இருக்கட்டும். - சாமி தேனி

  ReplyDelete
  Replies
  1. Mr. Sami

   Polimer tet porutha varaikum ethannayo time thappu thaappa dhan news potrukanga, idhu ella tet candidates kum theriyum. Recent ah kuda orey news ah puthiya thalaimurai and news7 vera madhiri potrundhanga but polimer avanga ishtathuku oru news potut apuram change pananga.

   Oru vishayam pathi theriyalana pesadhinga..

   Nadunilaya pesradhala dhan solraen polimer fake nu..

   Delete
  2. செம்மயா சொன்னிங்க அட்மின் மேடம்

   Delete
  3. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

   Delete
  4. Good reply admin sister

   Delete
 10. எப்படியும் Exam வாய்ப்பில்லை என்பது எனது எண்ணம் Election குமுன் ஏதாவது அரசு செய்யும் நல்லது நடக்கட்டும்

  ReplyDelete
 11. Annual planner ADMK govt vitta avangalukku endha use um illa...

  So wait

  Direct posting tha vaippu irukku....


  No exam , No trt

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.