Skip to main content

Posts

Showing posts from October, 2026

100 ஒட்டகங்கள்!!!!!

 "ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்.. தூங்கமுடியவில்லை, எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே  முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.. முனிவர் அவனிடம்  "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான். "நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்.. "சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்.. "என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.. "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன.. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்த...

பள்ளிகளில் தேவை மீண்டும் நல்லொழுக்க வகுப்புகள்!

  இந்தியா சுதந்திரம் அடைந்த 15- வது ஆண்டில், அதாவது 1962 -ல் முதன் முதலாக ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்தவர் முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன். அவர் ஒரு மிகச் சிறந்த கல்வியாளர். ஆசிரியராக பல்வேறு நிறுவனங்களில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். ஆசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது பிறந்த நாளே இந்தியாவின் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கோர்ஸ் சேர் முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் 5.9.1888ல் ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தில் பிறந்தவர். இவர் மதராஸ் பிரசிடென்சி கல்லூரியிலும், மைசூர் பல்கலைக்கழகத்திலும் பின்பு கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 14.5.1962ல் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இது இவரிடம் படித்த மாணவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அம்மாணவர்களில் சிலர் இவரை அணுகி இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் நெடுங்காலமாக ஆசிரியர் பணி செய்ததாலும், ஆசிரியர் பணிமேல் அவருக்கு ...

TRB - 50 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனப் பட்டியல் - Newly Selected Teachers List

SGT - ADDL_CANDIDATES LIST - Pdf கடந்த 2025 ஆண்டு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், குறைந்த ஊதியம் என்பதால் பணியில் சேராத / பணி துறப்புசெய்த காலியாக உள்ள  இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 50 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே வெளியிட்ட காத்திருப்போர் பட்டியலில் (Reserve List) இருந்து, பணியில் சேராத அல்லது பணியில் சேர்ந்த பின்னர் பணித்துறப்பு செய்தவர்களால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தற்காலிகத் தெரிவுப் பட்டியலை 15.10.2026 அன்று வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள், ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களின் அதே இனச்சுழற்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்து நிரப்பப்படும். மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில், விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் உரிய விதிகளின்படி பணி நியமன ஆணைகளை வழங்குவார்கள். முக்கியமான செய்தி: இது புதிதாக நடத்தப்பட்ட தேர்வு அல்ல. ஏற்கெனவே வெளியிடப்பட்ட காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டு, காலிய...