NLC Jobs; என்.எல்.சி. வேலை வாய்ப்பு; 1067 பணியிடங்கள்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1067 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 09.11.2026 கடைசி தேதியாகும்.
Trade Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை: 700
Fitter - 125
Turner - 45
Mechanic (Motor Vehicle) - 110
Electrician - 125
Wireman - 110
Mechanic (Diesel) - 5
Stenographer - 20
Welder - 120
Computer Operator and Programming Assistant (COPA) - 30
Refrigeration and Air Conditioning Mechanic - 10
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 12,000
GRADUATE (NON ENGINEERING) APPRENTICES
காலியிடங்களின் எண்ணிக்கை: 367
B.Com - 70
BBA - 72
BSc. Computer Science - 93
BCA - 45
BSc. Geology - 14
BSc. Micro Biology - 5
BSc. Chemistry - 26
B.Pharm (Allopathy) - 3
B.Pharm (Ayurveda) - 3
BSc. Nursing – 36
கல்வித் தகுதி: மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 14,174 – 16,678
வயது தகுதி: 30.10.2026 அன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.கல்வி வளங்கள் தேடு
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://nlcindia.in/website/en/careers/trainees_apprentices.html என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2026
Comments
Post a Comment