Skip to main content

Posts

Showing posts from July, 2021

TODAY'S THOUGHT..

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழ

FLASH NEWS

PGTRB EXAMS TO BE CONDUCTED ONLINE..

அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் பேட்டி!

  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.  பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.  அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி, கல்லூரிகள் ஆக. 20ம் தேதிக்கு பின்னர் திறக்க வாய்ப்பு..!

  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பரவலின் இரண்டாவது அலை சற்று தணிந்துள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த பள்ளி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலனை நடைபெறுகிறது" என்று கூறியிருந்தார். இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ஆகஸ்ட் 15ம் தேதி முதல்வரின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு வெளியாகலாம்

உள்மனம்..

அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள். உங்களுக்குப் பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்களாம். ஊருக்குச் செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக் கொள்வார்கள். எந்த ஊருக்குப் போக வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..,. அது போல ஏதோ சோற்றுப் பாட்டிற்கு வேலை என்று, ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரி தான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர். வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையைக் கேட்டுப் பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த உலகம் நம் காதுபட சதா சொல்லி கொண்டு இருக்கிறது. அரசாங்க வேலைக்குப் போ.... நிறைய சம்பளத்துடன் மற்ற வகையில் நிறைய கிம்பளம் கிடைக்கும் என்று.. நல்ல இடத்தில் இருந்து பெண் கொடுப்பார்கள். சொந்தத் தொழில் இறங்கு. ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். நமக்கோ வாலிப வயசு, அனுபவமோ இல்லை. பெரியவர்களைச் சார்ந்தே பழகி இருக்கிறோம். எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்துக் கொள்கிறோம். பின் கொஞ்ச ந

பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

  பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறித்த விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளையும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

TODAY'S THOUGHT..

ஒரு குடிகாரனை சந்தித்த பாதிரியார் அவனை திருத்த எண்ணி அவனிடம் பேசினார், "தம்பி! குடிகாரர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. குடிக்காத உன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நீ மட்டும் தனியாக நரகத்தில் இருப்பாய்!" அந்த குடிகாரனுக்கு கண்களில் நீர் கோர்த்தது. தழுதழுத்த குரலில் பாதிரியாரிடம் கேட்டான், "சாமி! வெறுமனே குடிக்கிற நானே நரகத்துக்குப் போவேன்னா எனக்கு மது விற்ற கடைக்காரன், ஊற்றி கொடுத்தவன், அந்த மது பாட்டில்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?" குடிகாரன் திருந்தி வருவதில் பாதிரியாருக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. உற்சாகமாக பதிலளித்தார், "அந்த மது பாட்டில்கள் உட்பட அவர்களும் உன்னுடன் நரகத்தில் தான் இருப்பார்கள்" மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டு குடிகாரன் மீண்டும் கேட்டான், "அப்படீன்னா அந்த மதுக் கடைக்கு வெளியே சிக்கன் வறுக்கிறவன், அந்த சிக்கன், அதெல்லாம் ...?" குடிகாரன் பாதிரியார் வழிக்கு வருவதை உணர்ந்த பாதிரியார் துள்ளி குதித்து பதில் சொன்னார், "அந்த சிக்கன் உட்பட வறுக்கிறவனும் அடுப்போடும், எண்ணை சட்டியோடும் நரகத்தில் உ

தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆய்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

    சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி 'சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்' என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களைப் பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக அவற்றை விற்று விடுவதாகவும் வாதிட்டார். மேலும் அவர், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் யோசனை த

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் - பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை

  தமிழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த 576 தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு, உடனடி யாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க,நடுநிலை, அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. மாண வர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரி யர்கள் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமும் நியமிக்கப்பட்டு வருகின்ற னர். இதுதவிர உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி என பல்வேறு சிறப்பு ஆசிரியர் நியமனமும் நடை பெற்று வருகிறது. காலியாக உள்ள தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அறிவிப்பு வெளி யானது. இதனைத்தொடர்ந்து நடப்பாண்டு (2021) பிப்ரவரி மாதம் சான்றி தழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில், பணி நியமன ஆணை ஏதும் வழங்கப்படவில்லை. எனவே, இதனை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள்கழ கத்தின் மாநில பொதுச் செயலாளர் அப்துல்ரஹ் மான் கூறுகையில், “தமிழக அரசுப்பள்ளிகளில் காலி யாக உள்ள

இன்றைய சிந்தனை..

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார் இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார் அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அத

அமைச்சரின் பேட்டி..

Thanks to Su.Ra sir..

TRB தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி துவக்கம்!

  தமிழகத்தில் நடைபெறும் டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார். TRB தேர்வு வினாத்தாள் தயாரிப்பு : கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றனர். இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்படவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி துறை சார்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேரரிசியர்கள் மற்றும்

கொடுப்பவர் அல்ல கடவுள், கொடுக்க வைப்பவர் தான் கடவுள்..

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை! ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான். ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்துவந்தார்கள். அரசன் அவர்களிடம், "இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரைச் சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்த காரணம் என்ன?", என்று கேட்டான். அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், "அரசே! இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான்! இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும்! அதனால் தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன்!", என்றான். மற்றொரு பிச்சைக்காரன், "அரசே!

அரசுப் பள்ளிகளில் 2.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் - கல்வி அமைச்சர்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ''கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாங்களே புதுமையான முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறோம். பள்ளிகளைத் திறந்தால்தான் மாணவர்கள் படிக்க முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. ஏற்கெனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கல்வியை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். 2020- 21ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 2.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூலை 24-ம் தேதி வரை தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்''. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

G.O 75-அரசுப் பணிகளில் சேர்வதற்கும் உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!!

அரசுப் பணிகளில் சேர்வதற்கும் உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!!!   Click here to download the G.O

பிரேக்குகள்!!

 ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம்  “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” என்று கேட்டார். பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. "நிறுத்துவதற்கு" “வேகத்தைக் குறைப்பதற்கு" “மோதலைத் தவிர்ப்பதற்கு " "மெதுவாக செல்வதற்கு" "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது

ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

  ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.  த மிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ.மாயவன், மாநில நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், எஸ்.சேதுசெல்வம், சி.ஜெயகுமார், முருகேசன், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:  நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு நடத்த இயக்குனர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. பொதுக் கலந்தாய்வின்போது பொது மாறுதலில் கலந்து கொள்வதற்கு ஓர் இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிபந்தனையை அகற்றி, ஓராண்டு பணிபுரிந்து இருந்தாலே போதும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  உபரி பணியிடத்தால் மாறுதல் வழங்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் கணவன், மனைவி ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.  முற்றிலும் கண் பார்வையற்றவர்களுக்கு, 3 சக்கர வண்டியை பயன்படுத்தும் மாற்றுத் தி

SUNDAY'S THOUGHT..

 "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா?  முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அ

ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்க கூடாது..

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர். அ.மாயவன் அவர்கள்,மாநிலத் தலைவர் திரு சு.பக்தவச்சலம் அவர்கள் பொதுச் செயலாளர் திரு. சா.சேது செல்வம் அவர்கள் பொருளாளர் திரு.சி.ஜெயக்குமார் அவர்கள் அனுப்பிய கடிதம்..

படித்ததில் பிடித்தது..

*தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல.. அந்த காயத்தை கடந்து வந்ததை எண்ணி பெருமைப்படுவதற்கு..!!* *இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டாலும்.. புன்னகை செய்யுங்கள்; புன்னகையின் அடுத்த நிலை தான் வெற்றி..!!* *பேராசைக்கும், இலட்சியத்திற்கும்கொஞ்சம் தான் வித்தியாசம்.. முயற்சி இல்லாத கனவு பேராசை..! முயற்சியுடன் கூடிய கனவு இலட்சியம்..!!* *வாழும் காலம் சிறிது என்பதால் நேரத்தை விரயம் செய்யாதீர்..!வெற்றி தொலைவு என்பதால் முயற்ச்சியை கைவிட்டு விடாதீர்..!!* *உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ.. அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள்....!பொருளானாலும் உறவானாலும்....*    *அதையே நினைத்து  உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர் ......!அதனால் பாதிக்கப்படுவது  நீங்கள் மட்டுமே...!* *உங்கள் கவுரவம் வேறெங்கும் இல்லை..! உங்கள் நாக்கின் நுனியில் தான் உள்ளது..!!* *நம்பிக்கை இழந்தவர் வெல்வது கடினம்..!நம்பிக்கையோடு இருப்பவர் வீழ்வது கடினம்..!!* *உங்கள் எதிரிகளை கவனியுங்கள்.. அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்..!!* *அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.. வாழ்க்கை என்ற

2013 டெட் தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு!!

 2013டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வெயிட்டேஜ் முறையினால் வாழ்வாதாரம் இழந்து விட்டதாக தேர்வர்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

2013 ஆசிரியர் தகுதி தேர்வு!!

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு பி.கே.இளமாறன் 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்ற ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய சிந்தனை..

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது. *என்ன நடக்கும்?...* *மான் பிழைக்குமா?...* *மகவை ஈனுமா?...* *மகவும் பிழைக்குமா?...* *இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...* *வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...* *புலியின் பசிக்கு உணவாகுமா?...* பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம். *மான் என்ன செய்யும்?...* மான் தன் கவனம் முழுதும், தன் மகவை

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக மாற்ற திட்டம்?

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக, 2020ல் அதிகரிக்கப்பட்டது.  ஆட்சி மாற்றம் அதன்பின் கடந்த பிப்ரவரியில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.தற்போதைய தி.மு.க., அரசு, ஓய்வு பெறும் வயது 60 என்பதை, ஏற்கனவே இருந

குப்பை வண்டிகள்..

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான். இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்

அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1

  மத்திய அரசு சமீபத்தில் இந்தியப் பள்ளிக் கல்வித்துறையின் 2019-20-ம் ஆண்டுக்கான 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையில் மாநில வாரியாக இந்திய பள்ளிகளின் நிலை, மாணவ / மாணவியர்களின் சேர்க்கை விகிதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம், இடைநிற்றல் விகிதம், கழிப்பறை வசதி என பல்வேறு வகையான தகவல்கள் இருந்தன. அதில் இந்தியாவில் 22 சதவிகிதம் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதியும், 30 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே கணினி வசதியும் உள்ளதென கூறப்பட்டுள்ளது. இந்தத்தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும், கல்வியின் தரத்திலும், சுகாதாரத்திலும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் செயல்பாடு குறித்து விரிவாக அலசினோம். அதன்முடிவில் நமக்கு தெரியவந்த தரவுகள் பற்றி இங்கு விரிவாக காணலாம். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 7,78,842 தொடக்கப் பள்ளிகள், 4,43,643 நடுநிலைப் பள்ளிகள், 1,51,489 உயர்நிலைப் பள்ளிகள், 1,33,734 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 15,07,708 பள்ளிகள் உள்ளன. அதி