Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு குடிகாரனை சந்தித்த பாதிரியார் அவனை திருத்த எண்ணி அவனிடம் பேசினார்,


"தம்பி! குடிகாரர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. குடிக்காத உன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நீ மட்டும் தனியாக நரகத்தில் இருப்பாய்!"

அந்த குடிகாரனுக்கு கண்களில் நீர் கோர்த்தது. தழுதழுத்த குரலில் பாதிரியாரிடம் கேட்டான்,

"சாமி! வெறுமனே குடிக்கிற நானே நரகத்துக்குப் போவேன்னா எனக்கு மது விற்ற கடைக்காரன், ஊற்றி கொடுத்தவன், அந்த மது பாட்டில்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?"

குடிகாரன் திருந்தி வருவதில் பாதிரியாருக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. உற்சாகமாக பதிலளித்தார்,

"அந்த மது பாட்டில்கள் உட்பட அவர்களும் உன்னுடன் நரகத்தில் தான் இருப்பார்கள்"

மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டு குடிகாரன் மீண்டும் கேட்டான்,

"அப்படீன்னா அந்த மதுக் கடைக்கு வெளியே சிக்கன் வறுக்கிறவன், அந்த சிக்கன், அதெல்லாம் ...?"

குடிகாரன் பாதிரியார் வழிக்கு வருவதை உணர்ந்த பாதிரியார் துள்ளி குதித்து பதில் சொன்னார்,

"அந்த சிக்கன் உட்பட வறுக்கிறவனும் அடுப்போடும், எண்ணை சட்டியோடும் நரகத்தில் உன்னுடன் இருப்பார்கள்"

இப்பொழுது அந்த குடிகாரன் மிக உற்சாகமாக சொன்னான்,
"அப்போ நரகத்துக்கு நான் போக தயார் சாமி! நீங்க சொன்ன ஆளுங்களும், ஐட்டங்களும் என்னோடு இருக்கும் போது அந்த இடம் நரகமாவா இருக்கும்? தானா சொர்க்கமா மாறிடாது? எங்கே நான் மட்டும் தனியா இருக்கணுமோன்னு பயந்து அழுதேன்.

உங்க விளக்கத்தை கேட்ட பிறகு தான் திருப்தியா இருக்கு. இனிமேல் எந்த பயமும் கவலையும் இல்லாம நிம்மதியா குடிச்சுட்டு நரகத்துக்கு போய் சந்தோஷமா இருப்பேன் சாமி!"

Moral: Whatever may the problem, the way you handle it plays an important role.. So try to grasp the positive side of problems to make them your favourable situations..


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. I am new our website good morning to all

    ReplyDelete
  3. Madurai corporation school la 6 th mattum 600 students senthu irukkangalam
    Totala antha schools la mattum 2000+ students new va senthurukkanga
    Athuvum English medium la
    Today thanthi news

    ReplyDelete
  4. Government schools English medium ku epdi teachers appoinment pandranga mam

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Eng medium ku nu thaniya edhum appointment start panalayae.. Panna namakku ellam chance kedaikkum..

      Delete
    2. ஆங்கில வழி கல்விக்கென்று தனியாக ஆசிரியர் நியமனம் நடைபெறும் போது ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்ட ஆசிரியர்களுக்கு
      இடைநிலை மற்றும் பட்டதாரி பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்குமா?

      Delete
  5. Students teachers ratio class wise evlo mam

    ReplyDelete
  6. https://youtu.be/r4G0Woz9fpY

    ReplyDelete
  7. Enna.mam oru nal3.5 lakhs students 5days kalichu 2.04 lakhs students ippo 6 lakhs students
    Aga motham ethana per than government schools la senthurukkangalo

    ReplyDelete
  8. பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறித்த விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்

    ReplyDelete
  9. https://youtu.be/9UeIO8IyYL0

    ReplyDelete
  10. https://youtu.be/lRxhDE_DllI
    Ithu NAdanthal magilchi

    ReplyDelete
  11. Admin madam சொன்னாங்க

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு சண்டைக்கு டாபிக்

      Delete
    2. Ivlo nal wait pannitom innum konja nal la therinjudum DMK oda tet n kolgai mudivu enna nu

      Delete
  12. Trt vara chances athikam

    ReplyDelete
    Replies
    1. Sonna neenka othukkava poriga..varathunu vampu pesuviga.

      Delete
  13. 💯 சதவிகிதம் trt வர வாய்ப்பில்லை. பொருத்திருந்து பாருங்கள்.

    ReplyDelete
  14. கல்வி அமைச்சர் தினமும் பேட்டி தருகிறார்.
    Surplus உள்ளது என்கிறார்.
    பணிநிரவல், surplus க்கு பிறகு காலி பணி இடம் நிரப்பபடும் என்கிறார்

    Surplus மற்றும் vacancy எண்ணிகை கண்டிப்பாக அமைச்சர்க்கு தெரியும்.
    ஆனால் ஏன் சொல்ல மாட்டீங்கராங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..