Skip to main content

Posts

Showing posts from September, 2019

Video Conference Details

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵 *அனைவருக்கும் வணக்கம்* *கடந்த 13 9 2019 அன்று* *வீடியோ கான்பரன்சிங் மூலம்* *இயக்குநர்* *தொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள்* *அதில் கீழ் கண்டவைகள் அறிவுறுத்தினார்கள்* 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵 👇👇👇👇👇👇👇👇👇👇👇 1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும். 2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான கதைகள் கூறவேண்டும். 3.தமிழக அளவிலும் தேசிய அளவிலும் நடத்தும் தேர்வுகளில் நிறைய பேர் வெற்றி பெற உழைக்க வேண்டும். 4.இந்த வாரம் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இன்ஸ்டால் செய்து அதனை சோதனை செய்து பார்க்க வேண்டும். 5.அதற்குத் தேவையான அந்தந்த ஆசிரியர்களுக்கு உள்ள பர்சனல் டீடைல்ஸ் ஆபீஸ் டீடெயில்ஸ் அனைத்தும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 6. ட

PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான

TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், சிறப்பு TET தேர்வுகளும் விரைவில் நடத்த திட்டம். - கல்வி அமைச்சர் அறிவிப்பு

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்-செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உள்ளப்பூர்வ நன்றிகள் - நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதி அடைந்துள்ள 1500 TET நிபந்தனை ஆசிரியர் குடும்பங்கள்

நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் சுமார் 1500 பேருக்கும் பாதகமான சூழல் ஏற்படாமல் தமிழக அரசு கருணை உள்ளத்துடன் பாதுகாப்பு தரும் என்றார். இந்த அறிவிப்பு மூலமாக கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக நிம்மதி இல்லாமல் மன உளைச்சலுடன் இருந்த 1500 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் மனமுவந்து நன்றிகளையும், மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சருக்கும் தெரிவித்து வருகின்றனர். RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம். தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் 16/11/2012 ல் தான் தெரிவிக்கப்பட்டது. ஆக 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET பற்றிய நிபந்தனைகளை தமிழக அரசு முழுமையாக தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்தது. இதை தமிழக அரசு உதவ

எங்களின் செல்லமான மெல்லக்கற்போனே!

உன் முகவரியை வெளிக்கொணர படு பிரயத்தனம் செய்ததில் தொலைந்து போன எம் முகவரிதான் என்ன? பாடப்பகுதிகளை இலகுவாக்கி உன் பாணியில் போதிப்பதே எம் பணியானதென்ன? பள்ளிக்கு நீ வாரா பொழுதுகளில் உன் இல்லம் வந்து கட்டியிழுத்து கொணர்ந்தாலும் பல நேரங்களில் பூட்டிய உன் வீட்டின் கதவுகளும் எமை பரிகசிப்பதுதான் என்ன? ஆடி மாதம்! குல தெய்வ வழிபாடு கூழ் வார்த்தல் பொங்கல் வைத்தல் அத்தனைக்கும் முன்னிலை வகிக்கும் உன் பெருந்தன்மைதான் என்ன? எதிர் வீட்டுப் பாட்டி இறப்பு! பக்கத்து வீட்டு அக்கா வளைகாப்பு! உறவுமுறை சொல்ல தெரியாத வீட்டில் காதுகுத்து! எல்லா சுக துக்கங்களிலும் உன் பங்கேற்றலை பெருமிதப்படுத்துவதுதான் என்ன? இதையெல்லாம் தாண்டி நீ பள்ளிக்கு வருங்கால் உன்னுடனே ஒட்டிவரும் தலைவலி, வயிற்றுவலி அதிகமாய் கொஞ்சம் நெஞ்சுவலி, உன் விடுப்பு  இன்னும் முடியவில்லை என்று எம்மை உணரவைதததுதான் என்ன? எம்மை பாவம் என்று நினைத்து நீ பள்ளிக்கு வரும் தருணங்களில் எதை புரியவைப்பது எப்படி படிக்க வைப்பது என்கிற அறப்போராட்டத்தில் எம்பெயர் கூட எம் நினைவினின்று மறந்து போவதுதான் என்ன? எழுத கு

கணினி ஆசிரியர் தேர்வை ஏன் TRB தமிழில் நடத்தவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

கடந்த ஜூன் மாதம் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.அதில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன என்றும்,  தமிழ் வழியில் பயின்றோர்க்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் மொழியில் ஏன் கேள்விகள் கேட்கப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சந்திரயான் 2 தரையிறங்குவதை பார்க்கும் 60 மாணவர்கள்

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, 60 மாணவர்கள் பார்வையிட உள்ளனர்.நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22ல் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. செப்., 02ம் தேதி, விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு, தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. செப்., 07 நள்ளிரவு 1.30 முதல் 2.30 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க உள்ளது. இதனை பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார். அவருடன் சேர்ந்து பார்வையிட விருப்பமுள்ள 8 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக இஸ்ரோ சார்பில் இணையதளம் வழியாக ஆக. 10 முதல் ஆக. 25 வரை வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 10 நிமிடங்களில் 20 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் முதலிரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இஸ்ரோ மையத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திரயான் 2 தரையிறங்குவதை பார்வையிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

சவுக்கடி..

அயல் நாட்டில் மது அருந்திய குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...! . ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்.. . அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..! ஆனால் அதற்கு முன்.. அவர்கள் வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..! . முதலில் ரஷ்யன்..!! "எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..! ஒப்புக்கொள்ளப்பட்டது..! . இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..! "என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்..!" என்றான்..! . அவ்வாறே செய்யப்பட்டது..!! பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து... அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..! . அடுத்து சீனன்..!! "எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..! ஒப்புக்கொள்ளப்பட்டது..!! . இரண்டாவது... "என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!" என்றான்..! . அவ்வாறே செய்யப்பட்டது..! 15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து.. அவன் முதுகு பிளந்தது..!! . அடுத்ததாக தமிழன்..! அவன் அமைதியாக சொன்னான்.. &

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து

நாளை 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது 2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்

மீண்டும் பழமைக்கு திரும்பும், பள்ளிக்கூடங்கள்.! பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு.!

இன்றைய காலக்கட்டத்தில், உடல் வலிமை இல்லாமல் குழந்தைகள் வைட்டமின்கள் குறைபாடு உடன் காணப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் முந்தைய காலக்குழந்தைகள் போல வெளியில் விளையாடாமல் இருப்பதே.! அந்த வகையில்,மாணவர்களை மாலை நேர வெயிலில் விளையாட வைத்து வைட்டமின் டி குறைப்பாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓய்வு நேரங்கள் மற்றும் இடைவேளைகளில் திறந்தவெளி மைதானங்களில் சூரிய வெளிச்சத்தில் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதை அறைக்கு உறுதிபடுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வி இயக்குநர் அறிக்கையில் கூறியுள்ளார்.

TRB - உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் சிக்கல்? : பட்டதாரிகள் பதற்றம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள 2340 இடங்களுக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 81 பணியிடங்கள் பின்னடைவு இடங்கள். பற்றாக்குறை இடங்கள் 4, தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் 2252, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 3, என மொத்தம் 2340 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் புதிய நபர்கள் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் கடந்த 28ம் தேதி வெளியிட்டது. மேற்கண்ட உதவி பேராசிரியர் பணிகளுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் ப