இன்றைய காலக்கட்டத்தில், உடல் வலிமை இல்லாமல் குழந்தைகள் வைட்டமின்கள் குறைபாடு உடன் காணப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் முந்தைய காலக்குழந்தைகள் போல வெளியில் விளையாடாமல் இருப்பதே.! அந்த வகையில்,மாணவர்களை மாலை நேர வெயிலில் விளையாட வைத்து வைட்டமின் டி குறைப்பாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓய்வு நேரங்கள் மற்றும் இடைவேளைகளில் திறந்தவெளி மைதானங்களில் சூரிய வெளிச்சத்தில் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதை அறைக்கு உறுதிபடுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வி இயக்குநர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment