மதுரை காமராஜ் பல்கலையில் 2.85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 82 ’ஸ்மார்ட்’ வகுப்பறைகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், பல்கலையில் மத்திய அரசின் ’ரூசா’ திட்டத்தில் அமைக்கப்பட்ட இவ்வகுப்பறைளை திறந்தார். விடுதிகளில் 1.05 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 8 ’பிட்னஸ்’ மையங்கள், தலா 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் மற்றும் சரோஜினி நாயுடு பூங்காக்களையும் திறந்தார். பல்கலை வளாகத்தில் பல்வேறு பகுதியில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 23 கல்வி பூங்காங்கள் அமைக்க அடிக்கல் நாட்டினார். நாகமலை மலையடிவாரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் கவர்னர் முன்னிலையில் மாணவர்கள் நட்டனர். துணைவேந்தர் செல்லத்துரை, கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், சிண்டிகேட் உறுப்பினர் லில்லிஸ் திவாகர், டீன்கள் முத்துமாணிக்கம், பொன்னுச்சாமி, பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர். கல்வித்துறைக்கு ’அட்வைஸ்’ இதைதொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் துறைகள் வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்துவிடம் அரசு பள