Skip to main content

ரூ.2.85 கோடி மதிப்பில் ’ஸ்மார்ட்’ வகுப்பறைகள்!

மதுரை காமராஜ் பல்கலையில் 2.85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 82 ’ஸ்மார்ட்’ வகுப்பறைகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், பல்கலையில் மத்திய அரசின் ’ரூசா’ திட்டத்தில் அமைக்கப்பட்ட இவ்வகுப்பறைளை திறந்தார்.
விடுதிகளில் 1.05 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 8 ’பிட்னஸ்’ மையங்கள், தலா 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் மற்றும் சரோஜினி நாயுடு பூங்காக்களையும் திறந்தார்.
பல்கலை வளாகத்தில் பல்வேறு பகுதியில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 23 கல்வி பூங்காங்கள் அமைக்க அடிக்கல் நாட்டினார். நாகமலை மலையடிவாரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் கவர்னர் முன்னிலையில் மாணவர்கள் நட்டனர்.
துணைவேந்தர் செல்லத்துரை, கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், சிண்டிகேட் உறுப்பினர் லில்லிஸ் திவாகர், டீன்கள் முத்துமாணிக்கம், பொன்னுச்சாமி, பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கல்வித்துறைக்கு ’அட்வைஸ்’
இதைதொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் துறைகள் வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்துவிடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கேட்டார். அதற்கு 1:30 என்பதற்கு பதில் 1:18 என்ற அளவில் இருந்ததை அறிந்து, ’ஆசிரியர்கள் ’சர்ப்பிளஸ்’ ஆக உள்ளனரா,’ என கேட்டார்.
அதற்கு, ’20 மாணவர்களுக்கும் கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளிகள் இருப்பதால் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளன,’ என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ’அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,’ என அறிவுரை வழங்கினார்.
போலீஸ் விசாரணை
இதைதொடர்ந்து தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் சென்றபோது, அவரது ஜீப் டிரைவர் சரவணன் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, ’நான் கல்வி அலுவலக பணியாளர் சங்க உறுப்பினர். சங்கம் சார்பில் பதவி உயர்வு உட்பட கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவில் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால் அணிந்துள்ளேன்.அதை கழற்ற முடியாது,’ என்றார்.
மாநில பொருளாளர் துரைப்பாண்டியிடம் போலீசார் தொடர்பு கொண்டு உறுதிசெய்த பின் சரவணனை அனுப்பினர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...