Skip to main content

Posts

Showing posts from November, 2018

TODAY'S THOUGHT..

அது ஓர் அழகிய நகரம்.. அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார்.. ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.. அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம்_ *ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று கேட்டான்.. அதற்குக் காவலாளி *ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?* என்று சந்தேகத்துடன் கேட்டார்.. *ஆமாம் பெரியவரே.. நான், முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம்.. எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க.. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும், திட்டிக்கிட்டும்.. எப்படா, அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது.. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?* என்று கேட்டான்.. *நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம்.. போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும்.. நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி* _என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.._ _சிறிது நேரம் கழித்து,_ _அவ்வழியாக  வந்த வ

திருக்கார்த்திகை தீபம் அன்று திரு ஜோதி #ஏற்றுவது யார்?

அந்த உரிமை எப்படிகிடைத்தது? தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். திருவண்ணாமலை மெய்யுருக, விழியில் நீர்பெருக, உயிர் கசிந்துருக காணும் மெய்நிலையாம், அடி முடி காணாத அருட்பெரும் ஜோதியை தரிசிக்க முற்பிறவி பயன் வேண்டும். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்!நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர். திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் அவர்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர். இறைஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது? பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவ

TODAY'S THOUGHT..

ஒரு குருகுலத்தில் பல சீடர்கள் இருந்தனர்.. அனைவரும் ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுவர, ஒரு சீடன் மட்டும் கவலையோடு இருந்தான்.. துறவி அவனை அழைத்து விசாரித்தார்.._ _*குருவே! எல்லோரும் என்னை கிண்டல், கேலி செய்கின்றனர்.. தாங்க முடியவில்லை.. கோபம் தலைக்கேறுகிறது.. என்ன செய்வதென்றே தெரியவில்லை!*_ என்றான்.. _*இந்தக் கிணற்றின் கைப்பிடி சுவர் மீது ஏறி பத்துமுறை சுற்றிவா!*_ என்றார் குரு. _குரு எதற்காக அப்படிச் சொல்கிறார் எனத் தெரியாவிட்டாலும், குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கவனமாக கிணற்றுச்சுவரில், ஏறி, சிரத்தையுடன் பத்துமுறை வலம் வந்தான் சீடன்.._ _*நீ கிணற்றுச் சுவரில் ஏறி நடந்தபோதுகூட உன்னை பலர் கிண்டல் செய்தார்களே, அதைக் கேட்டாயா?*_ என்றார் குரு.. _*இல்லை குருவே! கிணற்றிற்குள் விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால்.. யார் பேசியதும் எனக்கு கேட்கவில்லை*_ என்றான் சீடன்.. குரு சொன்னார், *_ஒரு செயலில் மிக கவனமாக, உண்மையாக நாம் ஈடுபட்டிருக்கும்போது, பிறர் சொல்லும் வார்த்தை நமக்கு கேட்காது, புரிகிறதா?_* என்றார்.. *சீடனுக்கு எல்லாம் புரிந்தது!* 👇 *இவன் என்ன சொல்கிறான், அவன் என்ன சொல

தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!

அதிசயம் ஆனால் உண்மை உண்மை!!!! ப்ரகதீஸ்வரர் ஆலயம்.. தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?? இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க ! களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை ! கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். ! இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.! நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...! தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது. அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மண

புயல்..

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்? அவசியமா? சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன. புயலின் வகைகள்: புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் *சர் பிரான்சிஸ் பீபோர்ட்* 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார். இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Storm). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை. அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்

TODAY'S THOUGHT..

எது கடினம்.? புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது.......!?? புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?” புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?” புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொர