Skip to main content

திருக்கார்த்திகை தீபம் அன்று திரு ஜோதி #ஏற்றுவது யார்?

அந்த உரிமை
எப்படிகிடைத்தது?
தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை
பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

திருவண்ணாமலை

மெய்யுருக, விழியில் நீர்பெருக, உயிர் கசிந்துருக காணும் மெய்நிலையாம், அடி முடி காணாத அருட்பெரும் ஜோதியை தரிசிக்க முற்பிறவி பயன் வேண்டும்.

ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்!நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர்.

திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் அவர்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

இறைஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது?

பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்துகொள்வார்கள். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர்.

அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜனை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.

கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், #அண்ணாமலைக்கு_அரோகரா எனும் முழக்கத்தின் #புண்ணியமெல்லாம் #பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

தற்போது அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றும் பருவதராஜகுல மரபைச் சேர்ந்த அடியார் கூறியது திருவண்ணாமலை #தாமரைக்குளம் பகுதியில் வசிக்கும்  5 வழிமரபை சேர்ந்த குடும்பத்தினர்,
#சுழற்சி_முறையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் #திருப்பணியைசெய்கிறோம்.

தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் 5 பேர், ஒரு #மண்டலம் (48 நாட்கள்) #விரதமிருப்போம். தீபம் ஏற்றும் அடியார்க்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து,  மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு #மண் சட்டியில் வைத்து #சிவாச்சாரியார்கள்
#எங்களிடம்வழங்குவார்கள்.

மேளதாளம் முழங்க எங்களை மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டுசெல்வோம். மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இடுவோம். அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்போம்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிதருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே எங்கள் மரபைச் சேர்ந்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் #நாங்கள்_மகா_தீபத்தை #ஏற்றுவோம்.

மகா தீபத்தை ஏற்றும் அந்த நொடிப்பொழுது, நாங்கள் இறைவனின் திருவடியை பற்றியிருப்பதைப்போல உணர்வோம். எங்களுடய கண்களிலும் உணர்வுகளிலும் தீபம் மட்டுமே நிறைந்திருக்கும். ‘‘மகா தீபத்தை ஏற்றும் சுடரை, #சிவாச்சாரியார்களிடமிருந்து #பெற்றுச்செல்லும்
#நாங்கள், மலை மீது ஏறுவதற்கு முன்பு #பாவபிராயச்சித்தம் வேண்டுதல் நடத்துவது வழக்கம்.

திருவண்ணாமலையே இறைவன். எனவே, மலை மீது கால் வைத்து ஏறிச்செல்வது பெரிய பாவம். ஆகவே, மலையடிவாரத்தில் உள்ள குகை நமசிவாயர் கோயில் அருகில் அமைந்துள்ள #அண்ணாமலையார் #திருப்பாதத்தின் முன்பு ‘#மூவுலகை_காக்கும்_ஈசனே, #உமது_திருப்பணியை #நிறைவேற்றவே_மலை_மீது #பயணிக்கிறோம்.
#எங்களை_மலை_மீது #அனுமதியும்’ என்று
#உளமாற #பிரார்த்தித்துக்கொண்ட #பிறகே எங்கள்
#பயணம்_தொடரும்.

#தீபம் ஏற்றும் போது,
#எங்கள் மரபைச் சேர்ந்தவர்கள் #சிவபுராணம் #பாடிக்கொண்டிருப்போம். #சிவனுக்கு உகந்ததான #சங்கொலி முழங்குவோம். மகா தீபம் மலை மீது தொடர்ந்து
11 நாட்கள் பிரகாசிக்கும். #ஒவ்வொரு நாளும், #அண்ணாமலையார் கோயிலில் இருந்து
#தீபம் ஏற்றுவதற்கான
#கற்பூரம் மற்றும்
#திரியை நாங்கள் #பெற்றுச்செல்வோம்.”

மகா தீபம் ஏற்றும்போது
மலை உச்சியில் முழங்கும்
பருவத ராஜகுல மரபினர் மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது,
அவர்கள் #சங்கொலி #முழங்கும்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. gud noon Ano... Qualification for tnpsc deo recruitment pls.....

    ReplyDelete
    Replies
    1. Education Qualification

      For both, Open Market candidates and Teachers employed in recognised Aided Secondary Schools or Higher Secondary Schools Master’s Degree of any University in the State of Tamil Nadu or a Degree of equivalent standard with not less than 50% of Marks in the Master’s Degree Examination in any one of the following subjects Tamil, English, Mathematics, Physics, Chemistry, Zoology, Botany, History & Geography (Provided that a candidate possessing a Degree of M.A or M.Sc. or an equivalent degree awarded under the grading system shall not be considered eligible for appointment unless he has obtained the said degree with “ O” or “A” or “B” Grade.) and B.T. or B.Ed. Degree of any university in the State of Tamil Nadu or a degree of equivalent standard and Must have studied Tamil under Part-I or Part-II of the Intermediate or Pre-University or Higher Secondary Course.

      Selection Process

      Preliminary Examination for selection of candidates for admission to the Main Written Examination and Main Written Examination and Oral Test in the shape of an Interview.

      Delete
    2. I'm not eligible ya... Doing my 2nd yr M.Sc.....

      Delete
  3. Good morning Ano mam and all my friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..