Skip to main content

Posts

Showing posts from April, 2022

1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

  1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!   Click here to download  

TODAY'S THOUGHT..

ஏளனப் பார்வை என்னைப் பார்த்து ஏன் வீசுகிறாய்? ஆசானாக இல்லாமல் அருவம் போல் காட்சியளிக்கிறேனா? அடிமை சாசனம்  புகுத்தப்பட்ட ஆசிரியர் நான் என்பதை அறிந்து கொண்டாயா??? ஓங்கி அறைந்த உன் கைகளுக்கு பூமாலையும்  அதை  தடுக்க முற்பட்ட என் கைகளுக்கு  கைவிலங்கும் தரப்பட்ட  நீதியை நிமிடத்திற்கு ஒரு முறை அதிரடி செய்திகளாக அரங்கேற்றும் அண்ணன்மார்களை அறிந்து வைத்திருப்பதாலோ??? கால்களை என்னை பார்த்தவுடன் மடக்கி விடுவாய் என நினைத்தேன் நீட்டிய கால்களை என் கண் முன்னே நீ ஆட்டிடும் பொழுது நான் ஆடித்தான் போகிறேன் கல்வி போதிக்கும் பிச்சைக்காரனாக உணர்கிறேன்!!!! புத்தகத்தை எடு தொலைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது எழுதி போடுவதை எழுது   Note லாம் எடுத்துவரும் பழக்கமே இல்லை பாடம் நடத்த வேண்டும் அமைதி காத்திடு முடியாது என்று நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?? இப்பதில்களுக்கான என் அழுகை ஆற்றாமையின் வெளிப்பாடாக ஆதரவின்றி தவிக்கும் அனாதையாக  அல்லல்படுகிறேன்!!!! நீ அட்டையாக மாறி விட்டாய் என் சக்தியை ரத்தமாய் உறிஞ்சுகிறாய் ஓரறிவு உள்ள உயிரனமாய்  உணர்வுகளை கையாளத் தெரியாத ஒழுக்கத்தின் கதவுகளை உடைத்தெறிந்த முதுகெலு

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?!

  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தேவையற்ற வதந்திகளோ அச்சுறுத்தலையோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுப் பரவல் விஷயத்தில் அச்சப்பட வேண்டிய இடத்தில் இல்லை. அக்கறைப்படவேண்டிய இடத்தில் உள்ளோம். ராதாகிருஷ்ணன் விளக்கம் தமிழகத்தில் தற்போது 1000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால் அதில் 3 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகும். எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கரோனா உறுதியானதால் அங்கு மொத்த பாதிப்பு 111 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதால் 109 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகி

பல்வேறு பட்டப் படிப்புகள் / பட்ட மேற்படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கி அரசாணை வெளியீடு!!!

  பல்வேறு பட்டப் படிப்புகள் / பட்ட மேற்படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கி அரசாணை வெளியீடு!!!   Click here to download

தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்: பள்ளி கல்வித்துறை ஆணையர் விளக்கம்.

   தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் பள்ளி கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணையில் மூன்றாவதாக விருப்பமொழி என்ற தேர்வு கொடுக்கப்பட்டது. இது எதற்காக கொடுக்கப்பட்டது என்றால், தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்காக தான் இந்த விருப்பமொழி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர்,  தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாயமொழி தமிழ், இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது ஒவ்வொரு மாணவரும் 10-ஆம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாக கற்க சட்டப்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள், தமிழுடன் தாய்மொழியை விருப்பப்படமாக தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொழி படக் கொள்கை குறித்த உண்மைக்கு புறம்பாக தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்..

  பள்ளிக்கு வராதவனை வீடு தேடிச்சென்று அழையுங்கள், ஆனால் படிக்க சொல்லி எழுத சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்.. உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்.. மதுவருந்திவிட்டு வகுப்பிற்குள் வந்தால் அனுசரித்துக்கொள்ளுங்கள் அவசரப்பட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்.. உங்களை கம்பு & கற்கலால் அடித்தாலும், ஏன் கத்தியால் குத்தினாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு புகார் ஏதும் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்.. இத்தனையும் கடந்து நீங்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். இல்லையேல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு தரக்குறைவாக பொதுமேடையில் ஆட்சியாளர்களே உங்களை குற்றம் சாட்டுவோம் ஏனெனில் நீங்கள் தண்ட சம்பளம் வாங்கும் இரண்டாம் பெற்றோர்.. ஆம் நீங்கள் மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்..

SC/ST பிரிவினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

L SC/ST பிரிவினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Click here to download -pdf   

இயல்பு..

 நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர். உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள் .. அப்படியானால்,'' சோதனை வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்.? ஏன் உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.? இதைப் பொறுத்தவரையில், தத்துவ ரீதியாக சிந்தனையாளர் கூறும்போது,  *“எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள். உங்கள் தனித் தன்மைதான் உங்களை என்றென்றும் மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும்*. அதை மறந்தால் மானித சமுதாயத்தில் நீங்கள் சரியான ஓர் உறுப்பினராக இருக்கவே முடியாது” என்கிறார்! பல பேர் பிறரைப் பார்த்து காப்பி அடித்து’ அதுபோல் தாங்கள் இருந்தால் சிறப்புக் கூடும் என்கிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இது சரியான கருத்தல்ல என்று புரியும்! ஒரு மீன் தொட்டிக்கு அருகே ஒரு புத்த பிக்குவும் அவரது சீடரும் நின்று கொண்டிருந்தனர்.. அந்த தொட்டியின் விளிம்பிலிருந்த ஒரு தேள் தவறி தொட்டிக்குள் விழுந்தது. உடனே அந்த புத்த பிக்கு தண்ணீருக்குள் கையை விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். அப்போது அவரது கையில் தேள் கொட்டியது. மீண்டு

இன்றைய சிந்தனை..

வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது. "கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார். தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார். இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்ப

2 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்  திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட *திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அருள்செல்வம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமனம்* தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் *திரு குணசேகரன் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக* நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு  

TNTET 2022 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு ( TET ) தாள் I மற்றும் தாள் ii எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 13.04.2022 வரை பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் பற்றிய அமைச்சரின் தகவல்..

 ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என  தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப்பணியோடு சமூக அக்கறையுடன் கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியது: ஆசிரியா்கள் அனைவருமே பெருமைக்குரியவா்கள்தான்.  மாணவா்களுக்கு ஆசிரியா்கள் இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனா். சமுதாயம் அறவழியில் நடைபெறுவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதல்வா் அமைத்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகவும், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாகவும் அரசுப் பள்ளி மாணவா்கள், அரசு ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவ

SUNDAY'S THOUGHT..

 ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்...!!அதிகாலையில் எழுந்தவுடன் "சூரிய உதயத்தைப் பார்ப்பது" , அவனது வழக்கம்....!! ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது, தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது....!! கோபம் கொண்ட அரசர், பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து, தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்.....!! பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை.....!! கல கலவென சிரிக்கத் தொடங்கினான்....!! அரசருக்கு அவன் சிரிப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது ...!! மற்றவர்களுக்கு திகைப்பு...!! அரசன் பிச்சைக்காரனை      "ஏன் சிரிக்கிறாய்?" என்று கோபமாக கேட்க, பிச்சைக்காரன்,      "என் முகத்தில் நீங்கள் விழித்தால் ,    உங்களுக்கு சிறு காயம் மட்டுமே  அரசே....!!   ஆனால்,      உங்கள் முகத்தில் நான் விழித்ததால்,......    " என் உயிரே போக போகிறதே" ,...!! இப்போது மக்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்....   மன்னன் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம் என்று...!!   அரசனின் முகம் அவ்வளவு "ர

TNTET-2022- - PAPER 1 & 2 - DETAILED SYLLABUS Released by TRB!!!

TNTET-2022- - PAPER 1 & 2 - DETAILED SYLLABUS Released by TRB!!! In the Notification it is mentioned that the questions in the TNTET Paper I& II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes I to VIII with their difficulty level as well as linkages up to the Higher Secondary Stage. Now Teachers Recruitment Board releases the detailed syllabus for Paper I & II (Classes 1 – 8). CLICK HERE-PAPER-1 CLICK HERE-PAPER-2

தடுமாற்றம் வேண்டாம்..

எதன் மீதும் அதிகப் பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் பற்றுதல் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அது விரைவில் போய் விடும். காலையில் மலர்ந்த ஒரு மலர் மாலை நேரம் வந்தவுடன் விழுந்து விடும். எனவே எதன் மீதும் அதிகப் பற்றுக் கொள்ளாதீர்கள்.அப்படி அதன் மீது பற்றுக் கொண்டால் மாலையில் அங்கு துன்பம் இருக்கும். அதன் பின்னர் உங்கள் கண்களில் கண்ணீர் வரும். அதன் பின்னர் அந்த மலர் இல்லாமல் வாடுவீர்கள். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும்  தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான்.  அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா? என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற

2013 க்கு முன்பு பணியில் சேர்ந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் விஷயத்தில் Govt / Aided / Minority என்ற பாகுபாடு வேண்டாமே..! - நாளிதழ் செய்தி

  2013 க்கு முன்பு பணியில் சேர்ந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் விஷயத்தில் Govt / Aided / Minority என்ற பாகுபாடு வேண்டாமே..! - நாளிதழ் செய்தி                                  

மீள்..

 ஏன் இந்த இளமையின் இத்தனை மரணங்கள்?? பார்க்கும் பக்கமெல்லாம் இள மரணங்கள் பெருகி வருகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகளற்ற அந்நியர்களையும் உலுக்கி போடுகிறது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன.  இது விதியேயல்ல. இன்றைய மனிதனின்  அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்......  மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்... (1) உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை (2) இரவில் கண் விழித்திருத்தல் (3) காலை உணவை தவிர்த்தல். (4) ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். (5.) பணத்தை நோக்கிய ஓட்டம் (6) பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் (7)  கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல். வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள். நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது. தினமும் க

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கு விதிமுறை அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது.

 ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கு விதிமுறை அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது. ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையின்படி மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடங்கப்படும்  என்று பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர்  ஜெகதீஷ் குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.  இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், இது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை யுஜிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: * இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் இதேபோல்  ஒரே நேரத்தில்  இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய முடியாது. *  ஒரு மாணவர் ஒரே நேரத்தில் ஒரு பல்கலைக் கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக் கழகத்திலோ  2 பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், 2 வகுப்புகளின் நேரமும் ஒரே நேரத்தில் அமையாத விதத்தில் இருக்க வேண்டும்.   *  ஒரு பட்டப்படிப்பை கல்லுாரிக்கு நேரடியாக சென்றும், மற்றொரு பட்டப்படிப்பை தி

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ

9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

  9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று நடைபெற்ற சட்டப் பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் தெரிவித்தார். காலிப் பணியிடங்களில் 9,494 ஆசிரியர்கள் நியமனம் - வீடியோ

சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று (ஏப்.,11) சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்க உள்ளது. தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 6ம்தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறைக்கு பின் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. இதில், எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை, உயர்கல்வி, பள்ளிக் கல்வ

ஆசிரியர் தேர்வு வாரியம் - ( TRB ) இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் TET-Paper 1&2 -online பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.....

  ஆசிரியர் தேர்வு வாரியம் - ( TRB ) இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் TET-Paper 1&2 -online பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.....

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் அதிகரிக்கப்படும் : அமைச்சர் மகேஷ்

“தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனங்களும் அதிகரிக்கப்படும்” என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள், அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் மகேஷ் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்துகிறார். அதனால் தான் அதிகம் வருவாய் இல்லாத போதும் இத்துறைக்கு அதிகபட்சமாக ரூ.36,895 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்.மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வகுப்பறைகள் பயன்படுத்த முடியாதவை என கண்டறியப்பட்டு அவற்றை அகற்றும் பணிகள் நடக்கின்றன.  அரசு பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1500 கோடி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் புதிய கட்டடங்கள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்தப்படும்.தனியார் பள்ளி வாகனங்கள், ஓட்டுனர்கள் தகுதியை சி.இ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும்.  ஆசிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்

TET தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டதை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து, 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும், ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TODAY'S THOUGHT..

 ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள். அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம். நம்புங்கள்!!  "முயற்சி திருவினை ஆக்கும்"..

TET - இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு B.TED பட்டதாரிகள் போட்டி - D.TED முடித்தவர்கள் பாதிப்பு.

இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் பி.எட் படித்தவர்களும் தாள்-1 எழுத மாநில அரசு அனுமதித்துள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகளும் போட்டியிடுவார்கள் என்பதால் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கவலையடைந்துள்ளனர். மார்ச் 7, 2022 ம் அன்று 2019-ல் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இதுவரை, பி.எட் பட்டதாரிகள் இரண்டாம் நிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய தாள் – 2 எழுத அனுமதிக்கப்பட்டனர். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் TET தாள் – I எழுத தகுதியுடையவர்களாக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது பி.எட் படித்தவர்களும் TET தேர்வு தாள் – I எழுத அனுமதிக்கப்படுவதால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களான பி.எட் படித்தவர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் மேலும் இரண்டும் படித்தவர்களின் (D.T.Ed and UG with B.Ed) ஏதாவது ஒரு  படி

இன்றைய சிந்தனை..

 32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள். ' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் . "இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் . இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் . ' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் . ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் . எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 5 புதிய அம்சங்கள்!

  வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 5 புதிய அம்சங்கள்!  

படித்ததில் பிடித்தது..

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்