32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள்.
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் .
இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
" எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டாள்..........
" அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !" என்றார் கடவுள்!!
— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல... :-)
ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்கள் எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் !
அதுவே வாழ்வின் அர்த்தம் !!
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteDear admin any news about pgtrb result
Deleteஅன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம் .வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி 2022 சென்னையில் அனைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் அனைவரும் அரசாணை எண் 149 ரத்து செய்யக்கோரி முதலமைச்சரின் நேரடி பார்வையில் நமது கோரிக்கையினை மனு மூலமாக அளித்து பணிக்கான உத்தரவாதத்தை பெறுவதற்காக நாம் பயணத்தை கட்டமைத்திருக் கிறோம் இச்சூழ்நிலையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிப்ரவரி 28 நடைபெற்ற போராட்டம் சரியான அளவில் நாம் அனைவரும் கலந்துகொள்ளாததே பின்னடைவுக்கான காரணமாக இருந்தாலும் அது போலல்லாமல் அதனை சரி செய்து இப்போது அனைத்து சங்கங்களும் இணைந்து இப்போராட்டத்தினை நாம் சந்திக்கவுள்ளோம். ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிதமாய் வந்து நம்முடைய நிலைப்பாட்டை அரசுக்கு நியாயம் என உணர்த்திடும் வகையிலும் பொதுமக்களுக்கும் புரிந்திடும் வகையிலும் சென்னையில் அன்றொருநாள் சங்கமிப்போம் நாம் எடுக்கின்ற ஒவ்வொரு நிலைப்பாடும் ஜனநாயகத்தை ஊன்றி பிடித்து நாம் நடக்கிறோம். என்பதனையும் நாம் ஒரு போதும் சட்டத்திற்குப் புறம்பாக அரசுக்கு புறம்பாக நாம் எதையும் செய்யவில்லை என்பதை தயவுசெய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் சிலருக்கு மனதளவில் எழலாம் அரசின் கோபத்துக்கு ஆளாகி சட்ட ஒழுங்கை காரணம் என கருதி நம்மை கைது செய்வாங்க அப்படி இப்படி என்று யாராவது சிலர் *சிண்டுமுடி* வேலை செய்யலாம் அதை தயவு செய்து பொருட்படுத்தா தீர்கள் . நம்பாதீர்கள். போராட்டம் என்பது தானே உருவாகி விடாது. பாதித்த நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கான சூழ்நிலைதான் இப்போது உருவாகியிருக்கிறது.போராட்டம் உருவாகி அதன் பயனால் மட்டுமே தீர்வு பெறமுடியும் என்ற பாடத்தை காலம் நமக்கு சொல்லித்தந்திருக்கிறது . அந்தப் பாடத்தை நாம் கற்க மறந்தோம் எனில் வாழ்நாள் முழுக்க நாம் என்றும் சூழ்நிலை கைதியாகவே சிறைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் தயவுசெய்து தளத்தில் பேசியது போதும் களத்தில் வர அனைத்து ஆசிரிய சங்கத்தின் தலைவர்களும் சென்னை நோக்கி வரச்சொல்லி இணைந்து *அறைகூவல்** விடுத்திருக்கிறார்கள் இந்த முறை விடா முயற்சியாக சென்னையில் நடக்கும் நமக்கான விடியல் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இணைந்து வாருங்கள் குறிப்பாக நம் விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கட்டும் நான் மறுபடியும் சொல்கிறேன் **பிச்சை கேட்பவர்கள் தான் கெஞ்சி கேட்க வேண்டும் நாம் உரிமையை கேட்கிறோம் உரக்கவே கேட்போம்* ஒவ்வொருவரும் கேட்போம்! ஓயாமல் கேட்போம்! குடும்பத்துடன் கேட்போம் ! குழந்தைகளுடன் கேட்போம்! *சுகப் பிரசவத்தில் (177 )பிறக்க வேண்டிய ஆசிரியப் பணி எனும் குழந்தையை ** *அரசு ஆண்டாண்டுக்கு அரசாணை 149 என்ற கத்தி எடுத்துக் கொண்டு சிசேரியன் மூலமே பிரசவம் பார்க்கும் துடிக்கும் அரசின் எண்ணம் தான் என்ன?* ** ஆசிரிய பணி குழந்தையை காப்பாற்றவா? அழிக்கவா? அரசை கேட்போம் அனைவரும் வாருங்கள்! ஆதரவு தாருங்கள்! * *வெல்வது சத்தியம்(177) *வீழ்வது நிச்சயம்(149)*
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுயநலமாக யோசிக்காதே!
ReplyDeleteஅனைவருக்கும் பொதுவான முறையை அரசு சொல்கிறது.
அதை பின்பற்றி வேலை பெறுங்கள்!
அதை விடுத்து மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சை கேட்டு வாழ்வை தொலைக்காதீர்கள்!
2013, 2017,2019,2022 அனைவருக்கும் பொதுவான, வேலை பெறும் தகுதி கொண்டவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி கிடைக்கும்.
இதில் அரசு கூறிய சலுகைகள் (177)
TRT முடிந்த பிறகு தெரிவிக்கப்படும்.
அதற்கு முன்பே
தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள வேண்டாம்.
தன் கையே தனக்கு உதவி
Deleteதேர்வு தேவை இல்லைதான்....ஆனால் 2013,2017,2019,2022 என யாரும் பாதிக்காத வகையில் என்ன methold ல select பண்ண சொல்ல போறீங்க.......போராளிகளே
ReplyDeleteஇவங்க கேட்டா நடந்துருமா
ReplyDeleteMr.munippan 177 enna ..
ReplyDelete177 தேர்தல் அறிக்கை எண்.
Delete2013 லிருந்து பணிவாய்ப்பு இல்லாதவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என்பதே அது.
ஆனால் 2013 க்கு மட்டும் பணி அல்ல.
Trt இல் பணி தான் தர போரங்க.....................2013,2017,2019 ,2022 எல்லாம் ஒன்னு தான்
ReplyDeleteஇது தான் உண்மை
DeleteTrt il fail Ana enna seiveenga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHi bro and sisters pls porattam Panna,athu avangaloda urimai athai ethum kurai solla venam ungalukku poga viruppam illa na vittutunga
ReplyDeleteTrt Venum nu ninaipathu varum ena ninaipathum avaravar viruppam athaiyum yarum kurai koora vendam
ReplyDeleteS bro👍
ReplyDelete