தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை, 1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி 2. வரையறுக்கப் பட்ட இலக்கு 3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் 4. சரியான கண்ணோட்டம் 5. தன் மீதான முழு நம்பிக்கை 1. *சாதிக்க வேண்டும் என்கிற வெறி:* நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது. 2. *வரையறுக்கப் பட்ட இலக்கு:* தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். 'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப் பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப் படுவதாக) நிர்ணயிக்கப் பட வேண்டும். 3. *விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:* நமக்கு ஏற்படும