Skip to main content

ஒரு எலியும் சாமுராய் வீரனும்..

*ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.*

*அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.*

*அதிலும் குறிப்பாக..*

*ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.*

*வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.*

*அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.*

*ஆகவே...*

*சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...*

*இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.*

*ஆனால்...*

*அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.*

*முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...*

*ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.*

*எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.*

*முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.*

*அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.*

*ஆனால்...*

*வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.*

*அதில் அவனும் காயம் அடைந்தான்.*

*‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?*

*என அவமானம் அடைந்தான்.*

*அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...*

*"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..*

*அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’*

*என ஆலோசனை சொன்னார்.*

*சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.*

*உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.*

*அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.*

*பூனை இருப்பதை அறிந்த எலி..*

*தயங்கித் தயங்கி வெளியே வந்தது.*

*கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.*

*எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..*

*மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.*

*ஆனால்....*

*இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.*

*ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.*

*மறுநாள்....*

*வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.*

*சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.*

*அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது......?!*

*சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை......!*

*இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.*

*இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...*

*"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?"*

*"இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’*

*எனக் கேட்டன.*

*"ஒரு சூட்சுமமும் இல்லை......?!*

*நான் பொறுமையாக காத்திருந்தேன்........!!*

*நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.*

*ஆகவே..,*

*அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.*

*நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.*

*ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.*

*எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.*

*"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான.......!’’என்றது அந்த கிழட்டு பூனை.*

*அப்போது மற்றோரு பூனை கேட்டது,...*

*‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.*

*என் நகங்கள் கூட கூர்மையானவை.*

*ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை.........?’’*

*’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."*

*எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.*

*ஆகவே...*

*ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.*

*ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.*

*"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,*

*அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.*

*பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..*

*உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..*

*ஆனால்...*

*தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்........!!!’’*

*என்றது கிழட்டு பூனை.*

*சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.*

*மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.*

*ஆனால்...*

*அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.*

*வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.*

*காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.*

*வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.*

*மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.*

*"நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.........!!!"*
                             

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Replies
  1. Sister trip epdi jollyah irukka enjoy pannunga sister

   Delete
  2. Jolly ah iruku brother, but pasangala dha samaalikka mudila..😂😂

   Delete
  3. orey jolly than pola.. :) students a paathukonga admin mam... very gud mrng admin and frndz. :-)

   Delete
 3. Gd mng ano mam and all of u in this blog

  ReplyDelete
 4. Bangalore trip ah mam . Enjoy wonderla ponga super ah enjoy pannunga

  ReplyDelete
  Replies
  1. Not bangalore sir, that time I reached banglore, actually it's mysore and coorg sir ☺

   Delete
 5. Good morning ano sis and friends. Bangalore trip ah nalla enjoy pannunga students kuda pogum pothu namakkum antha feel vanthudum. 😊😊😊😊😊

  ReplyDelete
 6. Nabu bro , Anand bro va kanom.

  ReplyDelete
  Replies
  1. Good morning Revathi sister

   Delete
  2. Good morning nabu brother. Yenna achu brother ungala aalaye kanom.

   Delete
  3. Exam preparation Anees sister thats why i could not comment here but every day i am watching the comments

   Delete
 7. Good morning ano mam & dear friends

  ReplyDelete
 8. Sister Bangalore ah vandhrukkinga wow romba pakkathula irukkinga.semma coolah irukkum climate Bangalore la yenaku romba pakkam Bangalore jost 40km

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. Gud morng anon mam & all dr. frnds...

  Today thoughts மூலமா!!@

  நீங்க வரும் வரை பொறுமை யாகவும், நிதானமாகவும் இருக்கணும்னு சொல்றிங்க!!!!👍👍👍👍😎😎

  நீங்க lateta வந்தா
  காவேரி நிரோடதான் வரணும்!!!!!!😂😂

  ReplyDelete
  Replies
  1. 😂😂😂 avunga tharamatanga. Sis angaye settle agida vendiyadhu than.

   Delete
  2. Apadi ellam settle agidadheenga sis vanthudunga. We are waiting...

   Delete
  3. Gudmrng Abdul sir.. Enakaga konjam days wait panamatingala☺☺

   Delete
  4. rompa naal kuda wait panvaru mam...appadi thaana directorr sir..!!!? :)

   Delete
  5. Gud morng sunder sir....

   முடியாது சுந்தர் sir.. ரொம்ப நாள் எல்லாம் wait பண்ணமுடியது..
   Only 4 days தான்!!!😢😢😢😢😢

   Delete
 11. Good morning ano sister and all sisters brothers have a wonderful day

  ReplyDelete
 12. Good morning, admin.and friends.

  ReplyDelete
 13. Educational minister number 9698938888, 9840724790,chennai office number 04425674113
  Pradeep Yadav sir number 044 25672790
  Udayachandran sir number 044 25673243
  If anybody wants any details about TET, pg trb welfare list ask this number

  ReplyDelete
 14. Take care and enjoy mam... Best wishes..👍👍

  ReplyDelete
 15. இன்று வெள்ளிக்கிழமை காலிபணியிடம் பதிவது மதியத்துடன் நேலம் முடிந்தது சரி இப்ப 5மணி ஆக போகுது அப்படியே டி ஆர் பி வலைதளம் பார்கலாம் ஏதேனும் வருமா என்று அங்கு போனால் அது எப்பொழுதும் போல் ஓ எம் ஆர் தான் மின்னுது சரி என்று வெளியேறி வந்து விட்டேன் நமக்கு என்ன ஏமாற்றம் புதிது இல்லையே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரரே இது என்ன புதிதா காத்திருப்போம்

   Delete
  2. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😷😷😷

   Delete
  3. Vacant nmakku theriyatha sir

   Delete
  4. Vacant nmakku theriyatha sir

   Delete
 16. Hai friends why all of you maintain sillence. Today comments aren't cross at least 50.

  ReplyDelete
 17. Hai friends why all of you maintain sillence. Today comments aren't cross at least 50.

  ReplyDelete
 18. Pathil solla ano sis illa athan comments kammi ya irukku athuvum illama ethirparpu athigamagitu irukku ellarum mood out la irukkanga nu ninaikirane...athan sir comments kammi ya irukku

  ReplyDelete
  Replies
  1. S revathy mam u r crct????😢😢

   So sad........

   Ugtrb soldranga ???

   Onnum puriyala??????

   Delete
  2. Sir ugtrb confirm ah sir ore kulappama irukku

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. Wait & see வெங்கட் sir.....

   இது வரைக்கும் tet நடந்த நிகழ்வுகளை ஒட்டு மொத்தமாக வைத்து பார்க்கும் போது, இவங்க எந்த problemum இல்லாம posting போட சிறந்த வழியா. (Ugtrb) இத தான் தேர்தெடுப்பா ங்க!!!! This is my opinion sir....

   நம்மல சுத்தி விடுறானுங்க!!!!😢😢

   Trb soldra வரை எதுவுமே நிலையில்லை!!!!

   நல்லது நடக்கும் நம்புவோம்!!!!!!!👍👍👍👍👍👍😂😂😂😂😂😂😂😂

   Delete
 19. Unmadha revathi mam yellarum upset dha pola get well soon

  ReplyDelete
  Replies
  1. Polytechnic ஊழல சிக்கி தவிக்குறாங்க!!!! வெங்கட் sir!!

   நமக்கு சொல்ல போற newsla தான்... அவங்க மேல உள்ள தப்ப மறைக்க முடியும்!!! So யோசிச்சி நல்ல முடிவா சொல்லுவங்கன்னு நம்புவோம்!!!!!👍👍👍👍👍

   Delete
  2. Mmm correct dha sir trb boadkku call panna apdi ellam exam illa January 1st weekla govt sidela irundhu yedhachu news varum wait pannunga solranga aracha nave araikuranga sir

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. Replies
  1. Hi frds vacant list kalviseithi la publish panniirukkanga

   Delete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.