Skip to main content

Posts

Showing posts from October, 2021

நிலையாமை..

புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று இரவு 12 மணி வரையிலும்  பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே  நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க

ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!”

“ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!” - முதலமைச்சர் 

இன்றைய சிந்தனை..

  என்னிடம் ஒரு கைத்துப்பாக்கியும் மூன்று குண்டுகளும் இருந்தன... முதல் குண்டை என் அப்பாவின் நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்... நெற்றியைத் துளைத்து மூளையைக் குடைந்து பின் மண்டையைப் பொத்தலிட்டு குருதியோடு சிதறி அவரின் கண்கள் பிதுங்க என் கண்களை உற்று நோக்கியே சரிந்தார்... இரண்டாம் குண்டை என் அம்மாவின் நெஞ்சில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்... இதயத்தைத் துளைத்து முதுகின் வழியாய் பொத்தலிட்டு இதயத்தின் திசுக்களோடு ஒட்டிக் கொண்டு அவள் சரிய விரல்களால் என் கையை தடவியப்படியே சரிந்தாள்.. மூன்றாம் குண்டை என் நாவு நனைக்கும் உமிழ்நீர் எச்சிலோடு துப்பாக்கியின் குழலை உள்ளீட்டு ஒரு அழுத்து அழுத்தினேன்... என்னுடைய பின் மண்டையோட்டின் வழியாக துளைப்பதற்கு முன் மூளையின் கடைசிப் பதிவான " அம்மா " வென அலறியே சரிந்தேன்... இரண்டுக் கொலையும் ஒரு தற்கொலையும் நடந்தேறியது... நான் சுட்ட முதல் குண்டின் பெயர் " சொல் கேளாமை"... நான் சுட்ட இரண்டாம் குண்டின் பெயர் " தாய்பாசம் அறியாமை" ... நான் சுட்ட மூன்றாம் குண்டின் பெயர்  " சுயமதிப்பை உணராமை"... நான் வைத்திருந்த கைத்துப்

அரசுப் பள்ளிகளில் 1 லட்சம் கூடுதல் மாணவர் சேர்க்கை

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம், குழந்தைகளின் பள்ளி வருகை உறுதி செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா். மேலும், வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சோ்ப்பது இலக்காகக் கொள்ளப்படும் எனவும் அவா் தெரிவித்தாா். தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிா்ப்பையும், விமா்சனங்களையும் முன்வைத்துள்ளன. இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:- இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக இணைத்துக் கொள்ள இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கைகளும் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்தோரின் கல்வித் தகுதி இருப்பிடம், முன் அனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தோ்வு செய்யப்படுவா். இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவா். தோ்ந்தெடுக்கப்படும் தன்னாா்வலா்கள

சிகப்பு கல்..

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் இறைவனிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள் என்று கேட்டான்..? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். இறைவன் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.  அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.  நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.  மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த நம் நண்பன் இறைவனிடம்  நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு இறைவன், பார்த்தாயா, *ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு  கொடுத்த

இல்லம் தேடிக் கல்வி குறித்து தமிழ்நாடு முதல்வர் விளக்கம்

அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதி -முதல்வர் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை -முதல்வர்

FLASH NEWS

REGARDING CORRECTION IN PGTRB APPLICATION PROCESS

தாயி்ன் அன்பு..

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார். மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

  அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன் செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம். தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது" எனக் கூறிய அவர் தொடர்ந்து... "பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் இன்று அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது. அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார். பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழை

அன்னமும் பாலும்..

 அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம்.  ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி  இருக்கிறார்கள்.    நான் சில மிருகக் காக்ஷி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீனக்ளையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.    எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப்பற்றியே சிந்தித்தேன்.  ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது "அடடா, #அன்னம் என்பதற்கு #அரிசி_சாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் சிந்திக்க வில்லையே என்று யோசித்தேன்.  பிறகு சொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன ஆச்சர

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார் -நேரலைக்காண -links- you tube , facebook , twitter link

  இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார் -நேரலைக்காண -links- you tube , facebook , twitter link Join us live on the ILLAM THEDI KALVI inauguration by the Hon. Chief Minister of Tamil Nadu live at 04:30 PM today!   Link on Facebook -   illamthedikalvi.tnschools.gov.in/fblive Link on YouTube -   illamthedikalvi.tnschools.gov.in/ytlive Link on Twitter -   twitter.com/SEDTamilNadu

முயற்சி பயிற்சி..

*ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.* *யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.* *நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.* *கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.* *“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.* *இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. “உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது” என்று கத்தின.* *ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.* *கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.* *“தற்கொலை முயற்சிடா / வேண்டாம்டா தருதலை!”* *என முட்டுக்கட்டையாய் கத்தின.*  *எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.* *எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.* *அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.* *அவனுக்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களயும் நிரப்ப வேண்டும் - அரசுக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பீட்டர் ராஜா தலைமை தாங்கினார். அருள் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் கந்தசாமி வரவேற்றார். மாநில பேச்சாளர் ராஜி செயற்குழு கூட்டம் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் அன்பரசன் சங்கத்தின் நிதிநிலை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் துப்புரவாளர், இரவு காவலர், இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். முதன்மை கல்வி அலுவலரின் பணிச்சுமையை குறைக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் கணினி தொழில்நுட்பவியலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட அலுவலர்களை நியமன

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு! - அமைச்சர் பொன்முடி!

    தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வர்கள் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், தேர்வு மையங்கள் அருகிலேயே அமைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தேர்வர்களின் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுத வசதியாக புதிய அரசாணை வெளியிட்டு, 129 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SUNDAY'S THOUGHT..

  நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக  10 பேர் நான் அமர்ந்திருந்த  டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக  உணவு உண்டர்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான்  quick and better service... no need to wait like begger என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டேன். Waiter அமைதியாக  என்னிடம் கூறினார். Sir உங்களுடைய  order Very special  எங்களுக்கு. அதை எங்கள்  Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன்.  பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பரிமாறினார்கள்.

PGTRB தேர்வு வயது தளர்வு அறிவித்தும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.

 

பிரபஞ்சத்தின் ஆற்றல்..

*விஞ்ஞானத்தால்*  *சூத்திரத்தைத் தான் கண்டு* *பிடிக்க முடியுமே தவிர,* *சூட்சமத்தை* *இறைவனைத் தவிர வேறு யாராலும்* *அறிய முடியாது.!* *🌎பால்வெளி* *மண்டலத்தில் எவ்வளவு* *கண்டுபிடிப்புகளை* *உலகுக்கு தந்தாலும்* *ஒரு வட்டவரைக்கு மேல்* *எங்களால்* *செல்ல முடியவில்லை.* *அதற்கு மேல்* *இருப்பதை* *அறியமுடியவில்லை.*          ( நாஸா விஞ்ஞானிகள் ) 13 1/2 லட்சம் பூமிகளை சூரியனின் உள்ளே வைக்கலாம் அவ்வளவு பெரியது சூரியன்.  ஆயிரக்கணக்கான சூரியனை ஒரு நட்சத்திரத்திற்குள் வைக்கலாம். அவ்வளவு பெரியது நட்சத்திரம்....  அதுவும் ஒன்றா,  இரண்டா,  கோடி, கோடி, கோடி என்று விஞ்ஞானத்தால் எண்ணமுடியாது என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது. *Pistol star என்று அழைக்கப்படும் நட்சத்திரம் சூரியனைவிட 10 மில்லியன் மடங்கு ஒளி உள்ளது. Betelgeuse என்ற நட்சத்திரத்திற்குள்  270 லட்சம் சூரியனை வைக்கலாம்.  ஒவ்வொன்றும் சுற்றுவதும், சுழலுவதும் படுவேகமாகும். சில புல்லட்டை விட  17 மடங்கு வேகத்தில் சுழல்கிறது. சுற்றுகிறது.  ஏன் நமது சூரியன் வினாடிக்கு 225 கி. மீட்டர் வேகத்தில் பால்வெளியில் பறந்து கொண்டிருக்கிறது. மோதிக்  கொள்ளாமல் சிதறாமல்

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான " சின்னம் ( Logo with Tag Line ) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.- ATTACHED -PRESS RELEASE

  சின்னம்  ( Logo with Tag Line )  உருவாக்கினால்   ரூ .25,000  பரிசு  -  பள்ளிக்   கல்வித்துறை   அறிவிப்பு .   தமிழ்நாடு   அரசு   பள்ளிக்   கல்வித்   துறை  "  இல்லம்   தேடிக்   கல்வி  "  பத்திரிகைச்   செய்தி  :   கொரோனா   பெருந்தொற்றுப்   பரவல்   சார்ந்த   பொதுமுடக்கக்   காலங்களில்  ,  பள்ளிகளில்  1  முதல்  8  ஆம்   வகுப்பு   வரை   பயிலும்   மாணவர்களிடையே   ஏற்பட்டுள்ள   கற்றல்   இடைவெளிகளைக்   குறைக்கும்   வகையில்   தமிழ்நாடு   அரசு  "  இல்லம்   தேடிக்   கல்வி  "  என்னும்   திட்டத்தை   மாநிலம்   முழுவதும்   செயல்படுத்தத்   திட்டமிட்டுள்ளது .   இத்திட்டத்தின்   முக்கிய   நோக்கங்கள்  : •  கொரோனா   பெருந்தொற்றுப்   பரவல்   சார்ந்த   பொதுமுடக்கக்   காலங்களில்  ,  அரசுப்   பள்ளிகளில்  1  முதல்  8  ஆம்   வகுப்பு   வரை   பயிலும்   மாணவர்களிடையே   ஏற்பட்டுள்ள   கற்றல்   இழப்புகளைச்   சரிசெய்தல்  . •  பள்ளி   நேரத்தைத்   தவிர  ,  மாணவர்கள்   வசிப்பிடம்   அருகே  .  சிறிய   குழுக்கள்   மூலம்   தன்னார்வலர்களின்   மாணவர்களுக்குக்   கற்றல்   வாய்ப்புகளை   வழங்குதல்  ,  பங்கேற்பு

TODAY'S THOUGHT..

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான்.  ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.  தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...??? இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள் கணவன் அமைதியாகச் சொன்னான், “இன்றைக்கு அதிகாலையில் தான் நான்

PGTRB தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் காலக்கெடு நீடிப்பு.. 09.11.2021 வரை விண்ணப்பிக்கலாம்..

09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கையில் திருத்தம் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

 

தேவதை..

ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.. அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.. ”நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்..வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது.. முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை .. என்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான். அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.. கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டு உயர்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுத 2 லட்சம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், டிஆர்பி நடத்த உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவித்த, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன், முதல்வர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்திபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று முன்தினம் இரவு அரசாணை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக வும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தால் கடந்த செப்.

TODAY'S THOUGHT..

 ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவின் போது,  1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர்,  ஜோ ஓ டோனல் என்பவராலேயே எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம். ஒரு ஜப்பானிய சிறுவன்,  உடல் தகனம்  செய்யும் இடத்தில், இறந்த தனது  சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையிலே நிற்கிறான். அழக்கூடாது  என்ற வைராக்கியத்துடனே கண்ணீரைக் கட்டுப் படுத்த,  தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால்,  வழியும் இரத்தமும் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது. நீ பையில்  சுமக்கும் சுமையை என்னிடம் கொடு என்று காவலர் ஒருவர் கேட்ட போது, ​ சுமப்பதற்கு  கடினமாக உணர  இது ஒன்றும் பொருளல்ல, என் சகோதரன், என்று சிறுவன்  பதில் அளித்ததாக புகைப்படம்  எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார். இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படமே வலிமையின் அடையாளமாகவே பயன்படுத்தப் படுகிறதாம். ஆம்,  எதை சுமக்குறோம் என்பதல்ல, அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே மிக முக்கியம்.  பணம் -  சொத்துக்களுக்காக உறவினரையும், உடன் இருப்பவரையும் ஏமாற்றும், இன்றைய தலைமுறைக்கும் இதில் கற்றுக் கொள்ள நிறைய பாடம் இருக்கிறது..

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு புதிய விதிகளின் படி நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

   

SURVIVAL OF THE FITTEST..

*வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.* *அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.* *அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.* *அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.* *கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.* *பறவை இனம் பெருகியது*. *பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.* *அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. அதனால் எதிரிகளுக்கு உணவானது* *மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.* *பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்)* *எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது*. *அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டு மென்று கொடுத்து அழகு பார்க்கிறோம். அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.* *பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது*. *அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.* *பிள

TRB AGE RELAXATION - Valid till 31.12.2022

  ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும்! ஆணை  : 1. மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கையில் , ஆசிரிய வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்