புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.
46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.
'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
நேற்று இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா என்று போராடி இருக்கிறது மருத்துவமனை. நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.
எந்த வித முன்னறிவிப்பும் தராமல் 'இனிமேல் துடிக்க மாட்டேன்' என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது. massive cardiac attack. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்றே தெரிகிறது. சும்மா நம் ஆறுதலுக்காக 'unhealthy lifestyle' என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இறுதி நிமிடம் வரை புனித் 'fit as fiddle' ஆகத் தான் இருந்திருக்கிறார்.
வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக 'நான் காலி செய்யப் போகிறேன்' என்று ஓனருக்கு நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள். உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை. 'Interval' கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் 'The End' கார்டு காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!
இது தத்துவமோ வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. இதில் positive ஆகச் சிந்திக்கவும் சில விஷயங்கள் உள்ளன.
ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு! முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம்.
- பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ இவை எல்லாம் தேவை இல்லாத baggage கள். எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்று தெரியாது. அப்புறம் 'ச்சே, நேத்து கூடப் பார்த்தேனே, பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே' என்று அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.
- நிகழ்காலத்தில் வாழ்வது. மேலே சொன்னது போல நாம் போடும் 'முப்பது வருடத் திட்டத்தைப்' பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம்.
- தொலையாத கவலைகள். உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள். 'செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?' என்பது போன்ற கவலைகள். reality என்னவென்றால் 'they will be just fine!'. நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம்.'அழவா இங்கே வந்தோம்? ஆடு பாடு ஆனந்தமா!'
- பற்றின்மை: பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். இந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போது 'சரி, வா, போகலாம்' என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.
- நன்றி உணர்ச்சி: நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. 'இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி' என்று எழுந்திருக்கும் போதும், 'இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி' என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.
-not but not the least: பகிர்ந்து கொள்ளுதல், உதவி செய்தல், தேவைப் படுபவர்களுக்குக் கரம் நீட்டுதல், உயிர்களிடத்தில் அன்பு.
-கடவுள் நம்பிக்கை. இது ஒருவிதத்தில் ஆத்திகர்களின் advantage. 'காலா, உன்னைக் காலால் எட்டி உதைப்பேன்' என்னும் தைரியத்தைத் தரும் நம்பிக்கை. 'அவன் பார்த்துக் கொள்வான், இம்மையிலும், மறுமையிலும் என்னைச் சரியான இடத்துக்கு அவன் கூட்டிச் செல்வான்' என்ற திட நம்பிக்கை. மரணமும் இவர்களுக்கு 'This is but a scratch'!!!
மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம். அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு 'feel-good movie' யாக இருக்க வேண்டாமா? யோசிப்போம்!
நிலையாமை அதிகாரம்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
- தெய்வபுலமை
விளக்கம்
‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்.
Wishing everyone a blessed Sunday ahead..
ReplyDeleteUnmai mam
ReplyDeleteExactly sir..
DeleteTwitter la message anupunalum no reply,1100ku call panni sonalum no reply nammaluku nallakalam varatha mam
ReplyDeleteVarum sasi sir.. Ipo volunteers edhuku, adhuku teachers appoint panna enna?? Tet mudichu evlo per irukom, government purposely panranga.. Next tet vandha kandippa yaravadhu case poduvaanga apo theriyum..
DeleteSchool reopen, transfer councling mudintha pin Tet pass pannavangaluku ethavathu step edupangala mam
ReplyDeleteSasi bro/sis don't feel
DeleteEdukra madhiri therila sir..
DeleteNice thought
ReplyDeleteடெட் தேர்ச்சி பெற்றவங்க இருக்கும்போது எதற்காக தன்னார்வளர்கள்
ReplyDeleteஊரை ஏமாற்றும் வேலை
ReplyDeleteடெட் பாஸ் பண்ணது தப்பு
ReplyDelete*இல்லம் தேடி கல்வி பணி: ரூ1000 சம்பளத்திற்கு 450முனைவர்கள், 1 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்*
ReplyDeleteஇந்த திட்டத்துக்காக இல்லம் தேடி கல்வி வழங்க 2 லட்சம் தன்னார்வலர்களை எதிர்பார்ப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்.
Thanks to: puthiyathalaimurai.com
அடப்பாவிங்களா
Delete