Skip to main content

Posts

Showing posts from April, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் விடுமுறையில் மே மாதம் நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தற்போது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! 10ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும். . . மே மாதம் 3ஆம் தேதி வரை மத்திய அரசு விடுத்துள்ள ஊரடங்கு முடிந்தவுடன் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யபடும்!- பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது : மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதன் பிறகு தேர்வு அட்டவணையானது வெளியிடப்படும். மே மாதத்தில் கண்டிப்பாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் இடைவேளையில் தேர்வு நடைபெறும். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு பின்னர் , 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும்

நீங்க என்ன செய்யப்போறீங்க டீச்சர்?- ஆசிரியர்கள் மத்தியில் வைரலாகும் வலைதளப் பதிவு

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் கால வரையறையற்று மூடப்பட்டிருக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னமும் தேதி குறிக்கமுடியாத நிலையில் மே மாத இறுதியில் பள்ளிகளைத் திறந்து தேர்வுகளை நடத்தலாமா என்று அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களோ குழப்பமான மனநிலையில் உள்ளனர். அவர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் வகையில், ‘என்ன செய்யப்போறீங்க டீச்சர்?’ என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு ஆசிரியர்கள் மத்தியில் இப்போது வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை அப்படியே பிரதிபலிக்கும் அந்தப் பதிவு... ''எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது. கல்வியாண்டு மட்டும் புதிதாக இருக்கப் போவதில்லை... கற்றுக் கொடுக்கும் கல்வியே புதிதாகத்தான் இருக்கப் போகிறது. காலாண்டுகூட இல்லாத ஆண்டாக மாறலாம். அதுமட்டுமா! நெருக்கமாய் அழைத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஆசிரியர்கள் இனி, குழந்தைகள் நெருங்குவதை அச்சமின்றி அனுமதிப்பார்களா? ப

படித்ததில் பிடித்தது..

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்... இது எப்படி சாத்தியம்..??? ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி??? அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்.. ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்... யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ... வேறு யாருமில்லை..  கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...  வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார். சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்... அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்... ""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்..."" இப்பொழு

எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் எனத் தெரியுமா?

நம் உடல் வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால் தான் ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம். சரி, எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட்ஸ்கை எந்த வயதில் எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் சரியான நன்மையைப் பெற முடியும் என்று கொடுத்துள்ளது.அதைப் படித்து ஆண்கள் தவறாமல் பின்பற்றி வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம். 16-19 வயது இந்த வயதில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது. 20-30 வயது இந்த வயதில் ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்ல

கரோனா - க்கு பின் TNPSC தேர்வாணையம் சந்திக்க இருக்கும் சவால்கள்

கொரோனா கோளாறு -குழப்பத்தின் உச்சத்தில் கல்வித்துறை

நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும்: முகக்கவசத்துடன் பணிக்கு வர உத்தரவு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வருவது எப்படி என்று அரசு ஊழியா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், காவல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோந்த ஊழியா்கள் மட்டுமே கடந்த மாா்ச் 24 முதல் பணிக்கு வருகின்றனா். ஊரடங்கு காலத்திலும் அவா்கள் தொடா்ந்து பணியாற்றுகின்றனா். பிற துறை ஊழியா்கள்: அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியா்களும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், ஊரடங்குக் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், வரும் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் ஊரடங்கில் தளா்வு

விடுமுறை..

உலகம் கண்டிராத விடுமுறை  உலகளவில் முதல் விடுமுறை    குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் விடுமுறை  வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியைக் காணும் விடுமுறை  வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத விடுமுறை  வாழ்க்கையைப் பல கோணங்களில் புரிய வைக்கும் விடுமுறை  வாழ்க்கையில் இப்படி இனி வரக்கூடாத ஒரு விடுமுறை  வாகனங்கள் இல்லாத விடுமுறை  பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லாத விடுமுறை  சுற்றுலா இல்லாத நீண்ட விடுமுறை  சுற்றத்தார் வீடுகளுக்குச் செல்லாத விடுமுறை  திருவிழாக்கள் இல்லாத விடுமுறை  எது எல்லாம் இல்லாமல்  மனிதன் வாழ முடியும் என புரிய வைத்த விடுமுறை செலவுகள் குறைவான விடுமுறை உலகமே நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிய விடுமுறை  இயற்கையைப் பாதுகாக்கும் விடுமுறை  *இருப்பினும் பெண்களுக்கு இல்லை விடுமுறை* ஏனென்றால் பசிக்கு இல்லை              விடுமுறை 😂

தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், நடப்பாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி துறை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு அது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகள்,அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் அந்த சமயத்தில் எப்போது நடக்கும்? என்பது குறித்து புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு

'அடுத்த கல்வியாண்டில், காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. சென்னை பல்கலையும், இந்த தேர்வு முறையை அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, மே, 3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மே மாதம் நடத்தப்படவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.'அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில், முதல் செமஸ்டர் கால ஆரம்பத்தில், தேர்வுகள் நடத்தப் படும்' என, உயர்கல்வி துறை செயலர், அபூர்வா அறிவித்தார். இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, உயர்கல்வி செயலர், அபூர்வா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த செமஸ்டர் காலத்தில் நடத்த வேண்டிய தேர்வுகளை, அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்துவதற்கு, பல்கலைகளும், கல்லுாரிகளும் திட்டமிட வேண்டும். காலை மற்றும் மாலை என, இடைவேளை இல்லாமல், வரிசையாக அனைத்து தேர்வுகளையும் நடத்த வேண்டும். விடுமுறை இல்லாமல், தேர்வுக

வீட்டில் இருந்து பணி புரிவதால் 67% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதி

இந்தியர்கள் 67 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி புரியும் சூழ லால் தூக்கத்தை தொலைத்து நிம்மதியின்றி கடும் நெருக்கு தலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியும் வர்த்தக மேலாளரான அன்கீத் சிங் (42) வீட்டிலிருந்து பணி புரிவது என்பது மிகவும் சிரமமானதாக உள்ளதாகக் கூறியுள்ளார்.இதற்குமுன் வீட்டிலிருந்து அலுவலக பணி புரிவது என்ற சிந்தனையே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தனக்கு ஓய்வு என்பதே இல்லை என்று குறிப்பிடும் அவர், தினசரி காலை 5 மணிக்கு எழுந்துவிடுவதாகவும் அலுவலகப் பணிகளை முடித்து லேப்டாப்பை மூடும்போது இரவு 10 மணி ஆகிவிடுவதாகவும் தெரி வித்துள்ளார். வழக்கமாக 7 மணிக்கு பணிகளை முடித்து வீடு திரும்பி விடும் அவர் தற்போது இரவு 10 மணி வரை போராட வேண்டியிருப்பதாகக் குறிப்பிடு கிறார். கடந்த 20 நாட்களுக்கும் மேலான இந்த வேலைப் பளு வினால் ஏற்பட்ட உளைச்சலில் இருந்து விடுபட தற்போது உளவி யல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறார். வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்பாலானோர் மிகப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.இதற்குக் காரணமே பணி

ஆன்லைன் கிளாஸில் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்!

கொரோனா தொற்று அதிகமான மார்ச் மாதம்தான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது . 12 - ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த நிலையில் , 11 - ம் வகுப்புத் தேர்வில் ஒன்று மட்டும் மீதமிருக்க , நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் , அதுவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது .பள்ளி மாணவர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் .ஏற்கனவே , ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பைஜூஸ் , வேதாந்தா , அப்கிரேட் , அக்காடமி போன்ற பல தனியார் நிறுவனங்கள் , இந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லா கட்டி வருகின்றன . அதே பாணியில் 10 மற்றும் 11 - ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து 10 - ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது , 10 - ம் வகுப்பு தேர்வுக்காக நாங்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருந்தோம் இந் நிலையில்தான் , கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது .பிரதமர் ஊரடங்கை அமல்படுத்தியபோதுகூட தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று காத்திருந்தோம் . ஆனால் , மார்ச் 25 - ம் தேதி முதல் 21 நாள் ஊர

கொரோனாவுடன் நூறுநாட்கள், இரண்டேஇறப்புகள்.. எதிர்கொண்டகேரளம்..

♦ கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது.  ♦கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ♦ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் அம்மாநில நடந்து கொண்டது தான் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக சென்றடைய காரணமாக அமைந்தது.  ♦மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் முதல்வர் பினராயி விஜயனே நேரில் அறிவிக்கிறார்.  ♦மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டுகிறது அம்மாநில அரசு. ♦பொதுமக்களின் தேவையை உணர்ந்து முதலில் பாதுகாப்பான முறையில், சிறையில் மாஸ்க்குகள் செய்யும் பணியை தீவிரப்படுத்தியது கேரளா.  ♦அனைவரும் N95 மாஸ்க்குகள் தான் உதவும்.  ♦இது  தேவைக்கு ஆகாது என்று பலரும் அப்போது கேலி செய்தனர்.  ♦ஆனால் தற்போதையை இந்திய அரசின் சுகாதாரத்துறை “வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  ♦ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பருத்தி ஆடையையும் கூட 5நிமிடங்களுக்கு உப்பு போட்ட நீரில் கொதிக்க வைத்து பின்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்பு

கரோனா பாதிப்பு, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோவுகள், விடைத்தாள்கள் திருத்தம், ஆண்டு இறுதித்தோவு என கல்வி சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோவு கட்டாயமாக நடைபெறும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தோவுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பாக அது குறித்த அட்டவணை வெளியாகும். மேலும் பொதுத்தோவுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. இ

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு.

இந்தியாவில் மொத்தம் 170 மாவட்டங்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு. அவை : 1.சென்னை 2.திருச்சி 3.கோவை 4.நெல்லை 5.ஈரோடு 6.வேலூர் 7.திண்டுக்கல் 8.விழுப்புரம் 9.திருப்பூர் 10.தேனி 11.நாமக்கல் 12.செங்கல்பட்டு 13.மதுரை 14.தூத்துக்குடி 15.கரூர் 16.விருதுநகர் 17.கன்னியாகுமரி 18.கடலூர் 19.திருவள்ளூர் 20.திருவாரூர் 21.சேலம் 22.நாகை x

வருக புத்தாண்டே..

ஆண்டே! வருக! - மேலும் ஆள்பவளே வருக! - எங்களுக்கு ஆனந்தம் தருபவளே வருக! கடந்த ஆண்டுகள் எல்லாம் கல்லை விழுங்கியக் கடலாய்க் கரைந்துப் போனது. படிகாரங்கள் கற்கண்டுகளாய் பதம் பார்த்ததுப் போல் இதம் பாராமல் சென்றது ஆண்டுகள். கடல் விழுங்கியக் கதை எல்லாம் போய் சதை விழுங்கும் சண்டாளர்கள் சாதனையாளர்களாய் சாதிக்க வைத்தது அந்த ஆண்டுகள். இனி இவையெல்லாம் உன் ஆண்டில் இல்லாமல் மறைந்துப் போகட்டும். நீ வருவதற்கு முன் - எங்களின் நிம்மதியையும் அரித்துவிட்டது சென்ற ஆண்டுகள். - ஆம் வந்தோரை வரவேற்று - தேநீர் விருந்தளிக்கவும் தேவையான பால் விலையும் ஏறிவிட்டது. இருட்டில் தவித்த வீடுகளில் இலவச மின் இணைப்பும் உல்லாசமாக எரியாமல் மின்வெட்டில் மழுங்கிவிட்டது. மின் விநியோக உபயோகக் கட்டணமும் உயர்ந்துவிட்டது. இன்னும் நாங்கள் உயரவே இல்லை. நீண்ட தூரப் பயணிக்கவும் நாலுக் காசும் எங்களுக்கில்லை. பேருந்துக் கட்டணமும் ஏறிவிட்டது. - இன்னும் நாங்கள் ஏற்றமிகு வாழ்க்கையில் வாழவே இல்லை. அரசுப் பணியில் இருந்தாலும் அரசுக்கு செலுத்தும் வரியும் அகலவே இல்லை. - சென்ற ஆண்டில் இரு அரசும் அரசுப் பணியாளர்களுக்கு அள்ளித்தந்த சம்பளம

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல பத்தாம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா.? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அளித்த பேட்டியில் பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியமானது. அதனால் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். இதையெடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டால் 10-ம் வகுப்பு தேர்வை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

கொரானா - மறந்து சிரிப்போம்..

1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமாத்தான் இருக்கும்.😊 💞2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்...😊 💞3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...😊 💞4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்😊 💞5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?😊 💞6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது😊 💞7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....😊 💞8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....😊 💞9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....😊 💞10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....😊 💞11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான

பரீட்சை என்பதே இல்லாத அசத்தும் மாற்றுமுறை கல்வி... Home Schooling Concept...

தர்மபுரி அருகே உள்ள நாகர்கூடலில், அழகான மலை பகுதியில் அமைந்துள்ளது புவிதம் கல்வி மையம்... பள்ளியின் நிருவனர் உத்திர பிரதேஷத்தை சேர்ந்த திருமதி ,மீனாட்சியம்மாள். இவர் மும்பையில் மெக்காலே கல்வி பிடிக்காமல் எட்டாம் வகுப்போடு கல்வியை கைவிட்டவர். 20 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சுட்டு தருமபுரி வந்து மலை அடிவாரத்தில்  காடு வாங்கி செட்டில் ஆயுட்டாங்க. இவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள். அவர்களை பள்ளிக்கு அனுப்ப விருப்பில்லாமல், இவரே கதை வடிவில் நல்ல விசியங்களை சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். ஒரு நாள் ரோட்டுல விளையாடி வந்த பசங்க சிலர், ஏதேச்சையாக அங்க  போயிருக்காங்க... அவுங்க கதை சொல்றத கேட்டு, அந்த குழந்தைக்கு புடிச்சு போயி தினமும் வந்தருக்காங்க. இப்படி தான் பலருக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சு, வீட்டையே பள்ளியாக மாத்தி, நல்ல விசியங்களை சொல்லி கொடுக்க ஆரம்பித்துள்ளார். 2002 ல் பள்ளியாக மாற்றி அரசு அனுமதி வாங்கினாங்க.. இங்கு ஐந்தாம் வகுப்பு வரை  பரீட்சை என்பதே இல்லை. பல நாளா மாற்று வழி கல்வி சாத்தியமா என்று யோசித்த எனக்கு, இவரை பார்த்தவுடன் பல மடங்கு நம்பிக்கை வந்துடுச்சு. முன்னெல்லாம் காணி ப

தேசிய ஊரடங்கு நீட்டிப்பு: இன்று அறிவிப்பு வெளியாகுமா?

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் தேசிய ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.14) நிறைவடையவுள்ளது. இந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடா்பான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை (ஏப்.13) வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் மாதம் 24-ஆம் தேதி இரவு அறிவித்தாா். இந்த ஊடரங்கு மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கரோனாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில், அந்த நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்; அதற்கு ஊரடங்கு நடவடிக்கைதான் ஒரே வழி என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த ஊரடங்கு காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விடும் என்று பல்வேறு

TRY THESE PUZZLES FRIENDS..

QUARANTINE PUZZLES 

புதிய பாடத்திட்ட புத்தகம் படியுங்கள்; பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனை

கொரோனா விடுமுறை நாட்களில், புதிய பாடத்திட்ட புத்தகங்களை படித்து, பயிற்சி பெறுமாறு, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, ஒரு மாதமாக விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் சார்பில், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 'வீட்டில் இரு; விலகி இரு' என்ற விதிகளை பின்பற்றி,ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரை, கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.அதேநேரத்தில், விடுமுறை காலத்தை, அடுத்த கல்வி ஆண்டுக்கான முன்தயாரிப்பு காலமாக எடுத்து, கற்பித்தல் பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'களில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.அதில், அனைத்து ஆசிரியர்களும், இந்த விடுமுறை காலத்தில்,தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்துக்கான பாடங்களை படித்து, எளிதான கற்பித்தலுக்கு தயாராக வேண்டும். கடந்த கல்வி ஆண்டில், புதிய பாட புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை என, பல ஆசிரியர்கள் கூறிய நிலையில், தற்போது கிடைத்துள்ள நேரத்தை, நல்ல முறையில் பயன்படுத

தமிழகத்தில் ஊராடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

*நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு* *பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு* *ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு* *காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை நன்றி* *கொரோனா* *சோதனைக்கு* *தேவையான* *மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது* *கொரோனா கண்காணிப்பில் 47056 நபர்கள் உள்ளனர்* *தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு* *கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்வு*

தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தாலே,நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை.

பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்? தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும்,அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் பார்ப்போம். கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான்.அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான். தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசு

தொப்பையை வேகமாக குறைக்க உதவும் யோகாசனங்கள்!

வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் தொப்பை பெரிதாக இருந்தால், அதனால் இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, இன்சுலின் தடை மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கொழுப்புக்கள் தான். உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். புஜங்காசனம் இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும். செய்யும் முறை முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு படத்தில் காட்டியவாறு ம

யதார்த்தம்..

#உழைப்பு... #உண்மை... வேர்க்கடலைய ட்ரைசைக்கிள்ள தள்ளிட்டு போற தாத்தா கீரைகட்டு வித்துட்டுப் போற பாட்டி செருப்பு தைக்க உக்காந்திருக்கும் அண்ணன் மகனுடன் வெள்ளரிக்கா கூறுபோட்டு விக்கும் அக்கா டிவிஎஸ் ஃபிப்டியில் எழனி வித்துட்டு போகும் அண்ணன் இவர்கள் எல்லாம் என்ன அத்தியாவசியப்பொருளா விக்குறாங்க? என்று நமக்குத் தோன்றுகிறது. "அண்ணே.. அக்கா.. வீட்டுல இருக்கலாம்ல..ஏன் இப்டி இந்த நோய் பரவுற காலத்துல சுத்திட்ருக்கீங்க?" என்று கேட்கத்தோன்றும் ஆனால் அவர்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் கையில் வைத்திருப்பதை கொஞ்சமாவது விற்றால் தான் முடியும் என்ற உண்மை தெரியும் போது அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் பாலை நில வெயில் போல் முகத்தில் உறைக்கிறது. ஆம்.. ஏழைகள் அனைவரின் வீட்டிற்குள்ளும் கொரோனா செல்லும் என்று கூறமுடியாது ஆனால் தினமும் மூன்று வேளையும் தவறாமல் அவர்கள் வீடுகளுக்குள் பசிப்பிணி சென்று வருகிறது . நம் அன்றாடம் சந்திக்கும் இதுபோன்ற சின்னஞ்சிறு வியாபாரிகள் நலன் கருதி அவர்களிடமும் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும். காரணம் அவர்கள் பொருட்கள் வாங்

பாடம் சாராத கற்றல் பயிற்சி பள்ளிகள் வழங்க கோரிக்கை

விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் சாராத கற்றல் பயிற்சிகளை, பள்ளிகள் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு, நேற்றுடன் ஒரு மாதம் முடிந்தது. பள்ளிகள் இல்லை என்பதால், பாடங்களை கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்ற மனநிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 'டிவி' நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், வீட்டுக்குள்ளேயே விளையாட்டுகள் என, பொழுதை கழித்து வருகின்றனர். ஆனாலும், நாள் முழுதும் கேளிக்கைகள், விளையாட்டுகளில் பொழுதை கழிக்க முடியாது.மேலும், அனைத்து நேரங்களிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இருந்தால், மாணவர்களின் தொடர் கற்றல் திறன் குறைய வாய்ப்புள்ளது. வரும் கல்வி ஆண்டில், புதிய பாட திட்ட பாடங்களை படிப்பதில், சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு வகுப்பு மாணவருக்கும் தினம் அல்லது வாரம் இரு முறை மேற்கொள்ள வேண்டிய, சில கற்றல் பயிற்சிகள் குறித்து, பள்ளிகள் தரப்பில், குறிப்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு

சென்னை : ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் இல்லை. தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாதமாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. மார்ச், 27ல் துவங்கவிருந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதனால், 10ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், '10ம் வகுப்பு தேர்வு ரத்தாகும்; அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது. 'கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களில் மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது' என, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து, ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், தங்கள் விருப்பங்களை அறிக்கையாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால், 'தேர்வு குறித்து, முதல்வர் முடிவு செய்வார்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங் கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்தார். இதுகுறித்த கேள்விக்கு, முதல்வர், இ.பி.எ

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

*முதல் மாமனிதர் :* 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.* இதை கேட்ட தாய் வீட்டின