Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் விடுமுறையில் மே மாதம் நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்





தற்போது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

10ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும். . . மே மாதம் 3ஆம் தேதி வரை மத்திய அரசு விடுத்துள்ள ஊரடங்கு முடிந்தவுடன் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யபடும்!- பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!


கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது :

மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதன் பிறகு தேர்வு அட்டவணையானது வெளியிடப்படும். மே மாதத்தில் கண்டிப்பாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் இடைவேளையில் தேர்வு நடைபெறும். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு பின்னர் , 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும்

Comments

  1. ����ஒரே குணம் உலகமெங்கும் ஒரே உணர்வு தாய்மை...
    ஜாதி மத பேதமில்லை, ஐந்தறிவு ஆறறிவு என்ற ஞானம் இல்லை ,ஒரே மாண்பு தாய்மை..
    குட்டி குருவிக்கு உணவூட்டும் தாய் குருவி முதல், பிள்ளைக்கு பாலூட்டும் அன்னை வரை மிளிர்கிறது தாய்மை..

    ����அம்மா என்ற ஒரு மந்திர வார்த்தை ,அது எத்துணை எத்துணை வல்லமை கொண்டது..

    ����பசி என்று சொல்லும் முன்னே உணவூட்டும்,
    கண்ணீர் துளி கன்னம் தாண்டும் முன்னே கண் துடைக்கும்..
    மனம் வருந்தும் வேளையிலே மடி கொடுக்கும்..
    போராடும் வேளையிலே தோள் கொடுக்கும்..
    வீடு திரும்பும் நேரம் வரை எனக்காக காத்திருக்கும் தாயே..
    என் துன்பத்தை எண்ணி என்னை விட அதிகமாய் துன்புறுபவள் நீயே..

    ����நீயிருக்கையிலே வேண்டுதலை கடவுளிடம் சொல்லும் வேலை எனக்கில்லை.. எனக்காக தன்னை வருத்தி கொள்ளும் தாயே, உனக்காக ஏது செய்யும் இந்த சேயே...

    ����கருவறையில் முகம் காணா எனக்காக கனா கண்டாய்..
    பிறக்கும் முன்னே எனக்காக வலி பொறுத்தாய்..
    என் உடலின் உணர்வு நீயானாய்..
    பெயர் எழுத அறியா நீ, என் பெயரில் பல பட்டங்கள் சேர்த்தாய்..

    ����தாயே ..உன் நிலை முழுதாய் நான் அறிந்தேன் என் பிள்ளைதனை கையில் நான் ஏந்தும் வேளையிலே..

    ����இரத்தமும் சதையுமாய் உயிர் கொடுத்தவள் நீ..
    மற்றவர் போற்றும் வாழ்வு நான் வாழ , பாதை அமைத்தவள் நீ..
    கடவுள் காட்டிய மிகப்பெரிய கருணை நீ..
    உலகம் கொள்ளும் அளவில்லா பெருமை நீ..

    ����என் உடலினைக் கொண்டு பல்லாக்கு தான் அமைத்து,
    என் உயிர் கொண்டு அதை நான் உயர்த்த, என்னைத் தாங்கும் தேவதையே உன்னை நான் தாங்க, உனக்கு நான் பட்ட கடன் தீருமோ.. உன் மனம் தான் அதை தாங்குமோ..

    ��‍��ஆகையால் மனம் என்ற மை கொண்டு எழுதினேன் ஒரு கவிதை அன்னையர் தின வாழ்த்துக் கூறி, வணங்குகிறேன் உன்னை ,என் அகம் குளிர அம்மா....��������

    அனைத்து அன்புள்ளம் கொண்ட அம்மாக்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்��������‍����‍��‍����‍����‍��‍��
    ரேவதி சசிகுமார்.

    ReplyDelete
  2. என்ன தல ஆளையே காணும். நலமா?????????

    ReplyDelete
  3. அட்மின் மேடம் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்றாலும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...