Skip to main content

Posts

Showing posts from October, 2018

படித்ததில் பிடித்தது..

ஒருவர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க எண்ணி, ஒரு சிற்பியை காண சென்றார்.._ _அவர் சென்றபொழுது அந்த சிற்பி ஒரு கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.._ _கொஞ்ச நேரம் சிற்பி சிலை செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்,_ _*அதே மாதிரி செதுக்கிய இன்னொரு சிலை அங்கு கிடப்பதை கவனித்தார்..*_ உடனே அவர் சிற்பியிடம், *”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி இரு சிலைகள் வைப்பார்கள்?* *_இல்லை.. இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?”_* என்று சிற்பியிடம் கேட்டார்.. சிற்பி சிரித்துக்கொண்டே, _*“இல்லை ஐயா.. கீழே கிடக்கும் சிலையில் பிழை உள்ளது..”*_ என்றார்.. அவர் ஆச்சரியத்துடன், _*"என்ன சொல்றீங்க.. மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை.. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!"*_ எனக் கேட்டார்.. _*"அந்த சிலையின் இடது காதில் சின்ன கீறல் இருக்கிறது.. பாருங்கள்"*_ என்றார் சிற்பி.. _*“ஆமாம்!. அது சரி.. இந்த சிலையை கோவிலில் எங்கே வைக்கப் போகிறார்கள்?”*_ என்று கேட்டார்.. _*“இது கோவில் கோபுரத்தில், இருபது அடி உயரத்தில் வரும் சிலை!”*_ என கையை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி..

அவன்-இவன்..

ஒரு ஊரில் *அவன்-இவன்* என இரு நண்பர்கள் இருந்தார்கள்.. _அதில் அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தைக் கொண்டவன்.._ _அவனை இவன் மாற்ற எண்ணி.._ _அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான் இவன்.._ *நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ..? அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும்* என்றான் இவன்.. அவனும் அப்படியே செய்தான்.. *முதல் நாள் அவன் 35 ஆணிகளை* அடித்தான்.. *மறு நாள் 30* _என்று இப்படியாக குறைந்துகொண்டே வந்தது.._ *_சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான்.._* அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. *_அதை நண்பன் பார்த்துப் பெருமைப்பட்டான்.._* அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட இவன், *அவனிடம் அடித்த ஆணிகளை எல்லாம் பிடுங்கச் சொன்னான்..* அவனும் அப்படியேச் செய்தான்.. _அதை பார்த்த இவன் அவனிடம் சொன்னான்.._ *நண்பனே.. நீ நான் சொன்னபடியே நீ அடித்த எல்லா ஆணிகளையும் பிடிங்கிவிட்டாய்..* ஆனால் *ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார்.. இந்த சுவர் முன் இருந்த மாதிரி இல்லை.. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன..* *அது போலத் தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவ

வார்த்தைகளில் இல்லை வெற்றி..

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. "இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!" மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும். இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள். ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’ இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம். ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாம

TODAY'S THOUGHT..

அற்புதமான வண்ணங்களில் அறிய சிறகுகள் கொண்ட அழகான சிறுகுருவிக்கு ஒரு கனவு வந்தது.. _கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.._ _இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.._ _*வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது..*_ _எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.._ _அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.._ _ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.._ _அது பறந்து போகும் போது ஒரு காகத்தை பார்த்தது.._ காகத்திடம் குருவி வழி கேட்டது.. *“எனக்கு முழு விபரம் தெரியாது.. தெரிந்த வரை சொல்கிறேன்..* *அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் உள்ள அழகான இறகு ஒன்றைத் தர வேண்டும்”* என்றது காகம்..  _*ஒரேயோரு இறகுதானே என்று குருவியும் சரி என்றது..*_ குருவி காகம் சொன்ன வழியில் பறந்து சென்றது.. _குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,_ அந்த வழியே ஒரு கிளி வந்தது.. கிளியிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, *“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  என

பக்கோடா..

ஊரையே AC பண்ணியது போல் ' சில் ' லென்றிருந்தது. Officeல் எனக்கு வேலையே ஓடவில்லை. இந்தக் குளிருக்கும் மழைக்கும் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் degree coffee யுடன்... நினைக்கும் போதே மனம் பரவச நிலையில். உடனடியாக permission apply பண்ணி மழையைப் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி விரைந்தேன். மனமெங்கும் அல்பத்தனமாய் " பக்கோடா with filter coffee "  stimulate பண்ணிக் கொண்டிருக்க.... எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே புரியாமல் மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்... வந்ததே கோபம் அவளுக்கு...... " என்ன நினைச்சுட்டுருக்கீங்க... கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் coffeeயாம்...அதல்லாம் ஒரு மண்ணும் முடியாது... சொல்லிட்டேன்..." எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்.... சட்டென்று அம்மா ஞாபகம் வந்தது. ஏமாந்து போனபின் அம்மா ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது... அம்மாவும், அப்பாவும் பக்கத்துத் தெருவில் தான் "தனிக்குடித்தனம்" வசிக்கின்றனர். அவர்களால் எங்களுடனும், எங

படித்ததில் பிடித்தது..

அமெரிக்காவில், ஒருநாள் நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.  எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.* *தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.* *அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.* *ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான்.  அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீ

TODAY'S THOUGHT..

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதிய