Skip to main content

பக்கோடா..

ஊரையே AC பண்ணியது போல்
' சில் ' லென்றிருந்தது. Officeல் எனக்கு வேலையே ஓடவில்லை. இந்தக் குளிருக்கும் மழைக்கும் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் degree coffee யுடன்...
நினைக்கும் போதே மனம் பரவச நிலையில்.

உடனடியாக permission apply பண்ணி மழையைப் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி விரைந்தேன். மனமெங்கும் அல்பத்தனமாய் " பக்கோடா with filter coffee "  stimulate பண்ணிக் கொண்டிருக்க....

எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே புரியாமல் மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்...

வந்ததே கோபம் அவளுக்கு......
" என்ன நினைச்சுட்டுருக்கீங்க...
கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் coffeeயாம்...அதல்லாம்
ஒரு மண்ணும் முடியாது... சொல்லிட்டேன்..."

எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்....

சட்டென்று அம்மா ஞாபகம் வந்தது.
ஏமாந்து போனபின் அம்மா ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை
ஏற்படுத்தியது...

அம்மாவும், அப்பாவும் பக்கத்துத் தெருவில் தான் "தனிக்குடித்தனம்"
வசிக்கின்றனர். அவர்களால் எங்களுடனும், எங்களால் அவர்களுடனும் adjust செய்து இருக்க முடியாமல் போனதால் அம்மாவும் அப்பாவும் சுய மரியாதையுடன் தனியே வசிக்கின்றனர்.

அம்மாவைப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அப்பாவின் கெஞ்சல் குரல் கேட்டது.

அப்பாவுக்கு "ரவா உப்புமா " ரொம்ப பிடிக்கும். அதைத்தான்
அம்மாவிடம் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்.

நச்சரிப்பு என்பது அம்மா வின் பாஷை. உண்மையில் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எனக்கு என் மனைவியிடம் என்ன திட்டு விழுந்ததோ
" Same blood " அப்பாவின் காதுகளில்...

கூடுதலாக வயதையும் சுட்டிக் காட்டி வாயை அடக்கச் சொல்லி semma dose....

நான் உள்ளே நுழைந்ததும் இருவரின் முகங்களும் மலர்ச்சியில்....
" என்னப்பா நீ மட்டும் வந்துருக்கே.....பேரனை பார்த்து நாளாச்சுடா... ஏன் கூட்டிண்டுவரல்ல ?

" அம்மா, அவனுக்கு இந்த மழைலயும் spl class , இருக்கும்மா " என்று சமாளித்தேன்.

அது பொய்யென்று அம்மாக்குத் தெரிந்தாலும் சொன்னது நானென்பதால் கண்டுகொள்ளவில்லை
" சரி, சரி உட்காரு. அப்பாட்ட பேசிட்டுரு..
இப்ப கொஞ்ச நேரத்தில உனக்குப் பிடித்த பக்கோடா செஞ்சு தரேன்..."

அப்பா முகத்தில் சின்னதாய் ஏமாற்றம் தெரிந்தாலும் எனக்காக காட்டிக் கொள்ளாமல் வெறுமையாய் சிரித்தார். பாவமாயிருந்தது..‌..

" அம்மா, எனக்கு பக்கோடா வேண்டாம்,
உன் கைப் பக்குவத்தில்
இன்னிக்கு " ரவா உப்புமா " சாப்டணும் போல இருக்கு..."

ஃ" அவ்ளோதானேஃ, இதோ பத்தே நிமிஷம்"
அப்பா வின் முகத்தில் என்னைப்பார்த்து சிரிப்பதில் ஒரு சின்ன நன்றி உணர்சசி எனக்குத் தென் பட்டது.

என்னுடன் சேர்ந்து ரவா உப்புமாவை ஆசை யாக
சாப்பிட்ட அப்பா, நான் அடைந்த பக்கோடா பரவசத்தை " உப்புமா பரவசமாக அனுபவித்தார்...

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்.....

!!!!!!???????????????
மனைவி என் மகனுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி யைப் ஆவலாய் செய்து கொண்டிருந்தாள்.....

எனக்காக செய்ய முடியாத பக்கோடா மகனுக்கு பஜ்ஜி யாக
செய்யப் பட்டுக்கொண்டிருந்தது.

நீதி.  ;
நம் நாட்டுப் பெண்கள்
மிகச் சிறந்த " தாய்மார்கள் "

மனைவிகளல்ல !?

மிகச் சிறந்த சகோதரிகள்.......

மனைவிகளல்ல.......

விதிவிலக்குகள் இருக்கலாம்...என்னைத்
தாய்மார்கள் வைய வேண்டாம்.....

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. ano sis gud mng what a today thought!thoutht for the day poduvathil ungalai minjuvathil aalilai sis thank u sis..

    ReplyDelete
  3. Good morning, sister and friends.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..