Skip to main content

Posts

Showing posts from October, 2020

தடைகள்..

 ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம்  “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. "நிறுத்துவதற்கு" “வேகத்தைக் குறைப்பதற்கு" “மோதலைத் தவிர்ப்பதற்கு " "மெதுவாக செல்வதற்கு" "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்த

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல்.

    அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  List of candidates who have been permanently debarred for the reason of tampering of confidential official records (i.e., OMR Answer Sheets), relating to the written Examination held on 16.09.2017 for the Recruitment to the Posts of Direct Recruitment of Lecturers (Engineering / Non- Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-2018 (Notification No. 04/ 2017 Dated: 16.06.2017) List of candidates who have been permanently debarred - Download here...

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..

  எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள். ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்\" என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..... ஓர் கண்ணோட்டம்..... ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்...... தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது. பொறுமையாக இதைப்படியுங்கள். கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார். அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது. கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது. ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது\" என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார். அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது. ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார். அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்\" என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது. அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்

TRB - தேர்வில் முறைகேடு செய்த 196 பேர் பயோடேட்டா வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

    அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான போது, தேர்வை சரியாக எழுதாத, 196 பேர் தேர்ச்சி பட்டியலில் முன்னிலை பெற்றனர். இதுகுறித்து, தேர்வர்கள் பலர் சந்தேகம் எழுப்பியதுடன், அவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் விபரங்களை திரட்டியதில், 196 பேரும், பல லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் புகார் அளித்தது. விசாரணையில், கணினி ஆப்பரேட்டர் வழியாக, மதிப்பெண்களை மட்டும் கூடுதலாக பதிவு செய்து, மோசடி செய்தது தெரியவந்தது.இந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், புதிதாக தேர்வை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட், 196 பேர், வ

காலி படகு..

*கோபம் வேண்டாமே..!!* ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்.  அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார்.  அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது.  அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன்.  மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது.  அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது.  அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன்.  அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன்

Flash News : TRB - PET Provisional Selection List Published!

  TRB - உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வர்கள் தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு. Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012 to 2016 - PET Provisional Selection List ... Ineligible List - View here... Cutoff - View here... Provisional Selection List               The Board had issued notification No.5/2017 dated 26/07/2017 for the Direct Recruitment of Special Teachers. As per the said notification Board conducted written competitive examination on 23/09/2017 and exam result were published on 14/06/2018. The Board conducted certificate verification on 13/08/2018 and published the provisional selection list for the notified vacancies on 12/10/2018.              After the publication of result, some of the candidates filed writ petitions before the Hon’ble High court to consider the qualification such as CPED,DPED as eligible one for the said recruitment of Physical Education Teachers The Hon’ble High court of Madras in W.A.No.3812 of 2019

படித்ததில் பிடித்தது..

 இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!  இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..  இழந்தது எவை என இறைவன் கேட்டான்.. பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்.. பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்? கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்.. கோலம் மாறி அழகையும் இழந்தேன்.. வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்.. எதை என்று சொல்வேன் நான்.. இறைவன் கேட்கையில்? எதையெல்லாம் இழந்தேனோ  அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.  அழகாகச் சிரித்தான் இறைவன். ”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்".. "உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்".. "உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்".. "நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..  சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல.. தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..  திகைத்தேன்!  இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்.. வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்.. இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்.. இறைவன் மறைந்தான்..  

3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் திட்டம் - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

 

தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்!

    ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும்  உடற்கல்வி ஆசிரியர்கள். அரசு விரைந்து பணிநியமனம் செய்து 663 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை காத்திட கோரிக்கை. Puthiyathalaimurai Video Link 

நம் வாழ்வில் நிலையானது எது?

உங்கள் ஊருக்கு பெருமை சேர்ப்பது எது என்று சிலரிடம் கேட்டால் உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் தான் என்பார்கள் பிறப்பதற்கே முக்தி உடைய திருவாரூர்க்காரர்கள். நெற்களஞ்சியமிக்க தஞ்சாவூர்க்காரர்களை கேட்டால் இராஜராஜ சோழன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் தான் சிறப்பு என்பார்கள்.  தருமமிகு சென்னைவாசிகளை கேட்டால், உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான மெரீனா கடற்கரையைக் காட்டுவார்கள்.  கோவை வாசிகளை கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு ஈடு ஏது அதுதான் எங்கள் ஊருக்கு பெருமை சேர்ப்பது என்பார்கள். இப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும். சரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது? யாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்?  இதற்கு ஒரு வழி இருக்கிறது. உலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில் மிக சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை எழுதிய வள்ளுவரையே கேட்போம். வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்! "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்கிறார். நேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த உலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார்

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: குழப்பம் தீர்க்குமா அரசு?

    அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை எந்த வயதினரும் எழுதலாம் எனும்போது அதில் தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்கள் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பதுதான் குழப்பத்தின் உச்சம். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1, 66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள். இன்னொரு பக்கம் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள். இன்னும் ச

கடவுள் கணக்கு..

 நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும். நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம்.  அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து. நேற்று வரை! சிறு கதை ஒன்று எனக்கு ஒரு தெளிவினைக் கொடுத்தது.. ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில்  ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரி

இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்!

    இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியதால் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனிடையே வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்கதர்கள் இன்றி நடைபெற்றது. பிரமோற்சவம் சனிக்கிழமை முடிவுற்றது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் அரசின் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு: குழப்பமானநிலையில் தேர்வுத்துறை

  பொதுத்தேர்வு நடத்த 6 மாதங்களுக்கு முன்பே பணிகளை துவக்க வேண்டிய நிலையில் தேர்வுத்துறைக்கு முறையான  ஆலோசனைகளோ வழிகாட்டுதல்களோ அரசிடமிருந்து இதுவரை  வராத நிலையில் தேர்வுத்துறை குழப்பமான நிலையில் உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு  சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒரு புறம் கொரோனா பரவல் இருந்தாலும்  10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பது பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதம் ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமோ அல்லது அதற்கு  பிறகு திறக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுதேர்தலுக்கு பிறகு  ஜூன், ஜூலை மாதத்தில் தேர்வினை நடத்த வேண்டிய சூழல

TODAY'S THOUGHT..

 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம்.. \"என்ன நடந்தது?\" \"ஏன் சிறுத்தை ஓடவில்லை?\" என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பும், பின்பும் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு சரிவு: மருத்துவ கல்வி இயக்குனரக தகவலில் அதிர்ச்சி

    ‘நீட்’ தேர்வு அமல்படுத்திய முன்பும், பின்பும் இரண்டாண்டு கால இடைவெளியில் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது. இதன் விபரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உருவானது. மேலும், 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவானது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக தனியார் நீட் கோச்சிங் மையங்களில் பயின்ற மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டி, ஓராண்டு படித்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலையும் நடக்கிறது. அதனால், நீட் தேர்வில

ஒரு உண்மைக்கதை..

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்... அப்போது அவர் எதிரில் உடுத்த உடை கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க.. சுற்றுமுற்றும் பார்க்கிறார்.. உடனே அவர் தன் இடுப்பில் கட்டி  இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு  வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம்  ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்.. இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்.. அங்கே பழைய ஜரிகை வியாபாரம்  செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்..  வணிகரும்.. ஆஹா..  இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே..  சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்.. அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அர

ஜனவரி மாதம் ஒரு முக்கிய அறிவிப்பு வரும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

     

TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    நீட் விவகாரத்தில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தெலங்கானா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர், ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் உதவிகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் இழப்புகள் ஏற்படும்போது நாம் உதவி வருகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 7 ஆண்டு காலம் மட்டுமே செல்லுபடியாகும். அதை ஆயுட்காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ், ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும். நீட் தேர்வு விவகாரத்தில், தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்'' என்று அமைச்சர் செங்கோட்டை