அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான போது, தேர்வை சரியாக எழுதாத, 196 பேர் தேர்ச்சி பட்டியலில் முன்னிலை பெற்றனர். இதுகுறித்து, தேர்வர்கள் பலர் சந்தேகம் எழுப்பியதுடன், அவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் விபரங்களை திரட்டியதில், 196 பேரும், பல லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் புகார் அளித்தது. விசாரணையில், கணினி ஆப்பரேட்டர் வழியாக, மதிப்பெண்களை மட்டும் கூடுதலாக பதிவு செய்து, மோசடி செய்தது தெரியவந்தது.இந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், புதிதாக தேர்வை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட், 196 பேர், வாழ்நாள் முழுதும் அரசு பணிக்கான தேர்வு எழுத, தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 196 பேரின் பெயர், முகவரி, கல்வி தகுதி, ஜாதி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அவர்களில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்; மற்றவர்கள் கலை, அறிவியல் படித்தவர்கள். மொத்தம், 196 பேரில், 58 பேர் பெண்கள்.தடை செய்யப்பட்டவர்களின் முகவரிகள் அடிப்படையிலான பட்டியலில், மதுரை, துாத்துக்குடி, தென்காசி, செங்கல்பட்டு, நீலகிரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சேலம், கோவை, திருச்சி, அரியலுார், திண்டுக்கல், தேனி, சென்னை, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
94 நபர் பாலிடெக்னிக் முறைகேட்டில ஈடுபட்ட கேண்டிடேட் பிசி பிரிவினர்கள் இதேபோன்றுதான் முதுகலை வேதியியல் தேர்வுப் பட்டியலும் முறைகேடாக 31% பொதுப்பிரிவு பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது இதுதான் நீதியரசர் கண்டித்து இது இட ஒதுக்கீட்டிற்கு தவறானது பொதுப்பிரிவில் அனைவரும் இடம்பெறவேண்டும் தகுதி தகுதி அடிப்படையில் அப்பட்டமாக தெரிகிறது டிஆர்பி போட்டி முறைகேடு இதற்கு மூலகாரணமாக உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும் எய்தவன் எங்கோ இருக்கிறார் முதலில் அந்த நபர்களை களை எடுக்க வேண்டும் இதுதான் ஊழலுக்கு எதிரான செயல்
ReplyDeleteயோவ் ஏத்தன்ன தடவ சொல்றது இங்க வந்து பதிவிடாதீர். கோர்ட்டுக்கு போய் வழக்குப் போடு. கோர்ட்டின் காலத்தை விரயம் பண்ணியதாக அபராதம் விதிப்பாங்க கட்டிட்டுவா..முட்டாள்.. நேர்மையானவனா இருந்தா வழக்குத்தொடு. நாய்தான் கடிக்காதுஆனா சந்துசந்தாப் போய் குரைக்கும்...வேதியல் பாடத்திற்கு Bc பிரிவினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர்18ஆம் தேதி இறுதிப் தீர்ப்பு வருது wait. & see
Deleteஇதுல மட்டும் இல்ல எல்லாத்துலயும் முறைகேடு தான்
ReplyDelete